For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூடை கூடையாய் மக்களின் கைகளை வெட்டிக் குவித்த கொடூரம் !

தாயும் மகளையும் வெட்டி கொலை செய்ததுடன் அந்த உடலை சமைத்து உண்டிருக்கிறார்கள். இது போக கூடை கூடையாய் மக்களின் கைகளை வெட்டியிருக்கிறார்கள்.

|

புகைப்படக் கலைஞர் ஆலிஸ் சீலி ஹேரிஸ் என்பவர் எடுத்த புகைப்படம் இன்றளவும் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. 1900களில் நடைப்பெற்ற உண்மை சம்பவ இது. காங்கோவைச் சேர்ந்த மக்களை அடிமைகளாக தங்களது தொழிற்சாலைகளில் வைத்திருந்தார்கள் மக்கள்.

ஒவ்வொரு நாளும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத வகையிலேயே இலக்கு நிர்ணயிக்கப்படும். அந்த அடிமை மக்கள் தொடர்ந்து இலக்கை அடைய போராட வேண்டும். ஒரு முறை நஸ்லா என்பவர் அடிமையாக அந்த ரப்பர் தொழிற்சாலையில் பணியாற்றியவருக்கும் அன்றைய நாளுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது .

ஆனால் நஸ்லாவால் அந்த இலக்கை எட்ட முடியவில்லை கோபமடைந்த அதிகாரிகள் நஸ்லாவிற்கு பாடம் எடுப்பதாய் நினைத்து அவரது ஐந்து வயது மகளான பாலியை கொலை செய்கிறார்கள். அதோடு நிற்காமல் நஸ்லாவின் மனைவியையும் கொலை செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனித கறி :

மனித கறி :

நஸ்லாவின் உயிராக இருந்த மகளை கொன்று விட்டார்கள். அதோடு அந்த குழந்தையின் உள்ளங்கையை நஸ்லாவிற்கு பரிசாக அனுப்பி வைத்தார்கள்.

இறுதி வரையில் இறந்த மனைவி மற்றும் குழந்தை உடலை காண்பிக்கக்கூட இல்லை. அதனையும் அவர்கள் சமைத்து சாப்பிட்டிருந்தார்கள். நஸ்லாவின் வாழ்க்கையே முற்றிலுமாக சிதைந்து போனது.

Image Courtesy

மன்னன் :

மன்னன் :

ஆப்ரிகாவின் மத்தியில் இருக்கிறது காங்கோ ஃப்ரீ என்ற மாநிலம்.இதனை இரண்டாம் லியோபோல்ட் என்ற பெல்ஜிய மன்னர் கைப்பற்றினார். இவர் அந்த காங்கோவில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்.

1885 முதல் 1908 ஆம் ஆண்டு வரை இவர் ஆட்சி செய்த காலத்தில் மட்டும் சுமார் பத்து மில்லியன் ஆப்ரிக்க மக்களை கொன்று குவித்திருக்கிறார். கொல்வது என்பது மிகச் சாதரணமாக அல்ல ஒவ்வொன்றும் மிகக்கொடூரமான முறையில்...

Image Courtesy

கொடூரம் :

கொடூரம் :

வீட்டைக் கொழுத்தி மக்களை உயிருடன் கொள்வது, கை கால்களை வெட்டி ஊனமாக்குவது,வாங்கிய கடனுக்காக குழந்தைகளை அடிமைகளாக தூக்கிச் செல்வது, பிறப்புறுப்புகளை சிதைப்பது, நாட்கணக்கில் பட்டினிப் போட்டு அவர்களை சாவடிப்பது, கண்மூடித்தனமாக சவுக்கடிகளை கொடுப்பது இப்படி மிகவும் கோரமான வகையில் தொடர்ந்து மக்களை சித்திரவதை செய்து வந்திருக்கிறார்.

Image Courtesy

ரப்பர் கம்பனி :

ரப்பர் கம்பனி :

ABIR என்ற ரப்பர் கம்பேனி நிறுவப்பட்டது. இதன் விரிவாக்கம் ஆங்கிலோ பெல்ஜியன் இந்தியா ரப்பர் கம்பேனியாகும். காங்கோவில் இந்த கம்பனி நிறுவப்பட்டது.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட ரப்பர்கள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 1.35 ரூபாய் பெருமானம் கொண்ட ரப்பரை பத்து ரூபாய்க்கு விற்றார்கள் இதனால் கொள்ளை லாபம் கிடைத்தது.

Image Courtesy

வெறி :

வெறி :

லாபத்தை சுவைத்துவிட்ட அந்த அரசனால் இன்னும் இன்னும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி உண்டானது. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ரப்பர் தயாரிக்க வேண்டும் என்று கோட்டா நிர்ணயிக்கப்பட்டும். அது நிறைவேற்றவில்லை என்றால் கைகள் வெட்டப்படும்.

Image Courtesy

மரண தண்டனை :

மரண தண்டனை :

ஆரம்பத்தில் இலக்கை எட்டாதவர்களை கொன்றுவிட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை நிறைவேற்றிய மிலிட்டிரி ஆட்களிடத்தில் நீங்கள் கொன்றுவிட்டதற்கு சாட்சியாக அவர்களின் கையை எங்களிடம் காண்பிக்க வேண்டும் என்றார் மன்னர்.

நமக்கு கை தானே வேண்டும் என்று சொல்லி கைகளை மட்டும் வெட்டி மன்னரிடம் காண்பிக்க அதில் சில காங்கோ மக்கள் தப்பிப் பிழைத்தார்கள்.

Image Courtesy

போட்டி :

போட்டி :

இதனை மிலிட்டிரி சரியாகத்தான் செய்கிறதா என்றும் மன்னர் கண்காணித்தார். உற்பத்தி எவ்வளவு குறைந்திருக்கிறது. அதற்கேற்ப ஆட்களை கொன்றிருக்கானா என்பதை மிலிட்டிரிக்காரர்கள் கொண்டு வந்து கொடுத்த கைகளை எண்ணி கணக்குப் பார்ப்பார்.

மன்னரின் அந்த கணக்குக்கு பயந்தே பல கைகள் வெட்டப்பட்டன.

Image Courtesy

 கொந்தளிப்பு :

கொந்தளிப்பு :

அந்த ஊரில் இருந்த மக்கள் எல்லாரும் ஒன்று கொல்லப்பட்டார்கள் இல்லையெனில் ஊனமாக்கப்பட்டார்கள். இதனால் சிலர் வெகுண்டெழுந்தார்கள். அவர்களுக்கு பாடம் எடுக்க நினைத்த ஓர் இளம் அதிகாரி. அந்த கிராமத்தில் இருக்கிற குறிப்பாக நமக்கு எதிராக பேசியவர்களின் தலையை வெட்டிக் கொண்டுவா என்றார்.

Image Courtesy

பயப்படாதே :

பயப்படாதே :

வீரர்களுக்கு உற்சாகமூட்ட, காங்கோ மக்களை கொல்வதை நீங்கள் பாவமாகவோ அல்லது இரக்கபடவோ வேண்டாம். ஏனென்றால் ரப்பர் கொடுப்பது குறைந்தால் ஐரோப்பியர்கள் நம்மைக் கொன்று விடுவார்கள்.

நம்மை பாதுகாத்துக் கொள்ள இவர்களை கொல்வதில் தவறேதும் இல்லை என்றார்கள்.

Image Courtesy

போனஸ் :

போனஸ் :

கூடை கூடையாக வெட்டப்பட்ட கங்கோ மக்களின் கைகளை கொண்டு சென்று குவித்தார்கள். ரப்பர் உற்பத்தி ஒரு பக்கம் குறைந்து கொண்டே போக வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

வீரர்கள் கொண்டு வரும் கைகளைப் பொருத்தே அவர்களுக்கு சம்பளம்,போனஸ் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டன.

Image Courtesy

மக்கள் தொகை :

மக்கள் தொகை :

லியோபோல்ட் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் வந்த பின்னரும் காங்கோவில் மக்கள் தொகை சரமாரியாக குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே பொய்க்கணக்கு என்கிறார்கள்.கிட்டத்தட்ட அந்த ஊரையே சூரையாடியிருக்கிறார் என்பதே உண்மை.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Daughter And Mother Were Cannibalized In Rubber Company

Daughter And Mother Were Cannibalized In Rubber Company
Story first published: Monday, April 23, 2018, 10:50 [IST]
Desktop Bottom Promotion