பரிகாரம் செய்துமே எந்த பலனும் கிடைக்கவில்லையா?

By: Staff
Subscribe to Boldsky

ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான உழைப்பை கொட்ட தயாராக இருந்தும் தங்களது ஜாதக கட்டங்களினால் சரியாக உழைக்க முடியாமலோ அல்லது காரணமே இல்லாது தடைகளோ ஏற்படக்கூடும்.

உங்களுடைய உழைப்பைப் பற்றியோ வெற்றியைப் பற்றியோ யாரும் குறைந்து மதிப்பிடக்கூடாது என்று நினைக்கும் அதே வேலையில் நூறு சதவீதம் உங்களால் உழைப்பைக் கொடுக்க முடிகிறதா என்றும் பாருங்கள். இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

அதோடு சிலர் தொடர்ந்து ஜாதகம், ராசி, பரிகாரம் என்று செய்து கொண்டேயிருப்பார்கள் ஆனால அவர்கள் எதிர்ப்பார்த்த மாதிரியான வெற்றி எதிர்ப்பார்த்த பலன் கிடைக்காது, அப்படி நீங்கள் செய்யக்கூடிய பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கு முக்கியமான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். இதனை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று அப்போது தான் அதனை களைத்து முன்னேற முடியும் என்பதை மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம் :

மேஷம் :

இன்றைக்கு நீங்கள் செய்யப்போகிற புதிய முயற்சியினால் உங்களுக்கு கண்டிப்பாக ஆதாயம் கிடைத்திடும். திடீர் உறவினர் வருகையினால் மகிழ்ச்சி கிடைத்திடும். உடன்பிறப்புகள் உங்களுக்கு செலவை ஏற்படுத்துவர்.

இதுவரை முறைத்துக் கொண்ட அலுவலக உறவுகள் இன்று சமாதானம் ஆவதற்கு வாய்ப்புண்டு வியாபாரத்தில் எந்த ஏற்ற இறக்கமும் இருக்காது.

ரிஷபம் :

ரிஷபம் :

குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். இதனால் எப்போதும் நீங்கள் பேசும் போதும் முடிவெடுக்கும் போதும் நிதானமாக செயல்படுங்கள். எதிர்ப்பார்த்த நிகழ்வுகள் நடந்தேறும்.

அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையினால் அவதிப்படுவீர்கள்.

மிதுனம் :

மிதுனம் :

இன்றைக்கு உங்களுக்கு அதிக செலவு ஏற்படும். குடும்பத்தாரை அமைதியுடன் அணுகுங்கள். தந்தை வழி உறவுகள் உங்களுக்கு நல்ல தகவலை கொடுப்பர். சுபகாரியங்களுக்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்கும் வகையில் உங்களுக்கு பண வரவு இருக்கும்.

கடகம் :

கடகம் :

நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பு உயர்ந்திடும், நீங்கள் என்றைக்கோ செய்த உதவியின் பலனை இன்று அனுபவிப்பீர்கள். வியாபாரத்தில் திடீர் சறுக்கல் ஏற்படக்கூடும்.

வேலையாட்களினால் அல்லது உங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களால் சில பிரச்சனைகள் எழக்கூடும். அதனை கவனமாக கையாளத் தெரிந்திருந்தால் இந்த நாள் உங்களுக்கு சிறந்த நாளாக அமைந்திடும்.

சிம்மம் :

சிம்மம் :

என்ன தான் வேலை,பணம்,வியாபாரம் என்று ஓடினாலும் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு என்று கவனம் செலுத்துங்கள். வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் கவனமாக இருக்கவும்.

குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். வெளியிடத்தில் உணவு உண்ணும் போது கவனம் தேவை.

கன்னி :

கன்னி :

இன்றைக்கு உங்களுக்கு புதிய நட்பு அறிமுகமாகும் அவர்களால் மிகச்சிறந்த ஆதாயம் ஒன்று உங்களுக்கு கிடைக்கப்போகிறது. இன்றைக்கு புதிதாக எதையும் துவங்க வேண்டாம். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். அவர்களால் இன்றைக்கு செலவு ஏற்படக்கூடும்.

வெளியூருக்கு தனியாகவோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்து கார் அல்லது பைக்கில் செல்வதை இன்றைக்கு தவிர்த்திடுங்கள்

துலாம் :

துலாம் :

வழக்கத்திற்கு மாறான வேகம் இன்று உங்களிடம் இருக்கும். உறுதியுடன் எதையும் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கும். உங்கள் வேலையில், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

எதிர்பாராத செய்தி உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். இல்லறம் இன்பமயமாக அமைந்திடும்.

விருச்சிகம் :

விருச்சிகம் :

தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் இன்று உங்களுக்கு செலவுகள் அதிகம். சகோர சகோதரிகளின் உதவியை நாடி வருவார்கள். தாரளமாக செய்திடுங்கள் வேலை வாய்ப்பினைத் தேடி அலைவோருக்கு நல்ல சேதி கிடைக்கும்.

அலுவலகத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள், சொந்தமாக வியாபாரம் செய்பவர்கள் இன்றைக்கு கொடுக்கல் வாங்கல் செய்யலாம் உங்களுக்கு லாபம் கிடைத்திடும்.

