Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
உடலின் தீக்காயத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் தெரியுமா?
உடலில் ஏற்பட்டிருக்கும் தீக்காயத்தினை எப்படி கணக்கிடுகிறார்கள் தெரியுமா
Recommended Video

குரங்கணி மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒன்பது பேர் வரை உயிரிழந்தார்கள். தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்ட போது அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் பலன் அளிக்காமல் மேலும் மூன்று உயிரிழக்க இந்த தீவிபத்தின் பலி எண்ணிக்கை பதிமூன்றாக உயந்திருக்கிறது. அதோடு இன்னும் சிலர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மனதை உலுக்கு இந்த சோக நிகழ்வு குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கடந்து வருகிறோம். அதில் செய்திகளில் தவறாமல் இடம் பிடித்த விஷயம் 60 சதவீத தீக்காயம் 80 சதவீத தீக்காயம், 100 சதவீத தீக்காயம் என்று சொல்லியிருப்பார்கள்.
பொதுவாக தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு எல்லாமே அவர்கள் உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய தீக்காயங்களின் அளவை பொறுத்து அது எத்தனை சதவீத தீக்காயம் என்பதனை சொல்வார்கள். எப்படி இதனை கணக்கிடுகிறார்கள் என்று தெரியுமா?
எதை வைத்து அந்த சதவீதத்தை வரையறுக்கிறார்கள் என்பதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

#1
தீக்காயத்தினையே முதலில் டிகிரி ஆஃப் பர்ன்ஸ் என்று பிரித்துக் கொள்கிறார்கள். முதலில் ஃபர்ஸ்ட் டிகிரி பர்ன். இவை பெரும்பாலும் சருமத்தின் மேல் பகுதியை மட்டும் தாக்கியிருக்கும். நிறைய எரிச்சல் இருக்கும், மேல் தோல் உரிந்து சருமம் பிங்க் நிறத்தில் காணப்படும் . சிலருக்கு சிவந்து வீங்கியிமிருக்கும்.
பெரும்பாலும் இந்த ஃபர்ஸ்ட் டிகிரி பர்ன் தான் ஏற்படுகிறது.

#2
இது அடுத்த கட்டம், செக்கண்ட் டிகிரி பர்ன்ஸ் இதன் இன்னொரு பெயர் திக்னஸ் பர்ன்ஸ். இது சருமத்தை தாண்டி சற்று ஆழமான காயங்களை உண்டாக்கியிருக்கும். அதீத வலி கொடுக்ககூடியது.
அடர் சிவப்பு நிறத்தில் இவர்களது சருமம் இருக்கும். அதோடு அந்த காயங்களிலிருந்து நீர் மற்றும் ஒரு வித நாற்றம் வெளியேறும்.

#3
மூன்றாவது கட்டம் டீப் பார்சியல் பர்ன்ஸ். இது தான் தர்ட் டிகிரி என்கிறார்கள். இதற்கு கண்டிப்பாக மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம், மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

#4
நான்காவது ஃபுல் திக்னஸ் பர்ன்ஸ். இது மிகவும் தீவிரமானது, மொத்தத்தில் உங்கள் சருமம் முழுவதையும் அழித்திருக்கும் கிட்டத்தட்ட உங்களது நரம்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.
சருமத்தில் உள்ள திசுக்கள் எல்லாம் கருப்பு நிறமாக மாறியிருக்கும். இது தான் கடுமையான பாதிப்பினை உண்டாக்கக்கூடியது

#5
சருமத்தில் உள்ள செல்கள் எல்லாம் முற்றிலுமாக அழிந்திருக்கும் என்பதால் செல்கள் மீண்டும் உற்பத்தியாகி அதனை நார்மலாக்க முடியாது. இதனை நான்காவது டிகிரி பர்ன் என்று சொல்கிறார்கள்.
மொத்ததில் ஆளையே விழுங்கிடும். உங்களது உடல் மொத்தத்தையும் உருக்கியிருக்கும்,சதை,கொழுப்பு,நரம்பு ஆகியவற்றிலும் உள்ளுருப்புகள் கூட பாதிக்கப்பட வாய்ப்புண்டு. சிலருக்கும் எலும்புகள் கூட பாதிக்கப்பட்டிருக்கும்.

