எந்த நாட்களில் கால பைரவரை வணங்க வேண்டும்?

இந்து கடவுள்களில் மிகவும் உக்கிரமான அதேசமயம் அதிக அருள்புரிய கூடிய ஒரு கடவுள் என்றால் அது காலபைரவர்தான். கால பைரவரை வணங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பெயருக்கேற்றார் போல கால

இந்து கடவுள்களில் மிகவும் உக்கிரமான அதேசமயம் அதிக அருள்புரிய கூடிய ஒரு கடவுள் என்றால் அது காலபைரவர்தான். சிவனின் ருத்ர அம்சமான கால பைரவரை சித்தர்கள் மற்றும் யோகிகள் தீவிரமாக வழிபடுகிறார்கள். கால பைரவ வழிபாடு என்பது இந்தியா முழுவதும் உள்ளது, ஆனால் இடத்திற்கு ஏற்றவாறு சற்று மாறுபடும்.

Kala Bhairava - How to worship Kala Bhairava?

கால பைரவரை வணங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் பெயருக்கேற்றார் போல கால பைரவர் மிகவும் கோபக்கார கடவுளாவர். அதேசமயம் சரியான முறையில் கால பைரவரை வழிபட்டால் சகல செல்வங்களும் வரமாய் கிட்டும். இங்கே கால பைரவரை பற்றியும், அவரை வழிபட வேண்டிய முறைகளை பற்றியும் தெளிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரம்மாவின் கர்வம்

பிரம்மாவின் கர்வம்

பிரம்மதேவருக்கு முதலில் ஐந்து தலைகள் தான் இருந்தது. படைப்பின் கடவுளான பிரம்மா தன் திறமை மீதும், சக்தி மீதும் அதிக கர்வம் கொண்டவர். இதனால் மற்ற தேவர்களையும், கடவுள்களையும் மதிக்கமால் தானே அனைத்திற்கும் கடவுள் என்று மூவுலகமும் சொல்லி வந்தார். இதனால் கவலையுற்ற தேவர்கள் ஈசனிடம் சென்று பிரம்மாவின் இச்செயலை பற்றி கூறி அவருடைய கர்வத்தை அடக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

சிவபெருமானின் ருத்ரம்

சிவபெருமானின் ருத்ரம்

பிரம்மாவின் தான் என்ற கர்வம் சிவபெருமானை கோபம் கொள்ள செய்தது. எனவே தன் ருத்ர அம்சமான கால பைரவராய் மாறி பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையை வெட்டி பிரம்மாவின் கர்வத்தை அடக்கினார் சிவபெருமான். ஆனால் அதனால் சிவபெருமானுக்கு பெரும் பிரச்சினை நேர்ந்தது.

சிவபெருமானுக்கு கிடைத்த தோஷம்

சிவபெருமானுக்கு கிடைத்த தோஷம்

படைப்பின் கடவுளான பிரம்மாவின் தலையை வெட்டியதால் கால பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டது. இதனால் பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடுமையான தவம் மேற்கொண்டார்கால பைரவர். இறுதியாக காசிக்கு சென்று கங்கையில் நீராடி விட்டு தவம் செய்தபோது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. இதனால் கால பைரவர் காசியிலியே இருக்க முடிவெடுத்தார். அதனால்தான் எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் காசிக்கு சென்றால் நீங்கிவிடும் என்கிறார்கள்.

ஏன் கால பைரவரை வணங்க வேண்டும்?

ஏன் கால பைரவரை வணங்க வேண்டும்?

வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் கஷ்டங்களை தீர்க்கும் சக்தி வாய்ந்த கடவுளாக கால பைரவர் இருக்கிறார். கால பைரவரின் அருள் இருந்தால் பலவீனங்களில் இருந்து விடுபட்டு வெற்றியை நோக்கி பயணத்தை தொடங்கலாம். கால பைரவர் உங்கள் இலட்சியத்தை நோக்கி கவனமாக பயணிக்க தெளிவான பார்வையை வழங்குவார். உங்களை சரியான முயற்சிகளை எடுக்க வைத்து உங்கள் கனவுகளை சாதிக்க உறுதுணையாய் இருப்பார். கால பைரவர் உங்களுக்கு அளிப்பது தெளிவான பார்வையும், தேவையான முயற்சியும் இந்த இரண்டு இருந்தால் போதும் நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

கால பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கால பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கால பைரவரை தன்னை முழுமையாக நம்புவர்களுக்கு தன் பூரண அருளை வழங்குவார். இவர் பக்தர்களின் உள்ளத்தை தூய்மையக்குவார். கால பைரவ பூஜை உங்களை ஆன்மீகரீதியாகவும், அறிவுரீதியாகவும் பலம் வாய்ந்தவர்களாக மற்றும். உங்கள் எதிரிகளை தோற்கடித்து எதிரிகள் பயமின்றி வாழ கால பைரவர் ஒரு கவசமாக இருப்பார். கால பைரவ வழிபாடு மகிழ்ச்சியையும், பொருள்வசதியையும் தாரளமாக வழங்கும்.

எப்போது வணங்க வேண்டும்?

எப்போது வணங்க வேண்டும்?

கால பைரவரை வாரத்தின் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நெய் விளக்கேற்றி வழிபடுவது அவரின் அருளை பெற்றுத்தரும். மேலும் வளர்பிறையில் வரும் பிரதோஷத்தன்று விளக்கேற்றி கால பைரவரை வழிப்படுவது அனைத்து நன்மைகளையும் பெற்றுத்தரும். அதிலும் பிரதோஷம் சனிக்கிழமையன்று வந்தால் அந்த நாளை தவற விடாதீர்கள். அன்று கால பைரவரை வழிபடுவது உங்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் பழிக்கச்செய்யும்.

தோஷம் உள்ளவர்கள்

தோஷம் உள்ளவர்கள்

ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் அஷ்டமி அன்றும் திங்கள் கிழமைகளிலும் கால பைரவரை வணங்குவது நல்லது. கால பைரவர் ருத்ர அம்சம் அதனால் அவரை குளிர்விக்க வில்வ இலைகளை கொண்டு கட்டப்பட்ட மாலையை அணிவிக்கலாம். அதேபோல சிவப்பு நிற அரளி பூக்களை கொண்டு வழிபடுவது கால பைரவருக்கு பிடித்த ஒன்று.

கால பைரவ மந்திரம்

கால பைரவ மந்திரம்

கால பைரவ காயத்ரி மந்திரம் -

" ஓம் காலகாலாய வித்மகே

காலதீதாய தீமஹி

தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாதே "

கால பைரவரை நினைத்து பூரண மனதுடன் இந்த மந்திரத்தை கூறிவர நீங்கள் நினைத்தது விரைவில் கைகூடும். அனைவருக்கும் கால பைரவரின் அருள் கிடைக்கட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion