பெயிண்ட் மூலமும் உயிரை பறிக்கலாம்! உறைய வைக்கும் கடந்த கால வரலாறு!!

Subscribe to Boldsky

இன்றைக்கு நம் வீடுகளில் அல்லது அலுவலகங்களில் வால் பேப்பரை ஒட்டி அலங்கரிப்பது சகஜமாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் சுவற்றில் பேப்பர் ஒட்டும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று தெரியுமா? வீட்டில் அடிக்கிற பெயிண்ட்டில் விஷத்தை கலந்து அதை சுவர்களில் பூசி அதனை சுவாசிப்பதன் மூலமாக மக்கள் இறந்தார்கள்.

அதன் தாக்கத்தை குறைப்பதற்காக சுவற்றில் பேப்பரை ஒட்டினார்கள். 1778 ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த கார்ல் ஸ்கீலீ என்ற வேதியியலாளர் அற்புதமான ஓர் பச்சை நிற பெயிண்ட்டை கண்டுபிடித்தார். அந்த பெயிண்ட்டை இவரது பெயரிலேயே ஸ்கீலீ க்ரீன் என்று அழைக்கப்பட்டது.

ஆர்ட்டிஸ்ட்கள், வீட்டை அலங்காரம் செய்கிறவர்கள் மத்தியில் இந்த நிறம் ஏகப்பிரபலமானது. இதுவரை இல்லாத வகையில் புதுமையான நிறமாக இருந்ததால் நிறைய வரவேற்பும் கிடைத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்த நிறத்தை கொண்டு வருவதற்காக அதில் பலதரப்பட்ட கெமிக்கல்கள் சேர்க்கப்பட்டிருந்தது அவற்றில் அர்சினிக் என்ற கெமிக்கல் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டிருந்தது. அதோடு அவை தான் உயிரை பறிக்கும் ஆபத்தையும் பெற்றிருந்தது.

அதற்காக எல்லா பச்சை நிற பெயிண்ட்டிலும் அர்சினிக் சேர்க்கப்பட்டிருக்கும் என்ற அர்த்தமல்ல பிற சாதாரண பச்சை நிற பெயிண்ட்டுகளும் இருக்கத்தான் செய்தன.

Image Courtesy

#2

#2

ஆரம்பத்தில் அர்சினிக் என்ற ஆபத்தான பொருள் இந்த பெயிண்ட்டில் கலக்கப்பட்டிருக்கிறது. அது உயிரையும் பறித்துவிடும் என்று யாருக்கும் தெரியாது பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

புதிய அறிமுகம் என்பதால் சலுகைகள் மற்றும் விலை குறைவாக கிடைத்ததினால் பலரும் தங்களது வீடு மற்றும் அலுவலகங்களுக்கு இந்த நிறத்தை வாங்கினார்கள்.

Image Courtesy

#3

#3

இந்த பெயிண்ட்டை உபயோகப்படுத்திய சில நாட்களில் வீட்டில் இருந்தவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட ஆரம்பித்தது. மருத்துவர்களுக்கும் எதனால் இவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை தற்காலிக மருந்துகளை கொடுத்தனுப்பி சமாளித்தார்கள்.

சுற்றுப்புறச்சூழல் ஏதேனும் பாதிப்பு உண்டாகியிருக்குமா என்று சந்தேகம் ஏற்பட அதையும் பார்த்தார்கள், வித்யாசமாக எதுவும் தெரியவில்லை, உணவில் தண்ணீரில் ஏதேனும் மாற்றம் உண்டானாதால் வந்த விளைவா என்று சோதித்தார்கள் அதுவும் இல்லை. வீடு மற்றும் சுற்றுப்புறம் எல்லாம் சுத்தமாகத்தான் இருந்தது.

Image Courtesy

#4

#4

ஆனால் நாளுக்கு நாள் நோய் பாதிப்பு உண்டாகும் மக்களின் அளவு மட்டும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்கள் அத்தனை பேரும் ஸ்கீலீ க்ரீன் எனப்படுகிற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பச்சை நிற பெயிண்ட்டை தங்கள் வீடுகளுக்கும், வேலை செய்யும் இடத்திலும் அடித்திருந்தார்கள்.

இதுவரை சிகிச்சைக்கு வந்தவர்கள் அத்தனை பேரிடமும் இது குறித்து கேட்கப்பட்டது. அனைவரும் ஒரே மாதிரியாக ஸ்கீலீ பெயிண்ட் பயன்படுத்தியிருப்பதாய் சொன்னார்கள்.

