Latest Updates
-
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...!
ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்!
ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்கு முன்... இரகசிய உண்மைகள்!
யாரால் மறக்க முடியும் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி. உலகில் நடந்த முதலும், கடைசியுமான அணு ஆயுத தாக்குதல் இது தான். லிட்டில் பாய் மற்றும் பேட் மேன் என்ற பெயர்களில் இரண்டு அணு ஆயுதங்களை அமெரிக்கா ஜப்பான் மீது வீசி, பெரும் நாசத்தை உண்டாக்கியது.

அணு ஆயுதத்தின் தாக்கம் இந்த அளவிற்கு இருக்கும் என்று அதுவரை அதை தயாரித்த அறிவியலாளர்களுக்கு கூட தெரியாது. அமெரிக்க போர் விமானத்தில் இருந்து அணு ஆயுதம் வெடித்து, அதன் தாக்கம் பரவுவதை கண்ட சில வீரர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூட சில அரசல்புரசல் தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.
பெரும்பாலும், இந்த இரண்டு அணு ஆயுத தாக்குதல் மூலம் நடந்த அழிவு, நாசம், சேதம், உயிரிழப்பு பற்றி மட்டும் தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், அதற்கு முன்னரும், தாக்குதலின் போதும் நடந்த விஷயங்கள் குறித்து வெகு சிலரே அறிந்திருப்பார்கள்.

முன்னறிவிப்பு!
உலகில் இதுவரையில் நடந்த முதலும் கடைசியுமான அணு ஆயுத தாக்குதல். ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணு ஆயுத தாக்குதல் நடப்பதற்கு முன்னர், அமெரிக்க விமான படை வீரர்கள் வான்வெளியில் இருந்து, அணு ஆயுத தாக்குதல் நடக்கவிருக்கும் விபரத்தை குறிப்பிட்ட துண்டு சீட்டுக்களை பறக்கவிட்டுள்ளனர்.
அதில், ஜப்பானின் இராணுவ தளங்களில் அணு ஆயுத தாக்குதல் நடைப்பெறவுள்ளது, பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, உயிர் காத்துக் கொள்ளுங்கள் என்று அச்சிட்டதாக அறியப்படுகிறது.
Image Source: wikimedia.org

ஃப்ளேம் ஆப் பீஸ்!
கடந்த 1964ம் ஆண்டில் இருந்து ஜப்பானில் ஃப்ளேம் ஆப் பீஸ் (flame of peace) அமைதிக்கான சுடரொளி ஹிரோஷிமாவில் எரிந்து வருகிறது. இது அணு ஆயுத தாக்குதலால் இறந்த அப்பாவி பொதுமக்கள் உயிர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எப்போது, இந்த உலகில் முற்றிலுமாக அணு ஆயுதம் நீக்கப்படுகிறதோ, அப்போது இது அணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Image Source: flickr

டக் அன்ட் கவர்!
ஹிரோஷிமாவை சேர்ந்த காவலர் ஒருவர், ஹிரோஷிமாவில் நடந்த அணு ஆயுத தாக்குதலின் போது உயிர் பிழைத்தார். இவர் நாகசாகியில் அணு ஆயுத தாக்குதல் நடந்த போது, ஒரு காவலர் கூட உயிர் இழக்காமல் தப்பிக்க வழிவகுத்தார் என்று கூறப்படுகிறது.
நாகசாகி சென்ற அந்த ஹ்ரோஷிமா காவலர், டக் அன்ட் கவர் (Duck and Cover) என்ற முறையில் தற்காத்துக் கொண்டால், அணு ஆயுத தாக்குதலில் இருந்து தப்பித்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, நாகசாகியில் ஒரு காவல் வீரர் கூட உயிரிழக்கவில்லை என்று அறியப்படுகிறது.
Image Source: wikimedia.org

ஒலியண்டர் மலர்!
1945ம் ஆண்டு அணு ஆயுத தாக்குதல் நடந்த பிறகு ஹிரோஷிமாவில் மலர்ந்த முதல் மலர் ஒலியண்டர் (oleander). இதனாலேயே ஹிரோஷிமாவின் அதிகாரப்பூர்வ மலராக ஒலியண்டர் மலரை தேர்வு செய்தனர்.
image source: wikimedia.org

சைனைடு குப்பிகள்!
ஹிரோஷிமா அணு ஆயுதத்தை ஏந்தி சென்ற போர் விமானத்தில் சென்ற விமானி தன்னுடன் 12 சைனைடு குப்பிகளை எடுத்து சென்றாராம். ஒருவேளை, அசம்பாவிதமாக வானில் பறக்கும் போது ஏதேனும் நடந்துவிட்டாலோ, அல்லது எதிரிகளிடம் சிக்கிக் கொண்டாலோ, விமானியிடம் இருக்கும் சைனைடு குப்பிகளை சாப்பிட்டு வீரர்கள் இறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனை இருந்ததாம்.
image source: wikimedia.org

லிட்டில் பாய் - ஃபேட் மேன்!
நிறைய பேர் ஹிரோஷிமா, நாகசாகியில் தாக்குதல் நடத்தப்பட்ட அணு ஆயுதங்கள் இரண்டும் ஒரே திறன் கொண்டவை என்று கருதுகிறார்கள். ஆனால், இரண்டும் பெயரளவில் மட்டுமல்லாத, திறனளவிலும் மாறுப்பட்டவை ஆகும். அமெரிக்க இராணுவ தள அதிகாரிகள் இரண்டையும் வெவ்வேறு திறனில் தயாரித்திருந்தனர். லிட்டில் பாய் யூரேனியம்-235 கொண்டும், ஃபேட் மேன் ப்ளூடோனியம்- 239 கொண்டும் தயாரிக்கப்பட்டன.
image source: wikimedia.org

அபாயகரமானது...
லிட்டில் பாயை காட்டிலும் ஃபேட் மேன் மிகவும் அபாயகரமான அணு ஆயுதம் ஆகும். ஃபேட் மேன் நாகசாகியில் தாக்குதல் நடத்த உபயோகிக்கப்பட்டது இதில் 60,000 முதல் 80,000 வரையிலான மக்கள் இறந்தனர். லிட்டில் பாய் ஹிரோஷிமாவில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டது, இதில் 90, 000 முதல் 1,66,000 வரையிலான எண்ணிக்கையில் மக்கள் இறந்தனர்.
ஃபேட் மேனின் தாக்கம் குறைவாக இருந்ததன் காரணம், நாகசாகியில் போடவேண்டிய அணு குண்டை மூன்று கி.மீ முன்பே செட் செய்துவிட்டனர். இதற்கு அங்கே இருந்த மோசமான வானிலை தான் காரணம் என்று அறியப்படுகிறது. மேலும், அங்கே இருந்த யூரகாமி பள்ளத்தாக்கு மற்றும் மலைசரிவுகள் தாங்கி செல்ல முடியதாதல் முன்னேரே ஃபேட் மேனை செட் செய்து தாக்குதல் நடத்திவிட்டனர். இல்லேயேல், நாகசாகியில் இன்னும் பெரிய நாசம் ஏற்பட்டிருக்கும், பெரும்பாலான மக்கள் இறந்திருப்பார்கள்.
image source: wikimedia.org

பறக்கும் வழியில்...
ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பிறகு, ஒருவேளை அணுகுண்டு பறக்கும் வழியில் வெடித்துவிட்டால் என்ன செய்வது, அல்லது விமானம் பறக்க தயாராகும் போதே வெடித்துவிட்டால் அமெரிக்க இராணுவ தளமே அழிந்துவிடுமே என்ற அச்சமும், சந்தேகமும் எழுந்தது.
எனவே, அணு ஆயுதத்தின் பாகங்களை ஏற்றி, விமானம் வானில் பறந்து, எதிரி நாட்டின் எல்லையை அடைந்த பிறகே அனைத்து பாகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு தயார் நிலைக்கு உருவாக்கப்பட்டது.
image source: wikimedia.org

யமகுசி!
யமகுசி, ஜப்பானில் அணு ஆயுத தாக்குதல் நடந்த பிறகு, ஹிரோஷிமா, நாகசாகி என இரண்டு தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த முதல் நபராக அறியப்படுபவர். இவர் மட்டுமின்றி, இந்த இரண்டு அணு ஆயுத தாக்குதலில் இருந்தும் அதிர்ஷ்டவசமாக 165 பேர் உயிர் தப்பி இருந்தனர்.
image source: youtube

மோசமான காயங்கள்!
ஹிரோஷிமா, நாகசாகி அணு ஆயுத தாக்குதலின் போது அந்த ரேடியேஷனில் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் காணப்பட்ட காயங்கள் விசித்திரமாக இருந்தன. அவர்கள் உடுத்தி இருந்த ஆடையின் அச்சு போலவே அவர்கள் சருமத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. உதாரணமாக ஒரு ஸ்ட்ராப் போன்ற உடை அணிந்திருந்தால், அவர் உடலில் அந்த ஸ்ட்ராப் போன்ற அச்சு கொண்ட தீ காயங்கள் ஏற்பட்டிருந்தன.
image source: wikimedia.org



Click it and Unblock the Notifications











