For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்!

கடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்!

|

சில விஷயங்கள் எல்லாம் நம் வாழ்வில் நடக்கும் என்று நாம் கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால், அவர் நம் வாழ்வில் நடந்து பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

உதாரணமாக சில விஷயங்களை கூற இயலும்... வகுப்பறையில்... இவன் எல்லாம் எங்க பாஸ் ஆக போறான் என்று ஆசிரியர் கருதும் மாணவன், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்று ஆச்சரியம் அளித்திருப்பான். எப்படியும் தோற்றுவிடுவோம் என்று கருதப்படும் கிரிக்கெட் போட்டியில், கடைசியாக களம்கண்ட பந்துவீச்சாளர் பொறுமையாக விளையாடி டெஸ்ட் போட்டியை டிரா அல்லது வெற்றிபெற செய்திருப்பார்.

Future Predictions That Happened In The Last 2 Centuries And Were Completely Wrong

Cover Image Source: ancient-origins

இப்படி நாம் நினைப்பவை எல்லாம் நினைத்தப்படியே நடப்பதில்லை. இது அறிவியல் கண்டுப்பிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்தும் பொருந்தும். இதெல்லாம் சாத்தியமே இல்லை என கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கணிக்கப்பட்ட சில விஷயங்கள்.. இன்று அசுர வளர்ச்சி அடைந்து மக்கள் தினமும் பயன்பாட்டில் கண்டு வரும் விசயமாக இருக்கிறது...

வாங்க! அவை என்னென்ன என்று காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1800ல்

1800ல்

டாக்டர். டயோநிசிஸ், இயற்கை தத்துவம் மற்றும் வானியல், பல்கலைகழக கல்லூரி, லண்டன்.

வேகமாக பயணிக்கும் ரயில்கள் சாத்தியமற்றது. மேலும், இது பயணிகளை சுவாசிக்க முடியாதபடி செய்யும். மேலும், மூச்சுத்திணறல் ஏற்படுத்தி அவர்கள் மரணிக்க செய்யும், என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.

1859ல்

1859ல்

எட்வின் எல்.ட்ராக்கின் உதவியாளர்கள், பூமியில் துளையிட்டு ஆயில் எடுக்க முடியுமா என்பதற்கான கருத்தாய்வு நடந்துக் கொண்டிருந்த போது...

ஆயிலை பூமியில் துளையிட்டு எடுப்பதா? பூமியில் ஓட்டைப் போட்டு ஆயிலை தேட முடியுமா? இது கிறுக்குத்தனமான யோசனையாக இருக்கிறது என்ற கருத்தினை பதிவு செய்தனர்.

1902ல்

1902ல்

சைமன் நியூகாம்ப் கனடா - அமெரிக்க வானிலை மற்றும் கணித அறிஞர். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 18 மாதங்களுக்கு முன்...

காற்றினை விட எடை அதிகமான கருவிகள் பறப்பது பிராக்டிலாக முடியாது, இது முற்றிலும் சாத்தியமற்றது, என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார்.

1903ல்

1903ல்

மிச்சிகன் சேவிங்க்ஸ் வங்கி பிரசிடென்ட், ஹென்றி போர்டின் வழக்கறிஞர், போர்ட் மோட்டார் கம்பெனியில் முதலீடு செய்ய வேண்டாம் என்று கூறியவர்.

குதிரை தான் இருக்கிறதே. தானியங்கியாக வாகனம் ஓடுவதெல்லாம் நாவல்களில் மட்டுமே படிக்க முடிக்க முடியும்., என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார்.

1916ல்

1916ல்

சார்லி சாப்ளின், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், ஸ்டுடியோ உரிமையாளர்.

சினிமா என்பது சேமித்து வைக்கப்பட்ட டநாடகம். மக்கள் விரும்புவது எல்லாம், மேடையில் இரத்தமும், சதையுமாக நிகழும் நாடகங்களை தான் என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார்.

1927ல்

1927ல்

எச்.எம் வார்னர், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இணை உரிமையாளர்.,

நடிகர்கள் பேசுவதை எல்லாம் யார் கேட்க விரும்புவார்கள்... என்று பேசும் படத்தை குறித்த ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார்.

1946ல்

1946ல்

டார்லி ஜானுக், 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்

தொலைக்காட்சி பேட்டி எல்லாம் ரொம்ப காலம் நீடிக்காது. மக்கள் அதை வெறுமென கண்டு சோர்வடைந்து விடுவார்கள். யார் தான் அந்த மரப்பெட்டியை இரவு முழுக்க உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள், என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.

1977ல்

1977ல்

கென் ஒல்சன், பிரசிடென்ட், தலைவர், நிறுவனர், டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்பரேஷன்.

ஒரு தனிப்பட்ட நபர் வீட்டில் ஒரு கம்பியூட்டர் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. அவர்கள் ஏன் வீட்டில் கணினியை பயன்படுத்த போகிறார்கள், என்ற கருத்தினை பதிவு செய்திருந்தார்.

1995ல்

1995ல்

கிளிப் பார்ட் ஸ்டால், ஒரு செய்தி கட்டுரையில்...,

ஆன்லைன் டேட்டாபேஸ்கள் எல்லாம் ஒருபோதும் தினசரி நாளேடுகளை ரீப்ளேஸ் செய்துவிட முடியாது..., என்ற கருத்தை பதிவு செய்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Future Predictions That Happened In The Last 2 Centuries And Were Completely Wrong

Future Predictions That Happened In The Last 2 Centuries And Were Completely Wrong
Story first published: Tuesday, August 14, 2018, 12:56 [IST]
Desktop Bottom Promotion