சிரியாவில் மக்களை மீட்பவர்கள் ஏன் வெள்ளை ஹெல்மெட் அணிந்திருக்கிறார்கள்?

Posted By:
Subscribe to Boldsky

நம் கண் முன்னால் ஒர் மக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட அந்த நகரமே முற்றிலுமாக உருக்குலைந்து கிடக்கிறது கொத்து கொத்தாக குழந்தைகள் மரணித்துக் கிடக்கிறார்கள்.எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்து வரும் அவர்களைப் பற்றி பல நேரங்களில் செய்திகளின் வாயிலாக படித்திருப்போம்.

சிரியா போர் இந்த வார்த்தையை சொல்லும் போதெல்லாம் சமூகவலைதளத்தில் பரவிய சில படங்கள் நம் கண் முன்னால் விரியலாம்.கட்டிடங்கள் எல்லாம் சிதைந்து மண் குவியலாக கிடக்கும் அதில் ரத்தம் ஒழுக ஒரு சிலர் உயிருக்கு போராடலாம், அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிற படங்கள் ஆகியவற்றை கடந்து வந்திருப்போம்.

இந்த மக்களை எல்லாம் யார் மீட்கிறார்கள் குண்டு வெடித்த,ரசாயன தாக்குதல் நடைப்பெற்ற இடங்களிலிருந்து இந்த மக்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பது யார்? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கிறதா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
3000 வீரர்கள் :

3000 வீரர்கள் :

வான்வழித் தாக்குதலோ, கெமிக்கல் தாக்குதலோ, அல்லது குண்டு வெடிப்போ எந்த வழித் தாக்குதலாக இருந்தாலும் அதில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கென்றே 3000 வீரர்கள் இருக்கிறார்கள் இவர்களை சிரியன் சிவில் டிஃபென்ஸ் என்று அழைக்கிறார்கள்.

அதாவது ஆபத்தான நேரத்தில் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதே இவர்களது பணி.

Image Courtesy

வொயிட் ஹெல்மட் :

வொயிட் ஹெல்மட் :

இந்த சிரியன் சிவில் டெவென்ஸ் பிரிவினர் வொயிட் ஹெல்மட் தான் அணிந்திருக்கிறார்கள் அதே போல இவர்களை வொயிட் ஹெல்மட் டீம் என்று தான் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த மீட்பு குழு ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்டு ஐந்தாண்டுகள் முடிந்திருக்கிறது கடந்த 2013 ஆம் ஆண்டு தான் இவர்கள் ஒரு குழுவாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்

Image Courtesy

நோக்கம் :

நோக்கம் :

இந்த குழுவினரின் முக்கிய நோக்கமே உயிர்களை காப்பாற்றுவது எல்லா மனிதர்களையும் ஆபத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதே இந்த குழுவில் கிட்டத்தட்ட அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இந்த குழுவினர் Right to Livelihood Award என்ற விருதினை வாங்கியிருக்கிறார்கள். இது நோபல் பரிசுக்கு ஒப்பாக பார்க்கப்படுகிறது.

Image Courtesy

உதவி :

உதவி :

இவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முதல் தர பணக்காரர்கள் எல்லாம் உதவி செய்கிறார்கள்.இதே நேரத்தில் இவர்களுக்கு சிரியாவின் அதிபர் பசார் அல் ஆசாத் ஆதரவளார்கள் என்றும் ஒரு பேச்சு உண்டு.

மேற்கத்திய அரசாங்கங்களும் இவர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

Image Courtesy

பலி :

பலி :

காப்பாற்றச் சென்ற இடத்தில் நடந்த அசம்பாவிதங்கள் காரணமாக இந்த வொயிட் ஹெல்மெட் பிரிவினரும் உயிரிழந்திருக்கிறார்கள் இதுவரை 141 மீட்புப்படையினர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீட்பு படையினர் தங்கியிருக்கும் இடங்கள் அவர்களது நிறுவனங்களுக்கும் குறி வைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

Image Courtesy

அலெப்போ :

அலெப்போ :

இந்த சிரியா போரில் மிக அதிகளவு பாதிக்கப்பட்ட நகரமான அலெப்போவில் இந்த மீட்பு படையினருக்கு நான்கு இடங்களில் அலுவலகம் இருந்திருக்கிறது. இவற்றில் மூன்று இடங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இதனால் எங்களாலும் மீட்புப்பணியை தொடர முடியாத அவல நிலை உண்டாகியிருப்பதாக மீட்பு படையினர் தெரிவிக்கிறார்கள்.

