For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ரயிலில் அடைத்துச் செல்லப்பட்ட அத்தனை குழந்தைகளும் என்ன ஆனார்கள் தெரியுமா?

  |

  1939 ஆம் ஆண்டு சரியாக லண்டனில் குண்டு விழுவதற்கு ஒரு வருடம் முன்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் இங்கே மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்பதை யூகித்திருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது எதிரி நாட்டுப் படையினரின் அசைவுகளை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருந்ததால் இவை உணர முடிந்தது.

  போர்களத்தில் போரிடும் வீரர்கள் மரணிப்பதை விட நாட்டில் வசிக்கிற அப்பாவி பொதுமக்களும் கொத்து கொத்தாய் கொல்லப்படுவது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல அதை விட இது போன்ற நேரங்களில் அதிகப்படியான குழந்தைகள் இறப்பது சகஜமாக இருந்திருக்கிறது. இதை தடுக்க வேண்டும் என்று நினைத்தது பிரிட்டன் அரசு. இதற்காக அவர்கள் நடத்திய ஆப்ரேசன் பெயர் தான் ஆப்ரேசன் பைடு பைப்பர்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   #1

  #1

  இந்த நிகழ்வின் போது ஏறத்தாழ ஒரு லட்சத்த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்டு கோடிக்கணக்கான குழந்தைகள் லண்டடினிலிருந்து வெளியேற்றப்பட்டு ஆங்கில மக்கள் வாழும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இப்படி கொண்டு செல்லப்படும் போது ஒவ்வொரு குழந்தையும் அதன் கழுத்தி அந்த குழந்தையின் பெயர் பொரித்த அட்டையை கழுத்தில் தொங்க விட்டிருக்கிறர்கள்.

  உலகப் போரின் போது லண்டனில் சுமார் நான்கு மில்லியன் மக்கள் வரை கொல்லப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டது. ஒரு வேளை அத்தனை பேரும் கொல்லப்பட்டால் அவர்களை புதைக்க கூட போதுமான இடம் இருக்காது. மொத்தமாக ஒரேயிடத்தில் குவித்து புதைக்கப்படுவார்கள்.

  Image Courtesy

  #2

  #2

  இப்படியான ஒரு மரணம் வேண்டுமா? இதிலிருந்து தப்பிக்க உங்கள் குழந்தைகளை அவர்களின் ஆசிரியர்களுடன் அனுப்பி வைத்திடுங்கள் உங்கள் குழந்தைகள் பிழைத்துக் கொள்ளும் என்று அரசாங்கம் மக்களை வலியுறுத்தியது.

  தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள பெற்றோர்கள் லண்டனிலேயே வேலை தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்ததினால் குழந்தைகளை மட்டுமாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஆசிரியர்களுடன் அனுப்ப முன்வந்தனர் .

  Image Courtesy

  #3

  #3

  குழந்தைகள் யாருக்குமே எங்கே அழைத்துச் செல்லப்படுகிறோம் எதனால் நம்மை பெற்றோர்களிடமிருந்து பிரித்து அழைத்துச் செல்கிறார்கள்.

  எப்போது திரும்புவோம் திரும்பும் போது இதே நிலைமை நீடிக்குமா என்றெல்லாம் அந்த குழந்தைகளுக்கு தெரியவில்லை. பல குழந்தைகள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று அழுது அடம்பிடித்தனர்.

  வலுக்கட்டாயமாக பெற்றோர்கள் அனுப்பி வைத்த சம்பவங்களும் நடந்திருக்கிறது.

  Image Courtesy

  #4

  #4

  ஒட்டு மொத்த லண்டனிலிருந்து முதலில் குழந்தைகளை மட்டும் இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதாவது குழந்தைகளை எல்லாம் ரயிலில் ஏற்றி குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும் அந்த நாள் மிகவும் உணர்ச்சிப்பெருக்காக காணப்பட்டது. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையை கட்டியணைத்து முத்தம் கொடுத்து வழியனுப்பினார்கள்.

  அவர்கள் லண்டனுக்கு திரும்பும் போது நாம் உயிருடன் இருப்போமா என்பது கேள்விக்குறி தான் என்ற அந்த ஒற்றை சிந்தனையே பெற்றோர்களை கதிகலங்க வைத்திருந்தது.

