Latest Updates
-
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம்
வரலாற்றில் பெண் நிகழ்த்திய கொடூர கொலை!
பிரான்ஸ் நாட்டின் நடந்த மிக கொடுரமான கொலை பற்றியும் அதை நிகழ்த்திய இரண்டு பெண்களைப் பற்றியும் உண்மை சம்பவம்
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஓர் நகரம் தான் லீ மன்ஸ். இங்கே நடைபெறும் கார் ரேஸ் ஏக பிரபலம். இங்கே வருடம் ஒரு முறை 24 மணி நேர தொடர் ரேஸ்கள் எல்லாம் நடக்கும்.
அப்போது பிரான்ஸ் நாட்டின் பிரபலமான நகரங்களின் பட்டியலில் லீ மன்ஸ் ஏழாவது இடத்தில் இருந்துக்கிறது. பாபின் சிஸ்டர்ஸ் எனப்படுகிற சகோதரிகள் பெயர் அடிப்பட்டதிலிருந்து பிரபலமான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துவிட்டது லீ மன்ஸ்.
அப்படி இந்த சகோதரிகள் செய்தது என்ன தெரியுமா? கொடூரமான கொலை. வீட்டு வேலைக்காக சென்ற இவர்கள் இவர்களது வீட்டு முதலாளியையும் அவரது மகளையும் கொன்றிருக்கிறர்கள்.

#1
பாபின் சகோதரிகளின் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. இவர்களின் அம்மா க்ளிமன்ஸ் டேரி மற்றும் அப்பா குஸ்டேவ் பாபின். இந்நிலையில் க்ளிமன்ஸ் அவரது முதலாளியுடன் தவறான உறவில் இருந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் குஸ்டேவ் க்ளிமன்ஸை காதலித்து வந்தார். 1901 ஆம் ஆண்டு க்ளிமன்ஸ் கர்ப்பமானதை தொடர்ந்து குஸ்டேவ் அவரை திருமணம் செய்து கொண்டார். 1902 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எமிலியா என்ற குழந்தை பிறந்தது.

#2
திருமணமாகி குழந்தை பிறந்த பின்னும் க்ளிமன்ஸ் தன் முதலாளியுடன் தொடர்பு வைத்திருப்பாரோ என்ற சந்தேகம் வளர்ந்தது. அதை உறுதி செய்யும் விதமாக க்ளிமன்ஸின் நடவடிக்கை இருந்தது. இதனால் குஸ்டவ் வேறு ஊருக்கு வேலை வாங்கி சென்று விட்டால் க்ளிமன்ஸையும் அழைத்துச் சென்றுவிடலாம் என்று நினைத்திருந்தார் குஸ்டவ்.
இந்த ஊர் லீ மன்ஸை விட்டுச் சென்றால் போதும் என்ற ஒரே நோக்கம் இருந்ததினால் வெளியூரில் மிகத் தீவிரமாக வேலை தேடினார்.

#3
மகள் எமிலியா பிறந்த இரண்டு ஆண்டுகளில் குஸ்டவிற்கு வேறு ஊரில் வேலை கிடைத்தது. நாம் ஊரை விட்டுச் செல்லப்போகிறோம் என்று சொல்ல க்ளிமன்ஸ் இங்கிருந்து வர மாட்டேன் இங்கிருந்து என்னை கிளப்ப நினைத்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார்.
குஸ்டேவ் நினைத்திருந்தது சரி தான் என்று உறுதிபடுத்திக் கொண்டார். கணவரும் இந்த ஊரை விட்டு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

#4
ஒரு வழியாக கணவரின் முடிவுக்கே சம்மதம் சொல்லவேண்டியதாய் போயிற்று. இருவரும் வேறு ஊருக்குச் சென்றார்கள். அங்கே கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்து கொண்டேயிருந்தது. ஒரு பக்கம் குஸ்டேவுக்கு நிலையான வருமானம் இருக்கவில்லை.
என் விருப்பமில்லாமல் நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல என்னை அழைத்து வந்தீர்கள் குடும்பத்தை இப்படி சிரமப்படுத்துகிறீர்கள் என்று தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டேயிருந்தார் க்ளிமன்ஸ். ஒரு கட்டத்தில் குஸ்டேவ் குடிப்பழகக்த்திற்கு அடிமையானார்.

