Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 17 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- News
குழப்பங்களின் கோபுரத்தில் நிற்கிறார் முதல்வர் எடப்பாடி... ஆர்.எஸ்.பாரதி சாடல்
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது? யார் நிறைய பேசலாம்?
இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, நீங்கள் எதிர்பார்த்த கிடைக்கும். அதனால் மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல்கள் நிலவும். உத்தியோகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோல் செய்கின்ற வேலைகளிலுமு் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உழைப்புக்கேற்ற பலன் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். வாகனங்களின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். எதிர்பாலினத்தவர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு உண்டாகும். சந்திராஷ்டமம் இன்னும் முடியாததால் நெருக்கமானவர்களாக இருந்தால் கூட விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமுமு் இருக்கும்.
MOST READ: ஆயுள் விஷயத்தில் விதி மாறுமா? எந்தெந்த பாவத்தால் ஆயுள் குறையும் என விதுர் நீதி சொல்கிறது?

மிதுனம்
பரம்பரை சொத்துக்கள் தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்களுடைய வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் பெருகும். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் கவனத்தடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம்அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
தொழில் சம்பந்தமாக எடுக்கும் புதிய முயற்சிகள் கைகூடி வரும். படிப்பு விஷயம் தொடர்பாக வெளியூா் பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். உங்களுடைய நண்பர்களின் உதவியால் உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் ஆதாயங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
வழக்கத்தைப் போல ஈடம்பரச் செலவுகள் செய்யாமல் குறைத்துக் கொண்டால் நல்ல லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ளும்போது கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். அதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டு இருப்பீர்கள். வெளியில் எடுத்துச் செல்லும் ஆவணங்கள் மற்றும் உடைமைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.
MOST READ: உலகம் முழுவதும் துரதிஷ்டம் தரும் மாய எண்களாக நம்பப்படும் எண்கள் என்னென்ன?

கன்னி
உடல் ஆரோக்கியப் பிரச்சினைள் நீங்கி, மனம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலமாக லாபம் உண்டாகும். உங்களுக்குக் கிடைக்கும் கௌரவப் பதவிகளால் அடுத்தவர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டில் உள்ளவர்களுடைய தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் கூடுதல் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு ஏற்றபடி முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். உறவினர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். அதனா்ல வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மனதுக்குள் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தருவீர்கள். தொழில் சம்பந்தமாக பங்குதாரர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். பழைய நீண்ட நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லாபம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
சோம்பல் அதிகரிக்கும். வேலைகளில் மந்தத்தன்மை நிலவும். வீட்டில் உள்ளவர்களிடம் வீம்பு பிடிக்காமல் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களின் வாயிலாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய எதிர்காலம் தொடர்பாக, புதிய இலக்குகளை நிர்ணயம் செய்ய முயற்சி செய்வீர்கள். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான புதிய வாய்ப்புகள் பெருக ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய சிந்தனையின் போக்குகளில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பொருளுாதாரச் சிக்கல்கள் குறைய புது வழி பிறக்கும். மனதில் தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடி முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தப்பபட்ட பயணங்கள் யாவும் லாபகரமாகவே முடியும். வெளியூர் பயணங்களினால் புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.
MOST READ: உங்க கையில இந்த முக்கோண வடிவ ரேகை ஏதாவது இருக்கா? அதோட அர்த்தம் என்னனு தெரியுமா?

மீனம்
சமூக சேவையில் ஆர்வம் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். வேலை தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல செய்திக்ள வரும். தேவையில்லாத எண்ண ஓட்டங்களால் மனதில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகும்.பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.