Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
இந்த ராசிக்காரர்களுக்கு இன்னைக்கு ஒரே குஷி தான்…
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர்
ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள்.

மேஷம்
பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 5
- அதிர்ஷ்ட நிறம் - இளம் பச்சை
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிர்ஷ்ட எண் - 2
- அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்
- அதிர்ஷ்ட திசை - மேற்கு
- அதிர்ஷ்ட எண் - 1
- அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிர்ஷ்ட எண் - 5
- அதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 6
- அதிர்ஷ்ட நிறம் - வெள்ளைநிறம்
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிர்ஷ்ட எண் - 8
- அதிர்ஷ்ட நிறம் - மயில் நீலம்
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிர்ஷ்ட எண் - 9
- அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 7
- அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிர்ஷ்ட எண் - 3
- அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிர்ஷ்ட எண் - 9
- அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்
- அதிர்ஷ்ட திசை - மேற்கு
- அதிர்ஷ்ட எண் - 6
- அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளைநிறம்
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிர்ஷ்ட எண் - 7
- அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்

ரிஷபம்
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான பணிகளை பயணங்களை மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் தேவை. புதிய பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். தடைகளைக் களைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்
பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். தொழிலில் புதிய யுக்திகளை கையாள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள்.

கடகம்
பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்வீர்கள். நிலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு சுமூகமான முடிவு கிடைக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்
சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். சக ஊழியர்களால் பணிகளில் சில பிரச்னைகள் உண்டாகும். பணியில் கவனத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி
மனதில் உள்ள பல்வேறு எண்ணங்களால் சரியான முடிவு எடுக்க முடியாமல் குழப்பமான சூழல் உருவாகும் வாய்ப்புண்டு. உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் உண்டாகும்.

துலாம்
உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். மனை வாங்குவதற்கு சதகமான சூழல் அமையும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் மூலம் முன்னேற்றத்திற்கான சூழல் அமையும்.

விருச்சிகம்
எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஆராய்ச்சி பணியில் உள்ளவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் உள்ள இடர்பாடுகளைக் களையும் சாதகமான சூழல் உண்டாகும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகள் மூலம் விரயச் செலவுகள் உண்டாகும்.

தனுசு
பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் முனைவோருக்கு கூடுதல் பணி உண்டாகும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்திகள் உண்டாகும். மனைகள் மூலம் சேமிப்பு உண்டாகும்.

மகரம்
தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளால் அனுகூலமான நிலை உண்டாகும். தொழிலுக்கு பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகள் ஈடேறும்.

கும்பம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். வாக்கு வன்மையால் தொழில் வகை லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்
கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். புதியவர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் உண்டாகும்.



Click it and Unblock the Notifications