#5
குழந்தையை சரியாக கவனிக்காமல் இருப்பது, குடும்பத்துடன் ஒரு பற்று இல்லாமல் இருப்பது என்றே இருந்தார் க்ளிமன்ஸ். க்ளிமன்ஸ் மகளை அனாதை இல்லத்தில் சேர்த்தார். அதன் பிறகு க்ளிமன்ஸுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அங்கே எமிலியா பாபின் படித்து கன்னியாஸ்திரியானார்.
எமிலியாவுக்கு பிறகு பிறந்தவர் க்றிஸ்டினா. இவர் 1905 ஆம் ஆண்டு பிறந்தார்.இவர் பிறந்ததும் தந்தையின் சகோதரியிடம் தத்து கொடுக்கப்பட்டார். அவர்களும் சுமார் ஏழு ஆண்டுகள் வரை நல்லபடியாக வளர்த்தாரக்ள். அதன் பிறகு அனாதை இல்லத்தில் சேர்த்துவிட்டார்கள். மூன்றாவது பிறந்த குழந்தை லியா. எமிலியா, கிறிஸ்டினா, லியா ஆகிய மூன்று சகோதரிகளில் லியா மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர். லியா 1911 ஆம் ஆண்டு பிறந்தார்.

#6
இந்த இல்லத்தில் வளர்க்கப்படும் குழந்தைகள் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும். அதன் படி கிறிஸ்டினாவும் லியாவும் 1926 ஆம் ஆண்டு லீ மன்ஸில் உள்ள ஒய்வு பெற்ற வக்கீல் வீட்டிற்கு வேலைக்கு செல்கிறார்கள்.
கிறிஸ்டினா சமையல் வேலையையும் லியா வீட்டை சுத்தம் செய்யும் வேலையும் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம். அந்த வீட்டில் ஓய்வு பெற்ற வக்கீல் லான்சிலின், அவரது மனைவி லினி, மற்றும் பருவ வயதில் ஜெனிவியா என்ற மகள் இருந்தார்கள்.

#7
வீட்டு வேலைகளை இருவரும் போட்டி போட்டுக் கொண்டு செய்து முடிப்பார்கள். ஞாயிற்றுக் கிழமை மட்டும் நல்ல உடை அணிந்து கொண்டு சர்ச்சுக்கு சென்று வர வேண்டும் என்று விரும்பினார்கள். இருவரும் எப்போதும் பிறரிடமிருந்து தங்களை தனிமைபடுத்திக் கொள்ளவே அதிகம் விரும்பினார்கள்.
1933 ஆம் ஆண்டு இங்கே வேலைக்கு சேர்ந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது. அப்போது கிறிஸ்டினாவுக்கு 27 வயது, லியாவுக்கு 21 வயது.

#8
அதே ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி. லினியும் அவரது மகளும் வெளியில் சென்று விட்டு மாலை 5.30க்கு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்கள். வீடு இருட்டாக இருந்திருக்கிறது.
ஃப்யூஸ் போயிருக்கிறது. இந்த வாரத்தில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இது. கிறிஸ்டினா உடைகளை ஐயர்ன் செய்யும் போது தான் இப்படி ப்யூஸ் போனது. முதல் முறை ப்யூஸ் போனபோதே இதனை சரிபார்க்க ஆளை கூட்டி வந்தார்கள்.அவன் வந்து பார்த்துவிட்டு இதில் எந்த தவறுமில்லை என்று சொல்லி சென்றுவிட்டான்.
அதிக பணம் கொடுத்து இன்னொருவனை வரவைத்து கரண்டை வரவைத்திருந்தார்கள். இந்நிலையில் இரண்டாவதாக மீண்டும் ப்யூஸ் போய்விட்டது என்று தெரிந்ததும். க்றிஸ்டினா மீது அதிக கோபம் கொண்டார்கள்.

#9
ஏற்கனவே தன் முதலாளிகள் தங்களுக்கு உரிய ஊதியம் தராமல் தொடர்ந்து கொடுமை படுத்துவதாக வேதனையில் இருந்தவர்கள். இப்போது ப்யூஸ் போனதற்கும் இப்படி அடிக்கிறார்களே என்று கடும் கோபம் கொண்டார்கள். குனிந்து அடி வாங்கிக் கொண்டிருந்த கிறிஸ்டினா சீறி எழுந்தாள் தன்னை அடித்துக் கொண்டிருந்த வக்கீலின் மகளின் கண்களை குறிபார்த்து குத்தினாள்.
கீழே ஓடி வந்து கத்தியையும் கோடாரியையும் எடுத்துக் கொண்டு மேலே ஓடினாள். அங்கே மகள் தரையில் விழுந்து கிடக்க தாய் எழுப்பி கத்திக் கொண்டிருக்கிறாள். கொண்டு சென்ற ஆயுதத்தால் மிகவும் கொடூரமாக இரண்டு பெண்களையும் வெட்டி சாய்த்தாள் கிறிஸ்டினா.