#6
தீக்காயம் அடைந்த நபர் உடலில் இந்த நான்கு டிகிரி பர்ன்ஸும் இருக்கலாம். தீப்பற்றிய விதம், அது பரவிய விதம், தீ உடலில் இருந்த நேரம், காப்பாற்றப்பட்ட நேரம், உடனடியாக மீட்கப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு வந்த நேரம் என எல்லாவற்றையும் கணக்கிட வேண்டியது அவசியம்.
தீக்காயம் அடைந்த ஒரு நபருக்கு இந்த நான்கு டிகிரி காயங்களுமே இருக்கலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்று கூட ஏற்பட்டிருக்கலாம்.

#7
காயத்தையும் அதன் தன்மையையும் பொறுத்து தான் காயத்தின் சதவீதம் கணக்கிடப்படுகிறது. இந்த சதவீதத்தை கணக்கிட ‘ரூல் ஆஃப் நயன்' என்பதை பின்பற்றுகிறார்கள்.
இந்த சதவீத கணக்கிடும் போது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வேறுபடுகிறது.

#8
உடலை பல பாகங்களாக முதலில் பிரித்துக் கொள்கிறார்கள். அதனை ஒன்பதால் வகுத்து சதவீதம் கணக்கிடப்படுகிறது.
தலை - 4.5 சதவீதம்
மார்பு பகுதி - 9 சதவீதம்
கைகள் - 9 சதவீதம் (ஒரு கைக்கு 4.5 சதவீதம்)
வயிறு - 9 சதவீதம்
பிறப்புறுப்பு - 1 சதவீதம்
கால்கள் - 9 சதவீதம்(ஒரு காலுக்கு 4.5 சதவீதம்)
இது பெரியவர்களுக்கானது, குழந்தைகளுக்கு கணக்கிடும் அளவு வேறுபடும். குழந்தைகளிலேயே கைக்குழந்தைகள் அல்லது பத்து கிலோவுக்கும் குறைவான எடையுள்ளவர்களை கணக்கிடும் போது இந்த அளவுகள் வேறு படும்.

#9
உள்ளங்கையை கவனிக்க வேண்டும், உள்ளங்கை, குறிப்பாக விரல்களும் சேர்ந்து பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை 0.8 சதவீதமாக சேர்க்கிறார்கள். உள்ளங்கை காயத்தை கொண்டு சிறிய அளவிலான காயமா அல்லது தீவிரமான காயமா என்பது கணக்கிடப்படுகிறது.
உள்ளங்கையில் காயமில்லை அல்லது லேசான காயம் என்றால் அது பதினைந்து சதவீதத்திற்கும் குறைவான காயமாக இருக்கும். உள்ளங்கை கடுமையாக காயம்பட்டிருந்தால் அவர் 85 சதவீதம் அல்லது அதற்கும் மேல் காயம் அடைந்தவராக இருக்கக்கூடும்.

#10
இவற்றை தவிர காயத்தின் சதவீதத்தை கணக்கிட பார்க்லேண்ட் ஃபார்முலாவும் பயன்படுத்துகிறார்கள். காயம்பட்டவர்களின் சிறுநீர் அளவைக் கொண்டு இது கணக்கிடப்படுகிறது, இது சற்று எளிமையானதும் கூட.
இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரம் அல்ல காயம் பட்ட நேரத்திலிருந்து கணக்கிட வேண்டும். அவருக்கு நீராகாரங்கள் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கப்பட்ட அளவு, அவருடைய எடை,காயத்தின் அளவு, பாதிக்கப்பட்ட நபர் சிறுநீர் கழிக்கும் கால இடைவேளி ,அதன் அளவு ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படுகிறது.



Click it and Unblock the Notifications