Image Courtesy

யார் இவர்கள் :

யார் இவர்கள் :

சிவிலியன் படை என்றதும் ஏதோ ராணுவத்தில் பணியாற்றியிருப்பார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து ஆபத்தான காலங்களில் மக்களை மீட்பது குறித்த படிப்பையும் பயிற்சியையும் முடித்து விட்டு வந்திருப்பார்கள் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள்.

இவர்களும் இவர்களில் பெரும்பாலனவர்கள் அந்த மக்களுடன் மக்களாய் வாழ்ந்தவர்கள் தான். குழுவில் இருப்பவர்கள் எல்லாம் பள்ளி மாணவர்கள், நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள், உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் இப்படியானவர்கள் சேர்ந்து ஆரம்பித்த குழு தான் இது.

Image Courtesy

பயிற்சி :

பயிற்சி :

இந்த மீட்புப் படையில் பணியாற்றுகிறவர்கள் எல்லாம் நம்மைப் போல மிகவும் சாதரணமான மக்கள் தான். ஆனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான பயிற்சியை எடுத்திருக்கிறார்கள் . ஆனால் பிற நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்கும் குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுக்கும் ஏகப்பட்ட வித்யாசங்கள் இருக்கும்.

பல நேரங்களில் மீட்பு பணியின் போதே ஹெலிகாப்டரிலிருந்து குண்டு மழை பொழிவதும் நடக்குமாம்.

Image Courtesy

எண்ணிக்கை :

எண்ணிக்கை :

இந்த மீட்பு படையினர் மீட்பு வேலையையும் தாண்டி பல வேலைகள் செய்கிறார்கள். ராணுவ கட்டுப்பட்டில் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கிற இடம் என எதுவாக இருந்தாலும் மக்களை காப்பாற்ற முதல் ஆளாக நிற்கிறார்கள்.

பதிவுகளில் இவர்கள் அறுபதாயிரம் உயிர்களை காப்பாற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் அதையும் தாண்டி ஏராளமானவர்களை காப்பாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

Image Courtesy

மீட்பு :

மீட்பு :

அவர்களை மீட்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவமனைகளில் சேர்ப்பது, அவர்களின் வாழ்வாதாரம், மீண்டும் வாழ வழி செய்வது,இறந்தவர்களை புதைப்பது ஆகிய வேலைகளையும் இவர்கள் செய்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி யாருமே வெளியில் பேசுவது கிடையாது. இந்த மக்கள் மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஒவ்வொருத்தரிடமும் மனதை உலுக்குகிற ஒர் அனுபவக் கதை இருக்கும் அதை கேட்கிறவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.

Image Courtesy

இன்னும் இருக்கிறார்கள் :

இன்னும் இருக்கிறார்கள் :

கடந்த சில ஆண்டுகளாக ஐஎஸ்ஐஸ் பிரிவினர், தீவிரவாதிகளின் பிரிவினர், அகதிகளாக வெளியேறுகிறவர்கள் குறித்து தான் அதிகமான செய்திகள் வெளியாகிறது.

ஆனால் அவர்களை தாண்டி இன்னமும் கோடிக்கணக்கானோர் தங்கள் உறவுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்து சிரியாவில் வசிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் உயிர்பயத்தில் தான் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குறித்த செய்தி அதிகம் இடம்பெறுவதில்லை.

நாங்கள் இவர்களைப் பற்றியும் வெளியுலகிற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் இந்த குழுவினர்.

Image Courtesy

ஆர்வம் :

ஆர்வம் :

இந்த குழுவினர் குறித்து வொயிட் ஹெல்மெட் என்ற டாக்குமென்ட்ரி வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு சிரமமான தருணங்களையும் அவர்கள் எப்படி மீட்டு மக்களை காப்பாறுகிறார்கள், இந்த குழுவினர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்தெல்லாம் காட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்து சிரியாவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் அதிகரித்திருக்கிறதாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Did You Know About Syrian Civil Defense

Did You Know About Syrian Civil Defense
Story first published: Wednesday, April 11, 2018, 10:20 [IST]