For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உள்ளாடை வாங்க மட்டும் வருடம் ரூ. 2.25 லட்சம் செலவழிக்கும் பெண் - அப்படி என்ன இருக்கு அதுல?!

By John
|

புகை, மது, மாது, கஞ்சா மற்றும் இப்படியான இதர பொருட்கள் தான் போதை. அதன் மீது அதீத ஆர்வம் கொண்டிருப்பது தான் அடிக்ஷன் என்று நீங்கள் நினைத்தால் தவறு. உலகளவில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில், சராசரியாக மூன்றில் ஒரு நபருக்கு அடிக்ஷன் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அடிக்ஷன் என்பது எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதனுடன் மிதமிஞ்சிய அளவில் ஒன்றி போவது. எடுத்துக்காட்டாக சிலரால் டீ, காபி குடிக்காமல் இருக்கவே முடியாது. ஒரு நாளுக்கு ரெண்டு, மூன்று என்றால் பராவாயில்லை. ஆனால், சிலர் நாளுக்கு பத்து தடவைக்கும் மேலாக டீக் குடிப்பார்கள்.

Ellie Hatfull, Underwear Addict Spends More Than 2 Lakh Per Annum Every Year!

All Image Source: laceandhaze / Instagram

சிலரால் படம் பார்க்காமல் இருக்க முடியாது. சிலர் ஃபேஸ்புக் ஃபீட் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஏன் சென்ற ஆண்டு பெங்களூரில் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடி வந்த ஆணை கைது செய்த போது தான். அவருக்கு பெண்களின் உள்ளாடை மீது அடிச்க்ஷன் என அறியப்பட்டது.

இதுப்போல, ஒரு பெண் உள்ளாடை வாங்குவதில் அடிக்டாகி இருக்கிறார். இவர் வருடத்திற்கு இந்திய மதிப்பில் ரூ. 2.25 லட்சம் உள்ளாடை வாங்க மட்டுமே செலவழிக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எல்லீ!

எல்லீ!

எல்லீ ஹேட்ஃபுல் (27), தன்னைத்தானே உள்ளாடை மீது அடிக்ட் கொண்டவளாக கூறிக் கொள்ளும் இளம்பெண். இவர் ஒவ்வொரு வருடமும் அழகான, வித்தியாசமான உள்ளாடைகள் வாங்க 2.25 இலட்சம் வரை செலவு செய்கிறார். இந்த அடிக்ஷன் இவருக்கு உண்டாக காரணம், இவரது அலுவலகத்தில் இருந்த கெடுபுடி தான் என கூறி இருக்கிறார்.

ட்ரெஸ் கோட்!

ட்ரெஸ் கோட்!

27 வயது நிரம்பிய எல்லீக்கு சிறு வயதில் இருந்து உள்ளாடைகள் மீது அதிகம் ஆர்வம் இருந்திருக்கிறது. இப்போது இவரிடம் 150க்கும் மேற்பட்ட வித்தியாசமான உள்ளாடைகள் இருக்கின்றனவாம். ஆனால், இது சார்ந்த அடிக்ஷன் இவருக்கு சிறு வயதில் இருந்து ஏற்பட்டது இல்லை. அலுவலகம் சென்ற போது, ஸ்ட்ரிக்ட் ட்ரஸ் கோட் ஃபாலோ செய்ய கூறி இருக்கிறார்கள். இதனால், தன்னுள் இருந்து ஃபேஷன் விரும்பிக்கு ஏற்பட்ட ஒரு விதமான தாக்கத்தால் தான் நான் உள்ளாடை மீது அடிக்ட் ஆனேன் என்று கூறி இருக்கிறார் எல்லீ.

உணர்ச்சி!

உணர்ச்சி!

அலுவலகத்திற்கு சாதாரணமான ஃபார்மல் உடை அணிந்து சென்றாலும், உள்ளே தனக்கு பிடித்து வித்தியாசமான உள்ளாடைகள் தான் அணிந்து செல்வேன். இதை யாரும் காண இயலாது என்றாலும். எனக்கு இது பிடித்திருக்கிறது. இது தான் என்னை முழுமையாக, உண்மையாக உணர செய்கிறது என்ற எல்லீ கூறி இருக்கிறார்.

அதிக செலவு!

அதிக செலவு!

ஒவ்வொரு முறை உள்ளாடை வாங்கும் போதும், அதற்கு தேவையான அனைத்து பிற உபகரணங்களையும் சேர்த்து ஒரு செட்டாக வாங்கும் மனோபாவம் கொண்டிருக்கிறார் எல்லீ. இதனால், ஒவ்வொரு முறை உள்ளாடை வாங்கும் போதும் எல்லீ நிறைய பணம் செலவழிக்க நேரிடுகிறது.

சிட்னி!

சிட்னி!

எல்லீ இப்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வருகிறார். இவரது இந்த விசித்திரமான அடிக்ஷன் சில நேரம் அலுவலகத்தில் சிக்கலாகிப் போகிறதாம். சிலநேரம் எப்படியோ இந்த உள்ளாடை சமாச்சாரம் குறித்து அறிந்துக் கொள்ளும் மேலாண்மை அதிகாரிகள், எல்லீயை அழைத்து இது அலுவலக கலாச்சாரத்திற்கு ஏற்றது என்று கூறி எச்சரிக்கை செய்துள்ளனர்.

சமாளிப்பு!

சமாளிப்பு!

ஏதோ ஒரு வகையில் ஃபார்மல் ஆடையை தாண்டி வெளிப்படும் தன் உள்ளாடையை கண்டு, இந்த சின்ன விஷயமும் அலுவலக கலாச்சாரத்தை சீர்குலைக்கும், என மேலாளர் எச்சரிக்கை செய்யும் போது, நாளை இருந்து கவனமாக இருந்துக் கொள்கிறேன் என்று கூறி சமாளித்துக் கொள்வேன் என்கிறார் எல்லீ.

இன்ஸ்டாகிராம்!

இன்ஸ்டாகிராம்!

எல்லீ ஒரு பிளாகர். இவர் இன்ஸ்டாகிராமில் இயங்கி வருகிறார். எல்லீயை இன்ஸ்டாகிராமில் 44 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தனது பிளாகில் தன்னை பற்றி எழுதி வரும் எல்லீ, தன்னை போன்றே இருக்கும் வினோதமான மக்களுடன் பழக தான் விரும்புவதாகவும். அதற்காக தான் தனி பக்கம் ஒன்றை உருவாக்கி கலந்துரையாடி வருகிறேன்.

முயற்சி!

முயற்சி!

சிறு வயதில் இதுக்குறித்து பேச, எழுத எனக்கு போதிய முதிர்ச்சி இருக்கவில்லை. இன்றளவிலும் என்னிடம் கொஞ்சம் தடுமாற்றம் இருப்பினும். என் பிளாக் மூலமாக என்னை நானே மேம்பட, என் திறமையை ஊக்கவித்துக் கொள்ள முயல்கிறேன் என எல்லீ கூறி இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ellie Hatfull, Underwear Addict Spends More Than 2 Lakh Per Annum Every Year!

Ellie Hatfull, Underwear Addict Spends More Than 2 Lakh Per Annum Every Year!
Story first published: Thursday, October 11, 2018, 14:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more