தனுசு :

தனுசு :

வாழ்க்கைத் துணையிடமிருந்து நல்ல அணுகூலம் உண்டாகும். இன்றைக்கு மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள் எல்லா வேலையையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய முன்வருவீர்கள்.

இன்றைக்கு எதுவும் புதிதாக முயற்சிக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம் :

மகரம் :

ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணத்தினால் ஏமாற்றம் உண்டு என்பதால் சற்று கூடுதல் கவனத்துடன் இருங்கள். வீண் செலவு என நீங்கள் நினைத்தால் அதனை இன்று செய்யாமல் தவிர்த்திடுங்கள்.

வீட்டில் சுபகாரியங்கள் தொடர்பான பேச்சு அடிபடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று ஆதாயம் உண்டு.

கும்பம் :

கும்பம் :

குழந்தைகளால் இன்று உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் இன்றைக்கு அதீத ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களால் நீங்கள் எதிர்ப்பார்த்த உதவி கிடைத்திடும்.

வேலை செய்யுமிடத்தில் திடீர் மாற்றம் உருவாகிடும். உடல் நலத்தில் சற்று தடுமாற்றம் ஏற்படக்கூடும்.

மீனம் :

மீனம் :

இன்றைக்கு தொலைதூர பயணம் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.உடன் பிறந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைத்திடும். அலுவலகத்தில் உங்கள் பெயர் பாதிக்கப்பட வாய்ப்புண்டு என்பதால் நிதானுத்துடன் கையாளுங்கள்.

இன்று கூடுதல் சுமையுடன் வேலைப்பார்ப்பதாய் உணர்வீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அதனால் உணவு, நீர் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

பரிகாரம் :

பரிகாரம் :

நம்முடைய ஜாதகப்படி நமக்கிருக்கும் தோஷத்தை அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் செய்தாலும் அதன் முழு பலன் நமக்கு கிடைக்காது துன்பங்கள் தொடரும். இதற்கு காரணம், நீங்கள் செய்த பரிகாரம் பலனளிக்கவில்லை என்பதேயாகும்.

பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு என்பது இப்போது தான் பலருக்கும் புதிதாக இருக்கும். ஆம், இதற்கு காரணம் கர்ம விணை. உங்கள் ஜாதகத்தில் என்ன கர்ம வினை நடக்கிறது என்பதை முழுதாக அறிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

மூன்று வகை :

மூன்று வகை :

இந்த கர்மவினை மூன்று வகைப்படும். தெரிந்தே செய்த பாவங்களான த்ருத கர்மா, செய்த பாவத்தை உணர்ந்து திருந்தியிருப்பது அல்லது மன்னிப்பு கேட்டது த்ருத அத்ருத கர்மா மற்றும் தெரியாமல் செய்த பாவங்கள் அத்ருத கர்மா.

த்ருத கர்மா :

த்ருத கர்மா :

தவறு என்று தெரிந்தே செய்த பாவங்கள் இதனைக் குறிக்கிறது. முன் ஜென்மத்தில் நீங்கள் தெரிந்தே செய்த குற்றங்களினால் இந்த கர்மவினை தொடர்கிறது. தெரிந்தே செய்த பாவங்கள் என்றால் திருடுவது, ஏமாற்றுவது, வயதான பெற்றோரை கவனிக்காமல் விடுவது,நம்பிக்கை துரோகம் செய்வது ஆகியவை தெரிந்தே செய்த பாவங்கள் பட்டியலில் இடம்பெறும்.

இந்த பாவங்கள் செய்து அதற்குரிய பரிகாரம் செய்தாலும் பெரிதாக பயன் இருக்காது. அன்னதானம் வழங்கி ஏழை மக்களை பசியாற வைப்பதன் மூலம் உங்களது சந்ததியினருக்கு இந்த பாதிப்பு வராமல் இருக்கும்.

த்ருத அத்ருத கர்மா :

த்ருத அத்ருத கர்மா :

பாவத்தை செய்துவிட்டு அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்பவர்கள் இந்த வகை. முன்ஜென்மத்தில் செய்த இந்த தவறு அடுத்த ஜென்மத்திலும் தொடரும். உங்களது ஜாதகத்தில் லக்னம்,சந்திரன் சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வை இருக்கும்.

முழு மனதுடன் பரிகாரப் பூஜை மேற்கொண்டால் இதிலிருந்து நீங்கள் மீள முடியும்.

அத்ருத கர்மா :

அத்ருத கர்மா :

முன் ஜென்மத்தில் தெரியாமல் செய்த பாவங்கள் அடுத்த ஜென்மத்திலும் தொடரும் போது இந்த கர்மவினை உங்களுக்கு தொடர்ந்திடும், இது எளிதில் மன்னிக்ககூடியதாகவே இருக்கும்.

தொடர்ந்து நம்பிக்கையுடன் இறைவனை வேண்டினாலே இதற்கு போதுமானது, வேண்டுமானால் ஏழை எளியவருக்கு உதவி செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Feburary 12 Rasi Palan

Feburary 12 Rasi Palan
Story first published: Monday, February 12, 2018, 11:43 [IST]
Subscribe Newsletter