For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  அமெரிக்காவையே அழிக்கப்போவது இந்த குட்டி குளம் தானாம்... ஆராய்ச்சியாளர்கள் தரும் எச்சரிக்கை

  By Suganthi Rajalingam
  |

  பல மில்லியன் வருடங்களாக வடமேற்கு வயோமிங் மற்றும் தென்மேற்கு மொன்டானா பகுதிகளில் உலகத்தையே அச்சுறுத்தி வரும் ஒரு இயற்கை நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. அப்படியே எப்பொழுதும் வழியும் தகதகவென சுட்டெரிக்கும் வெந்நீர் ஊற்றுகள், கொப்புளிக்கும் குமிழ் குழம்புகள் , வெப்ப நீரூற்றுகள், தீப்பிழம்புகள் இவைகளின் ஒட்டுமொத்த உருவம் தான் இந்த சூப்பர் மஞ்சள் கல் எரிமலை என்றழைக்கப்படுகிறது .

  yellow stone volcano research details

  image courtesy

  இந்த அதிசய புவியியல் உலகம் இயற்கை மாற்றத்திற்கு வியத்தகு காட்சியாக எழுந்து நிற்கிறது. இதைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் நிறைய தகவல்களை சேகரித்து வருகின்றன. இது ஒரு உலகத்தையே அச்சுறுத்தும் நிகழ்வாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதெப்படி ஒரு குட்டி குளம் அமெரிக்காவையே அழிக்கும் நீங்க கேட்கலாம். ஆனால் அது எரிமலைக் குளம் என்பது தான் இதுல டுவிஸ்ட்டே...

  இதுவரை நீங்கள் காணாத உலகத்தையே அச்சுறுத்தும் சீறுப் பாயும் எரிமலைக் வெடிப்பு பற்றிய சுவாரஸ்யமான தகவல்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பரப்பளவு

  பரப்பளவு

  இது மஞ்சள் கல் கால்டெரா என்று அழைக்கப்படுகிறது. இதன் பரப்பளவு ராக்கி மலைப்பகுதியில் 55 கிலோ மீட்டர் (35-44 மைல்கள்) வரை இருக்கும். இவ்வளவு பெரிய பரப்பளவில் உள்ள எரிமலை சீறிப்பாய்ந்தால் எப்படியிருக்கும்?... எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அதன் தாக்கம் இருக்கும். சற்று நினைத்துப் பாருங்கள். என்ன நினைத்துப் பார்க்கவே பயமா இருக்கா?... இதெல்லாம் கூட பரவாயில்லங்க. இன்னும் உங்களை ஆச்சர்யப்பட வைக்கும் ஏராளமான விஷயங்கள் அதில் இருக்கு. நீங்களே படிச்சு தெரிஞ்சிக்கோங்க.

  image courtesy

  இயற்கை சீற்றம்

  இயற்கை சீற்றம்

  இது 2.1 மில்லியன் வருடங்களாக லாவா குழம்பை கக்கிக் கொண்டும் சூடான வாயுவை வெளிவிட்டு கொண்டும், மாசுக்களை காற்றில் வீசிக் கொண்டும், 100 கிலோமீட்டர் வரை நிலப்பரப்பை விரிசலாக்கி கொண்டும் ஒரு பயங்கரமான புவியியல் மாற்றத்தில் சீறிக் கொண்டே இருக்கிறது.

  image courtesy

  உலக அதிசயம்

  உலக அதிசயம்

  உலகத்திலேயே பெரிய கால்டெரா என்றால் அது இந்த மஞ்சள் கல் கால்டெரா தான். இதன் அடிப்பகுதியில் நிறைய மேக்மா குழம்புகளுடன் எரிமலை ஆராய்ச்சியாளர்களுக்கு பூமியில் இது ஒரு நவீன ஆராய்ச்சி வரப் பிரசாதமாக இருந்து வருகிறது.

  எரிமலை நகர்வு

  எரிமலை நகர்வு

  இந்த மஞ்சள் கல் எரிமலை யிலிருந்து சூடான குழம்புகள் 100 கி. மீ வரை பூமிக்கடியில் உள்ள அடுக்குகளில் பாய்ந்து ஓடிகிறது. இந்த குழம்புகள் கிட்டத்தட்ட 18 மில்லியன் வருடங்களாக பாய்ந்து அப்படியே உறைந்து பாறை படிகங்களாக பூமியின் மேற்பரப்பில் காணப்படுகிறது. வட அமெரிக்க கண்டத்தில் இது ஒரு நிரந்தர பாறையாக காட்சியளிக்கும் அதிசயத்தை இன்றளவும் நாம் காணலாம்.