#10
இரவு ஏழு மணிக்கு லென்சினும் அவருடைய மருமகனும் வீட்டிற்கு வருகிறார்கள். வீடு இருட்டாக இருக்கிறது உள்பக்கமாக தாளிடப்பட்டிருக்கிறது. நீண்ட நேரம் கதவைத் தட்டுகிறார்கள் யாரும் திறக்கவில்லை. மேல் மாடியில் இருந்து மட்டும் வெளிச்சம் வருகிறது. ஆக மேல் தளத்தில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் ஏன் கதவை திறக்கவில்லை என்று சந்தேகமடைந்தவர்கள் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள்.
போலீஸ் விரைந்தது வந்ததும் கதவு உடைத்து உள்ளே செல்கிறார்கள்.

#11
டார்ச் வெளிச்சத்தில் அடித்து பார்த்த போது கீழே யாருமில்லை. சந்தேகம்படும்படியாக எதுவும் இல்லை படிவழியாக மேல் தளத்திற்கு சென்றார்கள். இரண்டு பெண்களும் கொடூரமாக முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்கள்.
முகம் அடையளாமே தெரியவில்லை அவர்கள் அணிந்திருந்த ஆடையை வைத்து இவர் என்னுடைய மனைவி என்றும் இவர் என்னுடைய மகள் என்றும் அடையாளம் காட்டினார் லென்சின்.

#12
கால்,இடுப்பு,முகம் ஆகிய பகுதிகளில் தான் அதிகப்படியான வெட்டுக்காயங்கள் இருந்திருக்கின்றன. இவர்களின் பல் சற்று தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. மகள் ஜெனிவியாவின் இரண்டு கண்கள் தோண்டி பிடுங்கப்பட்டிருந்தது.
ஒரு கண் படியின் ஆரம்பத்திலும் இன்னொரு கண் அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த தரையில் கிடந்தது. அந்த இடத்திலேயே அவர்களை கொல்ல பயன்படுத்திய கத்தி இருந்தது. தரை சுவர் முழுவதும் ரத்தம் தெரித்திருந்தது.

#13
வீடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கொள்ளைக்கும்பல் இப்படி கொடூரமாக கொலை செய்துவிட்டு எதை எடுத்துச் சென்றிருக்கிறது என்ற கோணத்திலும் இங்கே வேலை பார்த்த இரண்டு பெண்களை மட்டும் கொலைகாரன் சும்மா விட்டு வைத்திருப்பானா?
அவர்களையும் நிச்சயமாக கொலை செய்திருக்க வேண்டும் அவர்களின் உடல் எங்கே. இப்படி கொடூரமாக கொலை செய்ய சைக்கோவால் மட்டும் தான் முடியும் என்று தேட ஆரம்பித்தார்கள்.

#14
அவர்கள் தங்கியிருந்த அறையை காண்பித்தார் லென்சின். கதவைத் தட்டினார்கள் திறக்கப்படவில்லை. முழு பலத்துடன் தள்ள திறந்து கொண்டது. அங்கே கட்டிலில் இரண்டு பெண்கள் படுத்திருந்தார்கள். ஆட்கள் நுழைந்ததும் முழித்துக் கொண்டார்கள். இருவரும் பதட்டமாக இருந்தார்கள்.அந்த அறையில் இருந்த ஒரு நாற்காளியில் ரத்தம் சொட்டும் கோடாரியும் அதில் நீளமான முடியும் இருந்தது.
கொலைகாரனுக்கு பயந்து கொண்டு இவர்கள் பதட்டமாக இருப்பதாக நினைத்து நாங்கள் போலீஸ் பயப்பட வேண்டாம் என்றார்கள். பின்னர் என்ன நடந்தது அவர்களுக்கு என்ன ஆயிற்று யார் வீட்டிற்குள் வந்தார்கள். அடையாளம் தெரியுமா என்று கேட்கப்பட்டது.
எதையும் மறைக்க முயற்சிக்கவில்லை நடந்ததை சொன்னார்கள்.

#15
போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றார்கள். இந்த செய்தி பெரும் பரபரப்பாய் பேசப்பட்டது. இதுவரையில் இப்படி ஒரு கொடூரமான கொலை எங்கும் நிகழ்த்தப்படவில்லை. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்தார்கள்.
இரண்டு பெண்களும் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்று சொல்லப்பட்டது. இவர்கள் வெளியுலகத்திலிருந்து எந்த தொடர்பும் இன்றி தன்னைத் தானே தனிமையில் அடைத்துக் கொள்வது, இளமையில அவர்கள் சந்தித்த உதாசீனங்கள், கோவம் ஆகியவை தான் வெறியாய் மாறியிருக்கிறது என்றார்கள் மனநல மருத்துவர்கள்.
விசாரணையின் முடிவில் லியாவுக்கு பத்தாண்டுகள் சிறைதண்டனையும் , க்றிஸ்டினாவுக்கு மரண தண்டனையும் விதிக்கப்படது. இந்த கொலை குறித்தும் இந்த சகோதரிகள் குறித்தும் ஏராளமான திரைப்படங்கள், புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது.



Click it and Unblock the Notifications