Latest Updates
-
கோங்குரா முட்டை குழம்பு ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - ஹோடடலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
Aadi Perukku 2026: ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? ஆடிப் பெருக்கின் வரலாறும், முக்கியத்துவமும் -
கோலாப்பூரி மட்டன் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
செவ்வாய் இன்று மிதுன ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
சன்டே ஸ்பெஷல் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் உப்புக்கறி - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 02 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப டென்ஷன் நிறைந்த நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (02 August 2026-08 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
ராகு-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம்: இந்த 3 ராசிக்காரங்க சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போறாங்களாம் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இன்றைக்கு பரம்பொருள் விநாயகரின் அருள்நிறைந்த ராசிக்காரர் யார் தெரியுமா?
There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

இன்றைக்கு உங்களுடைய ராசிக்கு என்ன பலன்கள் என்று பார்த்து அதன்படி செயல்படுங்கள்.நிச்சயம் வெற்றி உங்களுடைய கையில் சேரும்.

மேஷம்
வீட்டுக்குத் தேவையான புதிய பொருளு்களை வாங்கிச் சேமிப்பீர்கள். உங்களுக்கு இன்று பிரபலமானவர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. வீடு, மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதற்கு முன்பாக இழந்த பொருள்களை மீட்பதற்கான உங்களுடைய முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய நபர்களுடைய வருகையினால் வீட்டில்இன்பம் பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வெகு நாட்களாகத் தடைபட்ட வந்துகொண்டிருந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த சின்ன சின்ன சச்சரவுகள் தீர்ந்து போகும். மருத்துவ செலவுகள் குறைய ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் இதுவரையில் இருந்து வந்த இன்னல்கள் தீர்ந்து போகும். இதற்கு முன்பாக பிரிந்து சென்ற நண்பர்கள் தானாக வந்து உங்களிடம் பேசுவார்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய உடல் ஆரோக்கியம் மேம்பட ஆரம்பிக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகளின் மூலமாக தொழிலில் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து போகும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உருவாகும். உங்களுக்கு உண்டாகப்போகும் திடீர் யோகத்தால் நீங்கள் எதிர்பாராத செயல்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. கடன் தொல்லைகள் ஒரு முடிவுக்கு வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கடகம்
நண்பர்களுக்கு இடையில் இதுவரையில் இருந்து வந்த சின்ன சின்ன மனக் கசப்புகள் நீங்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ப அங்கீகாரமும் பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்பும் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களுடைய ஆதரவினால் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்
வாகனங்களில் பயணம் செய்யும் அதிக வேகமாகச் செல்ல வேண்டாம். நிர்வாகம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் பெரியோர்களுடைய ஆலோசனைகளைக் கேட்பது நல்லது. வீட்டில் தம்பதிகளுக்கு இடையே விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர்ந்த நீலநிறமும் இருக்கும்.

கன்னி
தேவையில்லாத மனக்குழப்பங்களாலும் எண்ணங்களாலும் சரியான முடிவை எடுப்பதற்குக் கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். தொழிலில் பங்குதாரர்களுக்கு இடையே அமைதிப்போக்கினைக் கடைபிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வேண்டும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் சிற்சில தடங்கல்கள் உண்டாகும். இனறு உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

துலாம்
நீங்கள் எதிர்பார்த்த செயல்களினால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும் நாளாக இன்று இருக்கும். வீட்டில் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் உள்ளவர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உண்டாகும். தடைபட்டுக் கொண்டே இருந்த சின்ன சின்ன விஷயங்களும் கைகூடி வரும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தொழிலி் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உருவுாகும். எதிர்பாலின மக்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உறவினர்களுடைய வருகையினால் கலகலப்பான சூழல்கள் உருவாகும். உயர் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
நீங்கள் செய்கின்ற பணிகளில் இருந்து வந்த இன்னல்கள் தீர்ந்து போகும். உங்களுடைய வாடிக்கையாளர்களிடம் அமைதிப் போக்கினைக் கடைபிடிக்கவும். வாகனச் சேர்க்கைகள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திருப்தியான சூழல்கள் அமையும். செய்யும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கைகூடி வரும். வீட்டில் தம்பதிகளுக்கு இடையே எண்ணங்கள் ஒன்றுபோல் இருக்கும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் இருக்கும்.

கும்பம்
இதுவரையில் உங்களுக்கு வந்து சேராமல் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு லாபங்கள் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேன்மைகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
வீட்டின் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுடைய சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். உடன் பிறந்த சகோதரர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் எதிர்பார்த்திருந்த செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதஜர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications