ஒரேயிடத்தில் 800 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்! நடுங்கச் செய்யும் வரலாறு

Posted By:
Subscribe to Boldsky

ஐர்லாந்தில் இருக்கக்கூடிய டுவாம் என்னும் இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனாதை இல்லம் ஒன்று இருந்தது. சமூகம் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களை அங்கே பாதுகாக்கப்பட்டார்கள்.

அவர்களுக்கு புதிய வழி காட்டும் இடமாக அந்த இல்லம் பார்க்கப்பட்டது. புதிய வழி ஆரம்பிக்க மட்டுமல்ல சிலரது வாழ்க்கையே முடிக்கவும் இது காரணமாக அமைந்திடுகிறது. பாதுகாப்பான இடம் என்று சொல்வதை விட இதனை ஓர் சிறைச்சாலை என்று சொல்லலாம், இன்னும் இந்த இல்லம் பற்றிய ஏகப்பேச்சுக்கள் வலம் வந்து கொண்டிருந்தது.

அனைத்தையும் விஞ்சும் வகையில் இந்த இல்லம் குறித்த சர்ச்சையை உலகமே பேசச் செய்தது ஒரு விஷயம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

1975 ஆம் ஆண்டு இரண்டு சிறுவர்கள் பான் செக்யூவர் என்ற அந்த இல்லத்தின் பக்கவாட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு சிறுவன் வீசிய பந்து கான்க்ரீட் ஸ்லாபுக்கு அடியில் சிக்கியிருக்கிறது. அதை எடுக்கச் சென்றவர்கள் அடியில் ஓர் பாதாள அறை இருப்பதை அறிந்தார்கள். ஸ்லாபினை லேசாக நகர்த்த அங்கே ஓர் குழந்தையின் எலும்புக்கூடு. அதிர்ச்சியில் பயத்துடன் கத்திக் கொண்டு ஓடினார்கள்.

குழந்தைகள் சொன்ன விஷயத்தை கேள்விப்பட்டு குடும்பத்தாரும் இன்னும் சில பொதுமக்களும் அவர்கள் பார்த்த ஸ்லாப் அருகே வந்துவிட்டார்கள். இப்போது கடப்பாரையைக் கொண்டு ஸ்லாப் பெயர்த்தெடுக்கப்பட்டது. அங்கே இன்னொரு குழந்தையின் எலும்புக்கூடு இருந்தது.

Image Courtesy

 #2

#2

உடனடியாக இந்த தகவல் அங்குள்ள மதகுருவிடம் தெரிவிக்க அவரோ குழந்தை இறந்து புதைத்திருப்பார்கள், என்ன காரணமோ வெளியில் வந்துவிட்டிருக்கிறது அதனால் நாம் அனைவரும் இந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டு மீண்டும் இறுதிச் சடங்குகளை செய்து புதைத்துவிடலாம் என்று யோசனை கூறியிருக்கிறார்.

மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். தங்களது மத குரு சொன்னது போலவே எல்லா இறுதிச் சடங்குகளும் நடந்தேறியது. ஆழமாக குழியைத் தோண்டு, கண்டெடுக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூட்டினையும் புதைத்தார்கள்.

Image Courtesy

#3

#3

அதன் பிற இப்படியொரு சம்பவம் நடந்ததே எல்லாருக்கும் மறந்து போனது. கிட்டதட்ட 40 ஆண்டுகள் உருண்டோடியது. தற்போது சில வருடங்களுக்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு, வரலாற்று ஆய்வாளர் ஒருவர் இந்த பான் செக்யூர் ஹோம் ஆய்வு செய்ய சென்றிருக்கிறார். ஹோம் இருந்த முழு இடத்தையும் ஆய்வு மேற்கொண்டதில் பேரதிர்ச்சியான ஒரு தகவல் கிடைத்தது.

அங்கே 800க்கும் மேற்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களின் விவரங்களை சேகரித்த போது 1975 ஆம் ஆண்டு சிறுவர்கள் பார்த்து ஊரே சேர்ந்து இரண்டாவதாக புதைத்தார்களே இரண்டு எலும்புகூடுகள் அதனைப் பற்றிய தகவல் மட்டுமே இருக்கிறது. அப்படியானால் இந்த 800 குழந்தைகள்?

Image Courtesy

#4

#4

விஷயம் சூடு பிடித்தது. உண்மையில் இந்த இல்லத்தில் என்ன நடந்தது? இங்கே நடைமுறை என்ன? எதற்காக இங்கே மட்டும் இவ்வளவு சடலங்கள் என்று தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார்கள்.

முடிவில் இந்த இல்லம் ஆரம்பத்தில் ஓய்வெடுக்கும் வீடாக இருந்திருக்கிறது. அதாவது நம்மூரில் சத்திரம் சொல்வோமே அதுப்போலவே தான். ஏழை மக்கள், வீடில்லாதவர்கள் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு களைப்பாக வருபவர்கள் இங்கே தங்கி ஓய்வெடுப்பார்கள். ஆரம்பத்தில் அப்படியான ஒரு இடமாகவே இந்த வீடு இருந்திருக்கிறது. இங்கே உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#5

#5

அதன் பிறகு காலப்போக்கில் அதன் பயன்பாடு குறைந்து போகவே இந்த வீட்டினை அப்படியே பயன்படுத்தாமல் விட்டார்கள். அதன் பிறகு 1925 ஆம் ஆண்டு பான் செக்யூர் சிஸ்டர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சந்நியாசிகள் அந்த வீட்டினை வாங்கினார்கள்.

ஐர்லாந்தில் அந்த காலத்தில் பெண்கள் திருமணமாகாமல் கர்ப்பமானால் சமூகத்தினர் ஏற்றுக் கொள்ள மறுத்தனர், அதோடு வீடுகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்கள். அதோடு அப்போதிருந்த சட்டமும் இந்தப் பெண்களுக்கு எதிரானதாகவே இருந்திருக்கிறது. எல்லோராலும் கைவிடப்பட்டு நிர்கதியாய் நிற்கக்கூடிய அந்த பெண்களுக்கு வாழ்விடமாக மாற்றப்பட்டது இந்த இல்லம்.

Image Courtesy

#6

#6

அங்கிருந்த சந்நியாசிகளுக்கே பிரசவம் பார்க்கவும் தெரிந்திருந்தது. பிரசவம் பார்த்ததற்கோ அல்லது அங்கு தங்குவதற்கோ நீ பணம் கொடுக்க வேண்டாம். மாறாக குழந்தை பிறந்த பிறகு சில காலம் இங்கே நீ வேலை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது.

ஆரம்பத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருத்துவ முறைகள், பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் ஆகியவற்றை கணக்கிட்டு குறிப்பிட்ட வருடம் பணியாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டது.

Image Courtesy

#7

#7

பெண்களும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பெண்கள் வெளியே அனுப்பப்படவில்லை, தொடர்ந்து இங்கேயே வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டார்கள். இதே கால கட்டத்தில் குழந்தை நடக்கத் துவங்கியதும் அல்லது குறிப்பிட்ட வயது எட்டியதும் குழந்தையை தாயிடமிருந்து பிரித்தார்கள்.

அதே இல்லத்தின் இன்னொரு பகுதியில் குழந்தைகள் பராமரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. குழந்தைகள் இங்கு இருப்பதால் நீங்கள் வேலை செய்ய இடைஞ்சலாக இருக்கும் என்று சொல்லி பிரித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையை முற்றிலுமாக பார்க்கக்கூடாது எனும் அளவுக்கு கெடுபிடிகள் வளர்ந்தன.

Image Courtesy

#8

#8

சமூகமும், வீடும் தன்னை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்த இடமே கதியென்று வந்து விட்ட பிறகு அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. அப்படி தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளை வெளியில் தத்து கொடுக்க ஆரம்பித்தார்கள். இந்த விஷயம் பெரும்பாலும் தாயிடம் தெரிவிக்கப்படாமலே நடந்திருக்கிறது.

தனியொருத்தியாக நீ குழந்தையை வளர்ப்பது சிரமம், இன்னொரு வீட்டிலாவது குழந்தை மகிழ்வுடன் இருக்கட்டும் என்று தெரிந்தபிறகு சொல்லப்பட்டிருக்கிறது.

Image Courtesy

#9

#9

ஐர்லாந்து மட்டுமின்றி அமெரிக்கா, கனடா,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் கூட குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார்கள். அப்படி தத்தெடுத்த குழந்தைகள் எல்லாம் சந்தோஷமாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அங்கே அவர்களுக்கு கொத்தடிமை வாழ்க்கை தான் கிடைத்தது.

நீண்ட காலமாக ஒரு குழந்தை தத்தெடுக்கப்படவில்லை என்றால் அந்த குழந்தையை தொழிற்சாலைக்கு பணியாற்ற வைத்தனர். அங்கே உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டார்கள்.

Image Courtesy

#10

#10

அதோடு அங்கே நாள் முழுவதும் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். உணவும் சரிவர வழங்கப்படவில்லை, மேலும் அவர்களுக்கு டிபி,காலரா போன்ற தொற்று நோய்கள் இருந்தது இவற்றை எல்லாம் தாண்டி சத்துக்குறைபாடு ஆகிய காரணங்களால் ஏரளமான குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.

1943-46ஆகிய காலகட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவீத குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.

Image Courtesy

#11

#11

இவர்களின் உடல்களை யாருக்கும் தெரியாமல், அவர்கள் என்ன காரணத்தினால் இறந்தார்கள் என்றும் பதிவு செய்யப்படாமல் அந்த இல்லத்திற்குள்ளேயே புதைத்திருக்கிறார்கள்.

இந்த இல்லத்திற்கு பல இடங்களிலிருந்தும் உதவிகள் கிடைத்தன. குறிப்பாக அரசாங்கம் உதவி செய்து கொண்டிருந்தது, இப்படி கொத்து கொத்தாக குழந்தைகள் இறக்கும் தகவல் தெரிந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் கேள்வியெழுப்புவார்கள் அதோடு, செய்து கொண்டிருக்கும் உதவிகளை நிறுத்திவிடுவார்கள் அதனால் இந்த விஷயன் வெளியில் கசிய விடாமல் பாதுகாத்தார்கள்.

Image Courtesy

#12

#12

இந்த இல்லத்திலிருந்து எளிதாக தப்பிக்கலாம். ஒரு வேளை தப்பித்து போலீசில் பிடிபட்டால் அவர்கள் நேராக இங்கே கொண்டு வந்து விடுவார்கள். வெளியில் சென்று பிடிபட்டு வந்தால் அவ்வளவு தான் பயங்கரமான கொடுமைகள் நடக்கும், அதற்கு இதுவே பரவாயில்லை என்றே பலப் பெண்கள் கொடுமைகளை அனுபவித்திருந்தார்கள்.

அதே காலகட்டத்தில் ஐர்லாந்தில் மாக்டலின் லாண்டரீஸ் செயல்பட்டு வந்தது. இந்த பான் சிஸ்டர்ஸ் போலவே இதுவும் பெண்களுக்கு உதவி செய்யக்கூடிய ஓர் அமைப்பாகவே செயல்பட்டு வந்தது.

Image Courtesy

#13

#13

இந்த லாண்ட்ரிகளில் வேலை செய்தால் உங்களது குற்றங்கள் கழுவப்படும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு இந்த இடம் மதம் சார்ந்த இடமாகவே பார்க்கப்பட்டது. வேலை, ஜபம் இந்த இரண்டையும் தவிர வேறு எதற்கும் அந்தப் பெண்களுக்கு அனுமதியில்லை, ஏன் தங்களது குழந்தைகளை கொஞ்சக்கூடாது, அருகிலிருக்கும் பெண்களிடத்தில் பேசக்கூடாது என ஒரு சித்ரவதைக்கூடமாகவே இருந்தது.

Image Courtesy

#14

#14

இந்த பான் சிஸ்டர்ஸ் மற்றும் மேக்டலின் லாண்டரி இரண்டுமே பெண்களை பாதுகாக்கும் இடம், பெண்களை பாலியல் தொழிலில் தள்ளாமல் அதிலிருந்து மீட்கிறோம் என்று சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால் அங்கேயிருக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானார்கள் என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

#15

#15

அங்கிருந்து வெளியே தப்பித்து வர முடியாது, வந்தாலும் இந்த சமூகமும் குடும்பமும் ஏற்றுக் கொள்ளாது இங்கே உழைப்பை சுரண்டியெடுக்கிறார்கள் அதோடு சரியான உணவும் வழங்கப்படுவது இல்லை, உடலளவிலும், மனதளவிலும் பெரும் சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த பெண்களும் தற்கொலை மற்றும் உடல்நலக்குறைவினால் இறந்தார்கள். அவர்களும் வெளியில் யாருக்கும் தெரியாமல் உள்ளேயே புதைக்கப்பட்டார்கள் .

Image Courtesy

#16

#16

காலப்போக்கில் மக்களுடைய பார்வை மாற ஆரம்பித்தது, அதனால் இந்த இல்லங்களின் தேவை குறைந்தது. கிட்டதட்ட 1996 வரை இந்த இல்லம் இயங்கிக் கொண்டு தான் இருந்திருக்கிறது, அதன் பிறகே முற்றிலுமாக பயன்பாடற்று கிடந்திருக்கிறது. அதன் கருப்பு பக்கங்கள் 2012 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்களால் கண்டுபிடித்து கூற அப்போது தான் இதன் உண்மை நிலவரம் தெரிந்திருக்கிறது.

இங்கே அடைப்பட்டு கிடந்த பெண்களிடம் அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்புகோரியது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Finding 800 Children Body at Baby Home

Finding 800 Children Body at Baby Home
Story first published: Wednesday, February 28, 2018, 14:30 [IST]