ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொன்ற முதல் பெண்! Wonder Women #13

Posted By:
Subscribe to Boldsky

இந்தியா சுதந்திரம் பெற்று எழுபத்தியோரு வருடங்கள் கடந்து விட்டன. ஆங்கிலேயர்களிடம் அடிமைபட்டுக் கிடந்த இந்தியாவை மீட்டெடுக்க எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள், அதோடு பல்வேறு அடுக்குமுறைகளை எதிர்த்திருக்கிறார்கள்.

அதனையெல்லாம் வரலாற்றுச் சுவடுகளாக நினைவுகூர்ந்து கொண்டேயிருக்கிறோம், ஆனால் சில தியாகிகளை காலப்போக்கில் அப்படியே மறந்து விட்டோம் என்று தான் சொல்லவேண்டும். பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள், குறிப்பாக தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களைத் தான் நாம் கொண்டாடுகிறோம். அதே நேரத்தில் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக நாட்டிற்காக அந்த தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க தங்கள் உயிரையும் மதிக்காமல் சேவை செய்தவர்களை என்றுமே நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

வரலாற்றில் தேடினாலும் கிடைக்காத ஓர் தைரியசாலி பெண்ணைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறீர்கள். உலகமே வியந்து போற்றும் பகத் சிங்கிற்கு உதவியவர் இவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

குஜாராத்தினை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர் அலாகாபத்தில் வசித்து வந்தார்கள். குழந்தை துர்கா தேவி பிறந்த சில ஆண்டுகளிலேயே தாய் இறந்து விடுகிறார். தந்தையும் துறவறம் மேற்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். இதனால் துர்காதேவியை அவரது அத்தை எடுத்து வளர்க்கிறார்.

Image Courtesy

#2

#2

பதினோறு வயதில் பகவதி சரண் வோக்ரா என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார். மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம், அந்த காலத்திலேயே ரயில்வே பணியாளராக இருந்திருக்கிறார். அப்போது நடைப்பெற்ற ஆங்கிலேயே அரசின் கொடுமைகளை கண்டு வெகுண்டெழுந்த பகவதி சரண் சத்தியாகிரகம் உட்பட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுக்கிறார்.

Image Courtesy

#3

#3

1920 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள தேசியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பகத் சிங்,சுக் தேவ்,யஷ்பால் ஆகியோரது நட்பு கிடைக்கிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்குகிறார்கள். பல்வேறு புரட்சிகர போராட்டங்களை முன்னெடுக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

Image Courtesy

#4

#4

இவர்கள் நவுஜவான் பாரத் சபா என்ற அமைப்பை உருவாக்குகிறார்கள். இதன் மூலமாக இளைஞர்கள் பலரையும் சுதந்திர போராட்டத்தில் பங்குபெறச் செய்கிறார்கள்,இந்த அமைப்பில் இணைந்த மாணவர்கள்,இளைஞர்கள் பலரும் லாகூரில் உள்ள துர்காதேவியின் கணவரான பகவதி சரண் வசிக்கும் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள்.

Image Courtesy

#5

#5

இதன் மூலமாக இந்த புரட்சிப்படையில் பங்கேற்கிற வாய்ப்பு துர்கா தேவிக்கும் கிடைக்கிறது. ஹெச் எஸ் ஆர் ஏ எனப்படக்கூடிய Hindustan Socialist Republican Association அமைப்பில் இணைகிறார். இவர்களது ஒரே நோக்கம் பிரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என்பதே.1920களில் மிகத் தீவிரமாக செயல்படுகிறது இந்த அமைப்பு, அதோடு பலரும் கைதும் செய்யப்படுகிறார்கள்.