  இந்த கால்டெரா கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதியிலிருந்து தென்மேற்கு பூமி தட்டை நோக்கி நகருகிறது.

  எரிமலை வெடிப்பு

  எரிமலை வெடிப்பு

  இந்த கால்டெரா சுமார் 2.1 மற்றும் 1.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தீப்பிழம்பாக வெடித்தது. அதற்கு அப்புறம் 630,000 ஆண்டுகளுக்கு முன்பாக மறுபடியும் இது நடந்தது. அப்படியே வானம் முழுவதும் ஒரே சாம்பல் மேகங்கள் மட்டுமே 1000 கிலோமீட்டர் வரை படர்ந்து புகைமூட்டமாக காணப்படும்.

  இதை ஒப்பிடும் போது தற்போது நடப்பது எல்லாம் மிகச்சிறிய எரிமலை வெடிப்பே.

  தகதகவென இருக்கும் கால்வாய்

  தகதகவென இருக்கும் கால்வாய்

  எரிமலையில் உள்ள மேக்மா கால்வாய் 80 கிலோமீட்டர் நீளமும் (47 மைல்கள்) 20 கிலோமீட்டர் அகலமும் (12 மைல்கள்) கொண்டிருக்கும். இங்கே நிறைய உருகிய பாறைகள் பூமிக்கடியில் அமைந்திருந்து சீறிக் கொண்டே இருக்கும். இந்த கால்வாய் வழியாக எரிமலைக் குழம்பு லாவா பாய்ந்தோடும் போது பூமியில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும்.

  அதீத வெப்பமுடைய நீரும்,கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும்,அதீத விசையுடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படுகிறது.இவற்றுடன் தீப்பிழம்பும்,கரியமில வாயுவும்,கரும்புகையும் சேர்ந்து பேரழிவை தற்போது ஏற்படுத்தி வருகிறது . ஆனால் எரிமலை வெடிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த வித அறிகுறியும் ஏற்படவில்லை.

  ஆராய்ச்சி

  ஆராய்ச்சி

  ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி இதுவரை காணாத மிகப்பெரிய எரிமலை சீற்றத்தை இது உண்டாக்கும் என்பதும் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  மறுபடியும் சீறுமா

  மறுபடியும் சீறுமா

  இந்த மஞ்சள் கல் எரிமலை மறுபடியும் சீறுமா என்ற பெரிய குழப்பம் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து வருகிறது. கடந்த 70,000 வருடங்களாக இது அமைதியாக இருந்து வருகிறது என்றும் இன்னும் 1000 வருடங்கள் அமைதியாக இருக்கும் என்றும் எப்பொழுது பேரழிவு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து வருகிறது.

  என்ன பேரழிவு நடக்கும்?

  என்ன பேரழிவு நடக்கும்?

  இது அமெரிக்காவின் மையப் பகுதியில் அமைந்து இருப்பதால் அந்த நாடு முழுவதும் கிட்டத்தட்ட 800 கிலோ மீட்டர் (497 மைல்கள்) சாம்பல் காற்றும் புகை மூட்டங்களும் தான் காணப்படும். இதன் எரிமலை பேரழிவின் தீவிரத்தை பொருத்து மற்ற நாடுகளும் இதனால் பாதிக்கப்படலாம் என அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

  பூமியில் மாற்றம்

  பூமியில் மாற்றம்

  இது பூமியையே அழிக்காவிட்டாலும் இதன் சாம்பல் மேகங்கள் பசுமை வாயுக்களை வெளியிட்டு காலநிலை மாற்றம், சூரிய வெப்பம் அதிகரிப்பு, பனிமலை உருகுதல், பருவநிலை மாற்றம், உணவு உற்பத்தி போன்றவற்றை பாதிக்க வாய்ப்புள்ளது.

  எச்சரிக்கை

  எச்சரிக்கை

  இந்த எரிமலை வெடிப்பை அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நிலநடுக்கம், ஹைட்ரோதெர்மல் நிகழ்வு, எரிமலையின் அடிப்பகுதி நிலை போன்றவற்றை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். எரிமலை மேக்மா ஆரம்பித்து விட்டவுடன் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுதல், எச்சரிக்கை விடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது.

  image courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync
  English summary

  Exploring the Yellowstone Supervolcano

  super volcano is The official name for this region is the "Yellowstone Caldera", and it spans an area about 72 by 55 kilometers (35 to 44 miles) in the Rocky Mountains.The caldera has been geologically active for 2.1 million years, periodically sending lava and clouds of gas and dust into the atmosphere, and reshaping the landscape for hundreds of kilometers. Yellowstone Caldera is among the world's largest such calderas. Research about these volcano eruptions is dangerous one for the world.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more