  Image Courtesy

  #5

  #5

  போர் நடக்கப்போகிறது. எதிர் நாட்டினர் இங்கே குண்டுவெடிப்புகள் நிகழ்த்த வாய்ப்புண்டு அதில் நம் அம்மா அப்பா எல்லாம் உடல் சிதறி பலியாக வாய்ப்புண்டு போன்ற எந்த தகவலையும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டாம். சில நாட்கள் சுற்றுலா சென்று விட்டு திரும்பி விடுவோம்.

  இது அரசாங்கத்தின் உத்தரவு எல்லாரும் குழந்தைகளை இந்த சுற்றுலாவில் பங்கேற்க செய்ய வேண்டும். சுற்றுலா முடிந்ததும் திரும்ப வந்து விடலாம் என்று மட்டும் சொல்லி அனுப்புங்கள் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  Image Courtesy

  #6

  #6

  பெற்றோரை விட்டு பிரிகிறோம் என்பதைத் தவிர அந்த குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இருக்க வில்லை. ட்ரைன் கிளம்பிய சில மணி நேரங்களில் குழந்தைகள் சகஜமானார்கள் ஆடிப்பாடி மகிழ ஆரம்பித்தார்கள்.

  இந்த பயணத்தை தவிர சில பணக்கார வீட்டு குழந்தைகள் தனியாக தங்களது வெளியூர்களில் தங்கியிருக்கும் உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். சிலர் பணம் கட்டி வெளியூரில் இருக்கக்கூடிய தங்கும் வசதியுடனான பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.

  Image Courtesy

  #7

  #7

  பணக்காரர்களுக்கு இது போன்ற வசதிகள் இருந்தது ஆனால் ஏழைகளுக்கு? அதனால் தான் அரசாங்கமே குழந்தைகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முன் வந்தது. பெற்றோருக்கு அரசாங்க எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் என்று நம்பினார்கள்.

  ஆங்கிலேயர் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் குழந்தைகளை தங்க வைக்கப்படுவார்கள் என்ற தகவல் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இதைத் தவிர குழந்தைகள் அழைத்துச் செல்லக்கூடிய இடம் குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை.

  Image Courtesy

  #8

  #8

  குழந்தைகள் எங்கேயிருக்கிறார்கள் என்பது தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகள் அங்கே சென்று சேர்ந்தவுடன் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும். அவை இரண்டு நாட்களிலோ அல்லது நான்கு நாட்களிலோ பெற்றோரின் கைகளில் கிடைத்த பிறகு தான் குழந்தைகள் இருக்கிற இடத்தை பெற்றோர் அறிந்து கொள்ள முடியும்.

  நீண்ட பயணத்திற்கு பிறகு ஒரு டவுனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் குழந்தைகள். அங்கே மிகப்பெரிய சர்ச் ஒன்று இருந்தது. சர்ச் சுவற்றை ஒட்டியபடி எல்லாரும் வரிசையாக நில்லுங்கள் என்று பணிக்கப்பட்டார்கள். எல்லா குழந்தைகளும் வரிசையாக நின்றன.... அந்த சர்ச்சில் இருந்த மதர் ஒருவர் வரிசையாக ஒவ்வொரு குழந்தையாக பார்த்துக் கொண்டே வந்தார்கள். அவர்களின் முக அடையாளம், அங்க அடையாளங்களை வைத்து இதை எடுத்துக் கொள்கிறேன் இது வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே சென்றார்.

  Image Courtesy

   #9

  #9

  1945 வரை இரண்டாம் உலகப்போர் நீண்டது. சுமார் ஆறு வருடங்கள் வேறு ஊரிலிருந்து திரும்பிய குழந்தைகள் முற்றிலுமாக மாறியவர்களாய் இருந்தார்கள். ஆறு வருடங்கள் வரை அந்த பெயர் தாங்கிய அட்டை பத்திரமாக இருக்குமா என்ன அப்படியே இருந்தாலும் அந்த அட்டையை வைத்துக் கொண்டு பெற்றோரை எப்படி கண்டுபிடிப்பது .

