For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஸ்னில வேல பாக்கணும்னா இதெல்லாம் செய்யணுமா?

டிஸ்னியில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக இந்த விதிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.

|

எல்லாருக்கும் மிகவும் பிரபலமான நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்ற ஆசையிருக்கும், ஒரு பக்கம் அப்படி ஆசையிருந்தால் இன்னொரு பக்கம் அங்கே சூழல் எப்படியிருக்குமா? அங்கே எப்படி வேலை வாங்குவாரக்ள் நம்மால் அங்கே தாக்கு பிடிக்க முடியுமா என்ற பல்வேறு கேள்விகள் எழும்.

பெரும் நிறுவனங்களுக்கு போவதை விட அங்கே நமக்கு கொடுக்கப்படுகிற டாஸ்க்குகளை எல்லாம் சமாளித்து தொடர்ந்து நீடிப்பது தான் பெரும் சவலான விஷயமாக இருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கார்டூன்களை விரும்பாதவர் இல்லை என்றே சொல்லலாம்.... கார்டூனின் புகழிடமாக திகழக்கூடிய டிஸ்னி லேண்டில் வேலை கிடைத்தால் எப்படியிருக்கும், ஆச்சரியப்பட ஆரம்பிக்கும் முன்னர்..... அங்கு பணியாற்றுபவர்களுக்கு அங்கே என்னென்ன விதிமுறைகளை வித்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டு விடுங்கள்.... டிஸ்னியில் வேலைக்குச் சேர வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த விதிமுறைகளையும் சற்று பரிசீளித்தால் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நீங்கள் டிஸ்னியில் பணியாற்ற ஆரம்பித்தால் உங்களையெல்லாம் பணியாளர்கள் என்று சொல்லமாட்டார்கள், கேஸ்ட் மெம்பர் என்று தான் அழைப்பார்கள். அங்கே கார்டூன் கேரக்டரில் நடிப்பவர்களிடமிருந்து, கேண்டீனில் இருக்கும் நபர் வரையில் கேஸ்ட் மெம்பர் தான்.

Image Courtesy

#2

#2

எனக்கு தெரியாது..... என்று நீங்கள் சொல்லவே முடியாது, ஏனென்றால் அப்படி சொல்ல உங்களுக்கு அனுமதியில்லை. எப்படியாவது அதற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும், ஒன்று நீங்களாக தேடலாம் அல்லது பிறரது உதவியை நாடலாம்.

Image Courtesy

#3

#3

மீசை தாடி வளர்த்துக் கொள்ளலாம் ஆனால் அவை அழகாக ட்ரிம் செய்யப்பட்டிருக்க வேண்டும், மாறாக தாடியை ஸ்டைலாக வளர்க்கிறேன் என்று புதுவிதமான வடிவத்திலோ அல்லது நீளமாகவோ வளர்க்க கூடாது.

கூடுதலாக உங்களது உதட்டை தாண்டி மீசை வளர்க்க கூடாது. மீசையை முறுக்கிக் கொள்வதெல்லாம் அங்கு வாய்ப்பேயில்லை.

Image Courtesy

#4

#4

ஆண் மற்றும் பெண் கேஸ்ட் மெம்பர்கள் தங்களது புருவ முடிகளை எடுக்க அனுமதியில்லை. ஆண்கள் தங்களது முடியை சட்டை காலருக்கு கீழே வளரவிடக்கூடாது. பெண்கள் தங்கள் முடியை அலங்கரிக்க பேண்ட் பயன்படுத்தலாம் ஆனால் பீட்ஸ் பயன்படுத்தக்கூடாது.

Image Courtesy

#5

#5

ஒவ்வொரு கேரக்டருக்கும், ஒவ்வொரு வேலைக்கும் கடுமையான தேர்வு முறைகள் இருக்கும். இங்கே உங்களது உயரம் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. இளவரசி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்கிறவர்களானால் 5'4 மற்றும் 5'8ல் உயரம் இருக்கலாம்.

அதே போல பெண்கள் நகத்தை விட கால் இன்ச் வளர்த்து கொள்ளலாம்.... ஆண்களுக்கு அதுவும் இல்லை.... முக்கியமாக நெயில் பாலிஷ் போட அனுமதியில்லை

Image Courtesy

#6

#6

இஷ்டத்திற்கு நம் உடலை நோட்டிஸ் போர்டு போல தத்துவங்களை டேட்டூ குத்திக் கொள்வதெல்லாம் இங்கு சாத்தியமில்லை அதே போல ஃபேஷன் என்று சொல்லி நாக்கு, காது,புருவம் போன்ற இடங்களில் விதவிதமாக வளையங்களை அணிவதும் தடை!

Image Courtesy

#7

#7

அங்கு பணியாற்றுபவர்கள் கண்ணாடி அணியும் வழக்கமுடையவர்களாக இருந்தால் ஃபிரேம் இல்லாத கண்ணாடியை மட்டும் தான் அணிய முடியும். குறிப்பாக எதாவது லோகோ தெரிவது போலயோ அல்லது பிரண்ட் பெயர் தெரிவது போலயோ அணியக்கூடாது.

Image Courtesy

#8

#8

டிஸ்னி லேண்டில் இருக்ககூடிய தீம் பார்க் எப்போதும் மிகவும் சுத்தமாக இருக்கும், அதற்கு காரணம் என்ன தெரியுமா? அங்கே பணியாற்றுபவர்கள் எல்லாரும் அது உயர்ந்த பொறுப்பில் இருக்கக்கூடிய எம். டியாக இருந்தாலும் சரி, தரையில் குப்பையை கண்டால் அதனை உரிய குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

Image Courtesy

#9

#9

அங்கிருக்கும் ஊழியர்களிடத்தில் நீங்கள் எங்காவது வழி கேட்டால் அவர்கள் சொல்லும் போது ஐந்து விரல்களையோ அல்லது எதாவது இரண்டு விரல்களையோ பயன்படுத்தி தான் நீங்கள் தொடர்ந்து செல்ல வேண்டிய வழியை அடையாளம் காட்டுவார்கள் ஒரு போது ஒற்றை விரலை பயன்படுத்தி வழி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் சில ஊர்களில் ஒற்றை விரலை பயன்படுத்துவது தாக்குவதற்கு, மரியாதை குறைவாக நடத்துவதற்கு ஒப்பாகும்.

Image Courtesy

#10

#10

நீங்கள் டிஸ்னியில் பணியாற்றுகிறீர்கள் என்றால் நிமிடத்திற்கு ஒரு முறை செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் லைஸ் எல்லாம் அல்ல முடியாது. ஏனென்றால் அங்கே பணியாற்றுபவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்தவே தடை.

Image Courtesy

#11

#11

வால்ட் டிஸ்னிக்கு தன்னுடைய பெயரில் வால்ட் என்பது தான் பிடிக்குமாம்..... அப்படி அழைக்கப்படுவதையே விரும்பியிருக்கிறார் அதனால் அங்கு பணியாற்றக்கூடிய ஊழியர்கள் எல்லாருக்கும் அவர்களின் முதல் பெயரை சொல்லியே அழைக்கப்படுகிறார்கள்.

சில நேரங்களில் ஒரே பெயர் இருந்தால் அவருக்கு நிக் நேம் வைக்கப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Disney Land Employee Compulsorily Follow These Rules

Disney Land Employee Compulsorily Follow These Rules
Story first published: Saturday, March 17, 2018, 18:08 [IST]
Desktop Bottom Promotion