ஸ்கேட்டிங் போட்டியில இந்த பொண்ணு என்ன பண்ணா தெரியுமா?(வீடியோ)

Posted By:
Subscribe to Boldsky

பிப்ரவரி 11 ஆம் தேதி 2018 ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் நடைப்பெற்றது, அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த மிராய் நகாசு என்ற பெண் ஸ்கேட்டிங்கில் வரலாற்று சாதனை ஒன்றினை படைத்திருக்கிறார்.

ஸ்கேட்டிங்கில் மிகவும் கடினமான அதே சமயம் நுணுக்கமான ட்ரிப்பில் ஆக்சல் என்ற ஒரு வகை ஜம்பினை செய்திருக்கிறார். இதுவரையில் ட்ரிப்பில் ஆக்சல் முறையில் மூன்று பேர் மட்டுமே இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். ட்ரிப்பில் ஆக்சல் முறை ஏன் கடினம் அதோடு ஸ்கேட்டிங் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஸ்கேட்டிங் செய்து கொண்டே குறைந்த இடைவேளியில் மூன்று முறை அந்தரத்தில் சுழன்று தடுமாறாமல் இயல்பாக ஸ்கேட்டிங் தொடர வேண்டும். பூமியிலிருந்து அந்தரத்தில் இரண்டொரு நொடிகள் குதிக்கலாம். புவியீர்ப்பு விசையினால் கீழே விழுவோம், மேலே எழும் போது இருந்த வேகத்தை விட கீழே விழும் வேகம் சற்று அதிகமாகத்தான் இருக்கும்.

Image Courtesy

#2

#2

குதிக்கும் போதே இப்படியென்றால் சுழலும் போது?? மேலே அந்தரத்தில சில சுற்றுக்களை சுழல வேண்டும், புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு வேகமாக இறங்கும் இயற்கையை எதிர்த்து நீங்கள் பேலன்ஸ் செய்து நிற்க வேண்டும்.

கவனிக்கு, இது பெட் போட்டு விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்க பாதுகாக்கப்பட்ட தரை அல்ல, அதோடு உங்கள் பாதமும் சரிசமமாக சம தளத்தில் இருக்காது, ஸ்கேட்டிங் ஷூ அணிந்திருப்பீர்கள், அசைந்து கொண்டேயிருக்க வேண்டும்.

Image Courtesy

 #3

#3

இதிலிருக்கிற இன்னொரு மிகப்பெரிய மைனஸ் எனர்ஜி. ஒவ்வொரு ஆக்சல் ஜம்ப் இடையில் குறைவான இடைவேளி இருக்க வேண்டும். ஒரு முறை சுழன்று இறங்கி சில நிமிடங்கள் இரண்டாவது என அடுத்தடுத்த ஆரம்பிக்க வேண்டும் நடுவில் தடுமாறக்கூடாது என்றால் உங்களுக்கு எனர்ஜி ஒரே லெவலில் இருக்கவேண்டியது அவசியம்.

Image Courtesy

#4

#4

இந்த போட்டியில் கால்களுக்கு பேலன்சிங் செய்ய அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுவது போலவே கைகளின் வலிமைக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது, அந்தரத்தில் பறக்க எத்தனிக்கும் போதும், பேலன்ஸ் செய்து இயற்கையை எதிர்த்து உடலை கீழே இறக்கும் போதும் கைகளின் பங்கு மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது.

Image Courtesy

#5

#5

இப்படி ஒரு முறை அல்ல மூன்று முறை செய்ய வேண்டும், முதல் முதல் சமாளித்து இறங்கினாலும் இரண்டாவது.... முன்றாவது முறை சொதப்பினாலும் முடிந்தது கதை. என்ன தான் போட்டிக்கு முன்பாக நீங்கள் கடினமாக முயற்சித்தாலும் போட்டி நடக்கும் போது, என்ன நடக்கிறது என்பதை பொறுத்து தான் உங்களது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. வெற்றி மட்டுமல்ல உயிரும் கூட.

இப்போது இந்த ட்ரிப்பில் ஆக்சல் முறையின் வீரியம் தெரிந்திருக்குமே.

Image Courtesy

 #6

#6

1908 ஆம் ஆண்டு லண்டனில் நடைப்பெற்ற ஒலிம்பிக்கிலேயே ஸ்கேட்டிங் இடம்பெற்றிருந்தது அதன் பிறகு பதினாறு ஆண்டுகள் கழித்து தான் குளிர் கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

Image Courtesy

#7

#7

ஆரம்ப காலத்தில் விலங்குகளின் எலும்புகளை காலில் கட்டிக் கொண்டு உறைந்திருக்கும் ஏரிகளில் ஓடியபடி விளையாடியிருக்கிறார்கள். இது நடந்தது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, அதன் பிறகு மெல்ல மெல்ல மாற்றங்களை செய்து நவீனத்தை புகுத்தி ஸ்கேட்டிங் என்ற ஒலிம்பிக் விளையாட்டு வரை வந்திருக்கிறது.

Image Courtesy

#8

#8

புஷ்னெல் என்பவர் ஸ்கேட்டிங் ஷூவுடன் அதனை அணிந்து கொள்கிறவர் காலில் மாட்டும் படியான பெல்ட்டும் கண்டுபிடித்தார். இது 1848 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது, இந்த கண்டுபிடிப்பிற்கு பிறகு சில கடினமான மூவ்ஸ் கூட எளிதாக செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இந்த பெல்ட் அணியாததால் பல வீரர்களுக்கும் காயம் ஆகியிருக்கிறது.

Image Courtesy

#9

#9

ஆரம்பத்தில் இந்த ஸ்கேட்டிங் போட்டியில் ஆண் பெண் சேர்ந்தே போட்டியிடும் வகையில் தான் ஒலிம்பிக்கின் நடைமுறை இருந்திருக்கிறது. 1896 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற போது ஒரேயொரு பிரிவில் தான் போட்டி நடத்தப்பட்டது அதுவும் ஆண்களுக்கு மட்டும்.

அதன்பிறகு 1902 ஆண்டு லண்டனில் நடைப்பெற்ற போது ஆண் பெண் சேர்ந்து போட்டியிட்டார்கள்.

Image Courtesy

#10

#10

1961 ஆம் ஆண்டு பராகுவேவில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர்கள் விமானத்தில் பயணித்திருக்கிறார்கள். அப்போது நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்தார்கள்.

விமான விபத்தில் மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமான அந்த ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Facts About Skating

Facts About Skating
Story first published: Friday, March 9, 2018, 17:25 [IST]