Image Courtesy

#6

#6

1928 ஆம் ஆண்டு துர்காதேவிக்கு மகன் பிறந்து மூன்றாண்டுகள் ஆகியிருந்தன.அப்போது காலனித்துவ ஆதிக்கத்தினர் இந்த ஹெச் எஸ் ஆர் ஏ உறுப்பினர்களுக்கு எதிராக மிருகத்தனமான அடக்குமுறையை கையாண்டார்கள். அதனை எதிர்கொள்ள கணவனும் மனைவியும் சேர்ந்து ஒரு சதித்திட்டம் தீட்டினார்கள். அதன் படி, யாருக்கும் தெரியாமல் வாடகைக்கு வீடு எடுத்து குண்டுகளை தயாரித்தார்கள்.

Image Courtesy

#7

#7

ஆங்கிலேய அரசுக்கு தெரிந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றாலும் தைரியமாக அந்த செயலில் இறங்கியிருந்தார்கள். அதே ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் கொலகத்தாவில் நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க பகவதி சரண் கிளம்புகிறார்.

Image Courtesy

 #8

#8

அதைத் தொடர்ந்த பகத் சிங், சுக் தேவ் மற்றும் ராஜ்குரு மூன்று பேரும் சேர்ந்து போலீசில் உதவி ஆய்வாளராக இருந்த ஜான் சவுண்டர்ஸ் என்பவரை கொலை செய்கிறார்கள். இதையடுத்து பெரும் கோபம் கொண்ட ஆங்கிலேய அதிகாரிகள் போராட்டக்காரர்கள் மீது லத்தி சார்ஜ் நடத்துகிறார்கள்.

Image Courtesy

#9

#9

ஆங்கில அரசின் கோபம், அதோடு போலீஸும் தங்களை வலை வீசி தேடி வருவதால் துர்காதேவியின் உதவியை நாடுகிறார்கள் பகத் சிங் மற்றும் அவரது சகாக்கள். ஆங்கிலேயர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்கவும் துர்காதேவியின் அடையாளம் தெரியாமல் இருக்கவும் முடியை வெட்டிக்கொள்கிறார் அதோடு ஆங்கிலேய பெண்ணைப் போல உடையணிந்து கொள்கிறார் துர்கா தேவி.

Image Courtesy

#10

#10

இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்டால் துர்காதேவிக்கு மரண தண்டனை கூட கிடைக்கலாம். ஆனாலும் தன்னைப்பற்றியோ தன் உயிரைப் பற்றியோ சிறிதும் கவலைப் படாமல் பகத் சிங்கிற்கு உதவ முன் வந்தார் துர்கா தேவி. அதோடு கணவர் கொல்கத்தாவிற்கு செல்வதற்கு முன்னால் அவசரத்தேவைக்கு என்றால் செலவு செய்ய என்று சொல்லி கொடுத்துவிட்டுச் சென்ற பணம் முழுவதையும் பகத்சிங்கிடம் கொடுத்தார்.

Image Courtesy

#11

#11

அதோடு அந்த போலீஸ் அதிகாரியை கொன்றவர்களை பிடிப்பதற்காகவும், கொலையாளி லாகூரை விட்டு தப்பிச் செல்ல விடாமல் தவிர்க்கவும் லாகூரின் எல்லையில் போலீசார் காவல் காத்தனர். அவர்களிடமிருந்து பகத் சிங்கை தப்பிக்க வைக்க ஆங்கில நாட்டினரைப் போல முடியை வெட்டிக்கொண்டு நவநாகரிக உடையணிந்திருந்த துர்காதேவி பகத் சிங் தன்னுடைய கணவர் என்றும் வியாபாரத்திற்காக வெளியூர் செல்கிறார் என்று பொய் கூறினார்.

Image Courtesy

#12

#12

முன்னதாவது ஆங்கிலேயே அரசு.... அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்ததும் இல்லை என்று சொல்லலாம். ஆனால் தற்போது துர்காதேவி எடுத்திருக்கும் முடிவோ மிகவும் சிக்கலானது. ஒரு பெண், யாரோ ஒருவரை தன்னுடைய கணவர் என்று சொல்வதை இந்த சமூகம் ஒரு போது ஏற்றுக் கொண்டதில்லை.

இதனால் பெண்ணுக்கு மிகப்பெரிய அவப்பெயர் உண்டாவதுடன் அவரைச் சார்ந்த குடும்பத்தாருக்கும் அவமானம் என்கிற நிலையிலும் துர்காதேவி இந்த துணிச்சலான முடிவை எடுத்திருந்தார்.

Image Courtesy

#13

#13

தன் மூன்று வயது குழந்தையை எடுத்துக் கொண்டு பகத் சிங் மற்றும் ராஜகுரு ஆகியோருடன் லக்னோவிற்கு முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணிக்கிறார்கள். ராஜகுரு வேலையாள் என்ற வேஷத்துடன் சென்றார். அதே நேரத்தில் சுக்தேவின் தாய் மற்றும் தங்கை உதவியுடன் சந்திரசேகர ஆசாத்தும் லாகூரிலிருந்து வெளியேறுகிறார். ஒரு சாது போல வேடமணிந்து கொண்டு குடும்பத்துடன் புனித யாத்திரை செல்வதாக ஆங்கிலேய அரசை ஏமாற்றினார்கள்.

Image Courtesy

#14

#14

லக்னோவை வந்தடைந்ததும் துர்காதேவியின் கணவர் பகவதி சரணுக்கு ஒரு தந்தி அனுப்புகிறார். அதில் உங்களுடைய மனைவியுடன் கொல்கத்தாவிற்கு வந்தடைந்து விட்டோம். நான் லக்னோவிற்கும் ராஜகுரு பனாரஸுக்கும் செல்கிறோம் என்று சொல்லியிருந்தார்.மேலும் அங்கு சில வேலைகளை முடித்து விட்டு கொல்கத்தாவிற்கு வந்து விடுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மனைவியின் துணிச்சல் கண்டு பகவதி சரண் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.

Image Courtesy

#15

#15

மூவரும் கொல்கத்தாவிற்கு விரைகிறார்கள். அங்கே இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அப்போது தான் காந்தி, நேரு,சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரது எழுச்சி மிக்க அதே சமயம் உணர்ச்சி மிக்க பேச்சை கேட்கிறார்கள். அதன் தாக்கத்தினால் பெங்காலில் நடைப்பெற்ற பல புரட்சிப் போராட்டங்களிலும் இவர்கள் பங்கேற்கிறார்கள்.

பகத் சிங் என்றாலே எப்போதும் தொப்பி வைத்த ஒரு புகைப்படத்தை தான் நம் நினைவுக்கு வரும் அந்த படம் கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது.

Image Courtesy

 #16

#16

இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரரும், அனுஷிலான் சமிதியின் உறுப்பினருமான ஜோகேஷ் சந்திர சட்டர்ஜி தில்லியில் உள்ள மத்திய சட்டசபையில் குண்டு வீச திட்டமிடுகிறார். பகத் சிங்கும் இன்னொரு வீரர் பட்டுகெஸ்வரும் இணைந்து குண்டு வீசுகிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த ஆங்கிலேய அரசு பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தூக்கிலிட உத்தரவிடுகிறது.

Image Courtesy

#17

#17

போலீசார் தீவிரமாக தேடுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை சுற்றி வளைக்கிறார்கள். லாகூரில் பகவதி சரணும் துர்காதேவியும் குண்டு தயாரித்த வீடு விசாரணை வளையத்திற்குள் வருகிறது. அந்த பரபரப்பான நிலையிலும் வெளியில் தலைமறைவாக இருக்கும் புரட்சியாளர்களுக்கு தகவல்களை கொடுப்பது, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என துணிச்சலாக பணியாற்றுகிறார்.

