For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இன்டர்நெட்டை சொக்க வைத்த செக்க செவத்த அழகி, யாருன்னு தெரிஞ்சுக்கனுமா? # UnKnown Facts

  By Staff
  |

  கடந்த சில நாட்களாக கொரியன் பெண் என்ற பெயரில்... இந்த இளம் பெண்ணின் வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ் இளைஞர்களின் மனதினை மொத்தமாக வலைப்போட்டு கொள்ளையடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.

  ப்ரியா பிரகாஷ் போதும், இனிமே நீ தான் எங்கள் செல்லாக்குட்டி என்று சொல்லாமல், சொல்லி ரசித்து வருகிறார்கள் இந்த இளம்பெண்ணை. இவர் விளையாட்டு வீராங்கனையா, நடிகையா, மாடலா, மாணவரா, சாதாரண பெண்ணா, கலைஞரா என்று யாருக்கும் பெரிதாக உண்மை தெரியாது.

  Facts About Recent Internet Sensational Taiwan Girl Chou Tzu Yu

  ஏன், சிலர் முக ஜாடையை வைத்து இந்த இளம்பெண்ணை ஒரு கொரியன் என்று நினைத்து தங்கள் ஸ்டேடஸ் பதிவுகளில் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த இளம் பெண் கொரியனே இல்லை என்பது தான் உண்மை.

  அப்ப இந்த பொண்ணு யாரு, இவங்க பேரு என்ன, எந்த நாட்டை சேர்ந்தவங்க.. என்ன பண்றாங்க..?ன்னு பல கேள்விகள் இவரது திடீர் ரசிகர்கள் மத்தியில் இருக்கலாம்... அதற்கான ஒட்டுமொத்த விடைகளும், இவரை பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளும் இந்த தொகுப்பில் காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சௌ -ட்சூ-யு

  சௌ -ட்சூ-யு

  சௌ -ட்சூ-யு (Chou Tzu-yu) என்பது தான் இந்த செக்க செவந்த அழகியின் உண்மையான பெயர். இவரது சொந்த நாடு தைவான். இவர் தென் கொரியாவில் வசித்து வருவதாக அறியப்படுகிறது. இவர் தென் கொரியா பாப் பாடல் இசை குழுவிலும், சில தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பங்கெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சர்ச்சை!

  சர்ச்சை!

  கடந்த 2015ல் தென் கொரியாவின் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்துக் கொண்ட போது, சௌ -ட்சூ-யு ரிபப்ளிக் ஆப் சீனாவின் கொடியை ஏந்தி வந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது. அந்த எதிர்பாராத நிகழ்வுக்காக் பிறகு சௌ -ட்சூ-யு மன்னிப்பும் கோரினார். மன்னிப்பு கேட்டு சௌ -ட்சூ-யு வெளியிட்ட அந்த வீடியோ தைவானில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  பிறப்பு!

  பிறப்பு!

  சௌ -ட்சூ-யு பிறந்தது தைனன் என்றழைக்கப்படும் தைவான் நாட்டில் இருக்கும் ஒரு சிறப்பு முனிசிபாலிட்டி நகரில். இவரது பிறந்த தேதி ஜூன் 14, 1999. அதாவது சௌ -ட்சூ-யு-வின் வயது வெறும் 19 தான். கடந்த 2012ம் ஆண்டு மியூஸ் கலை கூடத்தில் இவரது திறமையை கண்டறிந்தனர். பிறகு இவர் தென் கொரியாவிற்கு இடம் பெயர்ந்தார்.

  பயிற்சி!

  பயிற்சி!

  அந்த ஆண்டே நவம்பர் மாதம் 15ல் இருந்து தனக்கான பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டார் சௌ -ட்சூ-யு. சிக்ஸ்டீன் என்ற தென் கொரியாவின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் 2015ம் ஆண்டு பங்கெடுத்துக் கொண்டார் சௌ -ட்சூ-யு. அப்போது தான் ட்வைஸ் எனப்படும் புதிய இசை குழுவில் சௌ -ட்சூ-யுவிற்கு இடம் கிடைத்தது.

  மூன்றாவது!

  மூன்றாவது!

