Latest Updates
-
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது!
இன்று சனி கிரகத்தின் அனுகிரகத்தைப் பெறப்போகும் ராசிகள் எவையெவை?
வரலட்சுமி விரதமான இன்று 12 ராசிகளில் யாருடன் லட்சுமிதேவி வந்து குடியிருக்கப் போகிறார் என்று இங்கே பார்ப்போம்.
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்.
அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். சனிக்கழமை என்பது மகரம், கும்பம் ராசிகளுக்கான ஜென்ம கிரகங்கள் என்பதால் நன்மைகள உண்டாகும்.

மேஷம்
உங்களுடைய எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு உங்களுடைய சேமிப்பை அதிகரிக்கத் தொடங்குவீர்கள். வீணான பிரச்னைகளும் வந்து போகும். குடும்பத்தில் உள்ளவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றத் தொடங்குவீர்கள். பணிகளில் உள்ள சின்ன சின்ன சிக்கல்களையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மனதுக்குள்ளாக தோன்றுகின்ற தேவையற்ற எண்ணங்களினால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெண்மை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
நீங்கள் எதிர்பார்த்திருநு்த சுப செய்திகள் உங்கள் காதுகளுக்கு வந்து சேரும். பயணங்களின் மூலமாக புதிய புதிய அனுபவங்கள் உங்களுக்குக் கிடைக்கும் செய்யத் திட்டமிருந்த பணிகளை நீங்கள் நினைத்தவாறே செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தியும் முன்னேற்றமும் ஏற்படும். உறவினர்கள் உங்களுடைய தொழிலுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய செயல்வேகம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கு மிதமான நிலையில் பண வரவும் இருக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய போட்டிகளில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். பல தடைகளுக்குப் பிறகு உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கடகம்
கல்வி கற்கும் மாணவர்கள் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடன் இருப்பவர்களின் செயல்களை விமர்சனம் செய்வதற்கு முன்பு கொஞ்சம் யோசித்து செய்யுங்கள். ஆடம்பரமான எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடைய அலைச்சலுக்கு ஏற்றவாறு ஆதாயங்களும் கிடைக்கும். மனதுக்குள் பலவிதமான நினைவுகள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

சிம்மம்
வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்குகள் உயர ஆரம்பிக்கும். நண்பர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள். அதேபோல் வாக்குறுதிகள் ஏதேனும் கொடுத்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக யோசித்துக் கொடுங்கள். பெற்றோர்களுடைய ஆலோசனைகளுக்கு மதிப்பளிப்பது மிகவும் நல்லது. நீண்ட நாட்களாகத் தடைபட்டு வந்த செயல்களைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலமாக மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதலாக அக்கறை செலுத்துங்கள். சில நெருக்கடியான சூழல்களின் மூலமாக கடன் வாங்குகின்ற சூழல்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொழில் மற்றும் குடும்பத்தில் இதுவரை இருந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
நீங்கள் நினைத்த காரியங்களில் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் வேகமாகவே வெற்றி கிடைக்கும். சரியான நேரத்தில் கிடைக்கும் பண உதவியினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு குடும்பத்தாருடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு புகழ் உண்டாகும். திருமண முயற்சிகள் நல்ல முடிவைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுக்கான சாதகமான சூழல்கள் உங்களுக்கு உண்டாகும். உயர் அதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்று அதன்படி நடந்து கொள்வார்கள். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களுக்கு இருக்கும் பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கப் போகிறது.

தனுசு
உயர் அதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சாதகமான சூழல்கள் உண்டாகும் உண்டாகும். உடன் பணிபுரிகின்றவர்கள் மீது வைத்திருக்கின்ற அன்பின் காரணமாக அவர்களுடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். நீங்கள் எதிர்பாராத தகவல்கள் வந்து சேர்வதால், தொழில் மாற்றத்துக்கான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய விவகாரங்களில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். உங்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான தருணங்கள் வந்து போகும். வாகனச் சேர்க்கைகள் ஏற்படும். உங்களுடைய புதிய எண்ணங்களினால், நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட பணிகள் நீங்கள் நினைத்தபடி நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கும்பம்
அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வெளியாட்களுடைய தொடர்புகள் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கான சிந்தனைகள் மேலோங்கத் தொடங்கும். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

மீனம்
வீட்டில் உள்ளவர்களுடைய எண்ணங்களைப் புரிந்து கொண்டு, செயல்படுவது மிகவும் நல்லது. பொது காரியங்கள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். மனதுக்குள் நினைத்த காரியங்கள் பல அலைச்சலுக்குப் பின் நிறைவேறும். சகோதரர்களின் மூலமாக உங்களுக்கான வாய்ப்புகளும் தன வரவுகளும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