  அரசாங்க உத்தரவுப்படி ஒவ்வொரு குடும்பமும் கண்டிப்பாக இந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்கக் வேண்டும். சிலர் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். சிலர் பெரும் எரிச்சலுடன் சண்டையிட்டு பின் ஒப்புக் கொண்டார்கள். விருப்பமின்றி ஏற்றுக் கொண்ட குழந்தைகள் அங்கே நிறைய கொடுமைகளை சந்தித்தார்கள்.

  Image Courtesy

  #10

  #10

  அரசாங்கம் இந்த குழந்தைகளுக்காகவென்றே தனியாக ரேசன் அட்டை வழங்கியிருந்தது. தத்தெடுத்து கொண்டவர்கள் குழந்தைகளிடமிருந்து ரேசன் அட்டையை பிடுங்கி அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். குழந்தைகளை பட்டினிப்போடுவதும், அடித்து சித்தரவதை செய்தார்கள்.

  ஒரு சில குழந்தைகளுக்கு சென்ற இடம் நல்லபடியாக அமைந்தது. குழந்தையில்லா தம்பதிகள் தத்தெடுத்துக் கொண்ட போது அவர்கள் இந்த குழந்தையின் மீது அதீத பாசத்தை காட்டினார்கள். சிலர் குழந்தையை தன்னுடைய குழந்தை போல கவனித்துக் கொண்டார்கள்.

  Image Courtesy

  #11

  #11

  1944 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் மீண்டும் தங்கள் பிறந்த ஊருக்கு திரும்ப அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. அப்போது போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதால் இந்த முடிவில் குழப்பம் நிலவியது.

  போர் முடிவுக்கு வராமல் எங்கள் குழந்தைகளை இங்கே அழைத்து வரக்கூடாது. அவர்களை இப்போதே அழைத்து வந்தால் ஒருவேலை முன்னர் சொன்னது போல என் குழந்தை எதிரி நாட்டினரால் கொல்லப்படலாம். போர் முடிவுக்கு வந்த பிறகு தான் குழந்தைகளை அழைத்து வர வேண்டும் என்று போராட ஆரம்பித்தார்கள் பெற்றோர்கள்.

  Image Courtesy

  #12

  #12

  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஆப்ரேட் லண்டன் ரிட்டர்ன் ப்ளான் என்ற திட்டம் மூலமாக குழந்தைகள் மறுபடியும் லண்டன் நகருக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பேச்சுவார்த்தையிலும் போராட்டத்திலுமே நாட்கள் ஓடியது.

  அடுத்த ஆண்டு 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரவே குழந்தைகளை அழைத்து வர பெற்றோர்கள் சம்மதித்தார்கள். மன ரீதியாக, உடல் ரீதியாக குழந்தைகள் நிறையவே மாறியிருந்தார்கள். மிக சிறிய குழந்தைகள் இரண்டு,மூன்று வயதுகளில் இங்கிருந்து அனுப்பப்பட்ட குழந்தைகள் திரும்ப வரும் போது அது தான் தங்களின் வீடு என்று நினைத்துக் கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று அழுது அடம்பிடித்தார்கள். தங்களின் பெற்றோரையே அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.

  Image Courtesy

  #13

  #13

  கொண்டு செல்லப்பட்ட எல்லா குழந்தைகளையும் மீட்டு கொண்டு வந்து விட முடியவில்லை. ஒரு பக்கம் குழந்தைகளை தொடர்பு கொள்ள முடியவில்லை இன்னொரு பக்கம் லண்டனில் வசித்த பெற்றோர்கள் போரில் மாண்டிருந்தார்கள் அல்லது ஊரை விட்டே சென்றிருந்தார்கள். இதனால் அங்காவது அந்த குழந்தை இருக்கட்டும் என்ற நிலை ஏற்பட்டது.

  சுமார் பதினைந்து சதவீத குழந்தைகள் வரை வன்கொடுமைகளை சந்தித்திருந்தார்கள். இருந்தும் பெருவாரியான குழந்தைகள் இதன் மூலம் பலனடைந்திருந்தார்கள்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Interesting Facts About Mass Evacuation Of Children

  Interesting Facts About Mass Evacuation Of Children
  Story first published: Monday, June 25, 2018, 12:32 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more