  கல்லப் (Gallup) என்று கூறப்படும் கொரிய சர்வேவில் வெளியான தகவலின் படி 2016ம் ஆண்டு தென் கொரியாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஐகான் பட்டியலில் சௌ -ட்சூ-யு மூன்றாம் இடத்தை பிடித்தார் என்று அறிய வருகிறது. தற்சமயம் சௌ -ட்சூ-யு ஹன்லிம் மல்டி ஆர்ட்ஸ் பள்ளியில் படித்து வருகிறார்.

  அழகி!

  அழகி!

  கடந்த வருடம் வெளியான் மிகவும் அழகான முகம் கொண்ட முதல் நூறு பேருக்கான பட்டியலில் கே-பாப் இசை குழுவை சேர்ந்த சௌ -ட்சூ-யு மூன்றாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இது முதல் முறை அல்ல. 19 வயதான சௌ -ட்சூ-யு. இதற்கு முன் 2015ம் ஆண்டு இதே பட்டியலில் 13வது இடத்தையும், 2016வது ஆண்டு 8வது இடத்தையும் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இசை வீடியோக்கள்!

  இசை வீடியோக்கள்!

  தான் முறையாக அறிமுகம் ஆவதற்கு முன்னரே, சௌ -ட்சூ-யு GoT7, Stop Stop it, Miss A, Only You போன்ற இசை இசை வீடியோக்களில் தோன்றி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சௌ -ட்சூ-யு இடம் பெற்றிருக்கும் ட்வைஸ் என்ற இசை குழுவில் உயரமானவர் இவர் தானாம். Sistar மற்றும் Hyroin என்பவர்களது பெரும் ரசிகை சௌ -ட்சூ-யு என்று கூறப்படுகிறது.

  வினோத பழக்கங்கள்!

  வினோத பழக்கங்கள்!

  சௌ -ட்சூ-யு'வுக்கு ஐஸ் க்ரீம் என்றால் கொள்ளை பிரியம். இவர் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு ஐஸ் க்ரீம் தான்.

  மேலும், இவருக்கு தூங்கும் போது, இதழ்களை ஒருவருக்கு முத்தமிடுவது போல வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறதாம்.

  இவருக்கே தெரியாமல் இவர் இப்படி செய்கிறார் என்றும் கூறுகிறார்கள். அப்படி யார் தான் சௌ -ட்சூ-யுவின் கனவில் வருகிறார் என்று தெரியவில்லையே...

  காய்ச்சல்!

  காய்ச்சல்!

  அனைவரையும் போல, தானும் ஸ்கூலுக்கு போக பிடிக்கவில்லை என்றால் உடல் நலம் சரி இல்லாதது போல நடித்து ஏமாற்றி விடுப்பு போட்டுவிடுவேன் என்கிறார் சௌ -ட்சூ-யு. அடடே! இந்த பொண்ணு நம்ம இனமப்பா!!!

  சௌ -ட்சூ-யு தனது மிடில் ஸ்கூல் பரிச்சை எழுத தைவான் பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது இவர் கையொப்பம் இட்டிருந்த டெஸ்ட் இப்போது அந்த பள்ளியில் காட்சி பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது.

  சாக்லேட்!

  சாக்லேட்!

  சௌ -ட்சூ-யுவின் அண்ணன் இவரை சாக்லேட் என்று சொல்லியே பாசமாக அழைக்கிறார். மேலும், ஐடல் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் அம்பு விடும் போது எதிர்பாராமல் இவரது கூந்தல் அம்பு சென்ற வேகத்தில் பறக்க. அந்த வீடியோ வைரலாக பரவியது. சமீப நாட்களாக நம் இளைஞர் அதிகம் பகிர்ந்த வீடியோவும் அது தான்.

  கொசுறு தகவல்கள்!

  கொசுறு தகவல்கள்!

  அதிகாலை எழுவது இவரது பழக்கம். நாய்கள் என்றால் கொள்ளை பிரியம், ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக முதல் முறையாக ஸ்கெட் போர்ட் பயின்றார். ஆனால், இப்போது இவர் பெயரில் ஸ்கெட் போர்ட் விளையாட்டு செயலியே இருக்கிறது. மிக எளிதாக யாருடனும் பழக கூடிய பழக்கம் கொண்டிருக்கும் சௌ -ட்சூ-யு, அவ்வளவு சீக்கிரம் எதற்கும் அழ மாட்டார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Facts About Recent Internet Sensational Taiwan Girl Chou Tzu Yu

  Interesting Facts and Biography of Recent Internet Sensational and the most beautiful taiwanese singer Miss Chous Tzu Yu.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more