Image Courtesy

#5

#5

பெயிண்ட்டில் தான் எதோ ஒரு மர்மம் இருப்பதாக கண்டுபிடித்தார்கள். அந்த பெயிண்ட் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியில் அதில் அர்சீனிக் அளவுக்கு அதிகமாக இருப்பதும் அது தான் இத்தனை களேபரங்களுக்கு காரணம் என்பதும் தெரியவந்தது.

அர்சீனிக் விஷம் என்பது தெரியும். அதனை சாப்பிடக்கூடாது என்று அறிந்து வைத்திருந்த நாங்கள் எங்களுக்கு மிக அருகில் பெயிண்ட் வடிவத்தில் அந்த விஷம் இருந்ததை நாங்கள் உணரவேயில்லை. பெயிண்ட்டில் எல்லாம் விஷயமிருக்குமா என்று எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என்றார்கள் மக்கள்.

மக்களுக்கு இந்த தெளிவு கிடைப்பதற்குள் பலர் தங்கள் உயிரையும் விட்டிருந்தார்கள்.

Image Courtesy

#6

#6

1850 ஆம் ஆண்டு டாக்டர் லெதிபை தான் அர்சினிக் விஷம் அதிகப்படியாக உடலில் சேர்வதினால் தான் இந்த உபாதைகள் ஏற்படுவதாக கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பை செய்தித்தாள்களில் எல்லாம் வெளியிடப்பட்டது.

அந்த பெயிண்ட்டை நீங்கள் உண்ண வேண்டும் என்று அவசியமில்லை. பல மணி நேரங்கள் அந்த பெயிண்ட் அடித்திருக்கும் அறையில் நேரத்தை செலவிட வேண்டும் என்றும் கூட அவசியமில்லை ஒரேயொருமுறை அந்த அறையில் மூச்சை சுவாசித்தாலே அதன் தாக்கம் உங்கள் உடலில் ஏற்பட்டுவிடும்.

Image Courtesy

#7

#7

மருத்துவரின் இந்த ஆய்வு முடிவை எல்லாரும் ஒரே மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு பெயிண்ட் எப்படி மனிதரைக் கொல்லும். இது அப்பட்டமான பொய், விளம்பர யுத்தி என்று எதேதோ புகார் சொன்னார்கள். பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்ட இது குறித்தான செய்திகளுக்கு ஏராளமான விமர்சனக் கடிதங்கள் வந்தது.

ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை பகிர மருத்துவர்களின் ஆய்வு முடிவு தான் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பெற்றது.

Image Courtesy

#8

#8

ஓர் அனுபவக் கடிதத்திலிருந்து... எனக்கு தெரிந்த ஓர் குடும்பம் இருக்கிறது, அந்த வீட்டில் இருந்த குழந்தை திடீரென்று கடுமையாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக குழந்தையை வெளியூருக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்கள். குழந்தை பூரண குணமடைந்ததும் மீண்டும் அதே வீட்டிற்கு திரும்பினார்கள். வீட்டிற்கு திரும்பிய சில நாட்களில் மீண்டும் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அப்போது பெற்றோருக்கும் கண்ணெரிச்சல், தலைவலி, மேல் உதட்டில் வீக்கம், மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்பட்டது.

Image Courtesy

 #9

#9

அதன் நிறம் மக்கள் மத்தியில் நிறைய வரவேற்பு இருந்ததாலும் அதிகமான வருமானம் கிடைத்ததாலும் இந்த பெயிண்ட்டில் விஷமில்லை என்று ஒரு பக்கம் விளம்பரமும் நடந்தது.

தடாலாடியாக அந்த பச்சை நிற பெயிண்ட்டை சுத்தமாக பயன்படுத்துவதையே மக்கள் நிறுத்தினார்கள். அதன் தாக்கம் மற்ற நிறங்களுக்கும் பரவியது. பச்சை நிறம் மட்டுமல்ல எல்லா நிற பெயிண்ட்டிலும் அர்சினிக் விஷம் இருக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது. இந்நிலையில் 1859 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் வூலம்ஸ் என்பவர் அர்சினிக் இல்லாத பெயிண்ட்டை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse
    English summary

    Facts About Historic Paint Poison

    Facts About Historic Paint Poison
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more