Image Courtesy

#18

#18

கொஞ்சம் கொஞ்சமாக ஹெச் எஸ் ஆர் ஏ அமைப்பில் ஆட்களின் எண்ணிக்கை குறைகிறது. அந்த நேரத்தில் தானே களத்தில் இறங்குவதாய் சூளுரைத்து இறங்குகிறார் துர்கா தேவி. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பல்வேறு வீரர்களின் எதிரியாக, அவர்களை கொன்று குவித்த கொடூரனாக பார்க்கப்பட்ட பஞ்சாபின் முன்னால் கவர்னராக இருந்த லார்டு ஹெய்லி என்பவரை கொல்ல வேண்டும் என்ற ஆணை வருகிறது.

அதனை தானே நிறைவேற்றுவதாய் கிளம்புகிறார் துர்கா தேவி. ஆனால் அதில் கடுமையான காயங்களுடன் தப்பித்து விடுகிறார் ஹெய்லி.

Image Courtesy

#19

#19

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பகத் சிங்கை காப்பாற்ற பெரும் முயற்சி மேற்கொள்கிறார் துர்காதேவியின் கணவர் பகவதி சரண்,அப்போது தான் அவருக்கு ஒரு யோசனை வருகிறது. சிறை மீது குண்டு வீசினால் என்ன? ரவி நதிக்கரையில் வெடிகுண்டை பரிசோதிக்கும் போது எதிர்பாராதவிதமாக வெடித்து விடுகிறது. இதில் பகவதி சரண் மரணமடைகிறார்.

Image Courtesy

#20

#20

துர்காதேவிக்கு இது நிச்சயம் பேரிழப்பு தான். ஆனால் அதோடு சோர்ந்துவிடவில்லை, போராட்டத்தில் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று குதித்தார். பகத் சிங்கை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளை எல்லாம் கையில் ஏந்திக்கொண்டு ஊர்வலம் ஒன்றினை லாகூரில் நடத்தினார்.

சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்த ஜதிந்திர நாத் தாஸ் மரணத்திற்கு நியாயம் கேட்டு லாகூரிலிருந்து கொல்கத்தாவிற்கு நடைபயணம் மேற்கொண்டார்.

Image Courtesy

#21

#21

அதே ஆண்டு அக்டோபர் எட்டாம் தேதி மும்பையில் தெருவில் நின்று கொண்டிருந்த ஆங்கிலேய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொண்டார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண் கொலையாளியாக, பயங்கரவாதியாக உருவெடுத்தது அப்போது தான்.

இந்த குற்றத்திற்காக அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

Image Courtesy

#22

#22

அதோடு ஓய்ந்துவிடவில்லை. 1939 ஆம் ஆண்டு மெட்ராஸுக்கு வந்து மரியா மாண்ட்டிசரியிடம் பயிற்சி பெற்று லக்னோவில் முதல் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்தை திறக்கிறார். வட இந்தியாவின் முதல் மாண்ட்டிசரி பள்ளி துர்கா தேவியினுடையது தான்.

அதன் பிறகு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு. மரணிக்கும் வரை லக்னோவிலேயே வாழ்ந்தார். இவர் அக்டோபர் பதினைந்து 1999 ஆம் ஆண்டு தன்ன்னுடைய 92வது ஆண்டில் மரணமடைந்தார்.

Image Courtesy

#23

#23

பெரும் ரசிகர் கூட்டத்தை கவர்ந்த ரங் தே பாசந்தி என்ற திரைப்பட்டத்தில் சோஹா அலி கான் ஏற்றுக் கொண்டிருந்த கதாப்பாத்திரம் துர்காதேவியினுடையது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்கள் மத்தியில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் புரட்சிகரமாக செயல்பட்டிருந்தார்கள் என்பதற்கு துர்காதேவி ஒரு சாட்சியம் அதே நேரத்தில் வராலற்றில் அவர் நினைவுகூறப்படாமல் மறைந்து கிடப்பது பெரும் வேதனை.....

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse wonder women
English summary

First Women Who Shot British Police In Freedom Struggle

First Women Who Shot British Police In Freedom Struggle
Story first published: Saturday, March 24, 2018, 17:18 [IST]