Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
வீட்டில் எந்தெந்த சாமி படங்களை எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும்?
பக்தியுடன் பூஜை அறையை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம். பக்தி என்பது வெறும் வலிமையை மட்டும் தரும் விஷயமல்ல மனநிலையையும் உடல் நிலையையும் சமநிலை படுத்தும் விஷயம். எனவே அப்படிப்பட்ட பக்தி கமழும் பூஜ
இந்திய கலாசாரத்தை பொருத்த வரை பூஜை அறை என்பது வீட்டின் முக்கியமான பகுதியாகும். சுத்தமாக தூய்மையாக வைத்திருக்க வேண்டிய இடமும் கூட. பக்தியுடன் பூஜை அறையை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம்.

பக்தி என்பது வெறும் வலிமையை மட்டும் தரும் விஷயமல்ல மனநிலையையும் உடல் நிலையையும் சமநிலை படுத்தும் விஷயம். எனவே அப்படிப்பட்ட பக்தி கமழும் பூஜை அறையை சரியாக வைத்து வழிபட கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

பூஜை அறை வாஸ்து
பூஜை அறையை முதலில் வாஸ்துப்படி வைப்பது மிகவும் முக்கியம். இதன்படி பூஜை அறை வீட்டின் வடகிழக்கு மூலையில் கட்டப்பட வேண்டும். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் அல்லது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் இருக்கலாம்.

மரத்தால் அமைத்தல்
பூஜை அறையை சந்தன கட்டை மரத்தால் அமைக்க வேண்டும். அதன் மேற்பகுதி கூம்பு வடிவில் கோபுரம் மாதிரி இருக்க வேண்டும். மரத்தின் இயற்கையான நிறத்திலயே பூஜை அறை இருப்பது நல்லது.
மதச்சார்பான புத்தகங்களை, புராணங்களை மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்க வேண்டும்.

எதிர்மறை ஆற்றல்கள்
பூஜை அறை கண்டிப்பாக பாத்ரூமிற்கு அருகிலேயே அல்லது அதற்கு கீழாகவோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் எதிர்மறை ஆற்றல்கள் ஏற்படும். அதே மாதிரி பூஜை அறை மாடி படிக்கட்டிற்கு கீழோ அல்லது படுக்கையறைக்கு அருகிலோ அமைக்க கூடாது.
அதே மாதிரி பூஜை அறையில் கடவுள் விக்ரங்களையும் சரியான முறையில் வைக்க வேண்டும். சரி வாங்க எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சிலைகளை வைக்க விதிகள்
சில கடவுள் விக்ரங்களை வீட்டின் பூஜை அறையில் கிழக்கில் வைத்து மேற்கு திசையை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். இது உங்கள் வீட்டினுள் நேர்மறை ஆற்றல்களை அதிகரித்து தருகிறது.
வைக்க வேண்டிய கடவுள் சிலைகள் :பிரம்மா, விஷ்ணு, மகேஷ், கார்த்திகேயா, இந்திரன், சூர்யா.

கணபதி சிலையை எங்கே வைக்க வேண்டும்?
கணபதி சிலையை வடக்கு தெற்கு நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.
வைக்க வேண்டிய கடவுள் சிலைகள் :கணபதி, துர்கா, ராதை, அம்மன் சிலைகள், குபேரன், பைரவர்.

அனுமான் படம்
அனுமான் படம் அல்லது சிலைகளை அக்னி மூலையான தெற்கு கிழக்கு நோக்கி வைக்க கூடாது. இது நல்ல அடையாளம் கிடையாது.

சிவன்
இந்தியாவில் சிவனை எல்லார் வீடுகளிலும் லிங்கமாகத்தான் வழிபடுவார்கள். சிவன் சிலை என்றால் வடக்கு திசையில் வைத்து வழிபடலாம்.

பொருத்தமான திசை
பொதுவாக கடவுள் சிலைகள் மற்றும் படங்களை வைத்து வழிபட வடகிழக்கு திசைகள் பொருத்தமாக இருக்கும். நன்மைகளும் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
