For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு வீண் வம்புல மாட்டப்போற ராசி எது தெரியுமா? எப்படி எஸ்கேப் ஆகலாம்?

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.

|

பெரும்பாலானோருக்கும் ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

daily horoscope

எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது. யார் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டப் போகிறார்கள். எப்படி தப"பிக்கலாம் என்று இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உடல் நலனில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எந்த காரியத்தை செய்தாலும், அதில் தன்னம்பிக்கையுடனும் புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுங்கள். அதில் உங்களுக்கு வெற்றியும் கிட்டும். மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிாஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

அடுத்தவர்களுக்கு, குறிப்பாக முன் பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடைய நீண்ட கால நெருங்கிய நண்பர்களுடன் கூடிப் பேசி, மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். வெளியூர் வேலைவாய்ப்புகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்துடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கிறது.

மிதுனம்

மிதுனம்

பயணங்களில் கவனம் தேவை. சந்திராஷ்டமம் தொடர்வதால் கூட்டாளிகளிடம் பொறுமையைக் கடைபிடிக்கவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. நற்பெயருக்கு கலங்கம் உண்டாகும் சூழல் அமையும். பேச்சில் நிதானமும் பொறுமையும் தேவை. சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். கடக ராசிக்காரர்களே! இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயங்கள் உண்டாகும். பிறருக்கு உதவும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பணப்புழக்கத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன் பிறந்த சகோதரர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 7 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

உங்களுடைய எல்லா காரியங்களுக்கும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். பிறருக்கு எடுத்துரைக்கும் உங்களுடைய ஆற்றலால் நல்ல பயன்கள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

துலாம்

துலாம்

உறவினர்களுக்கு இடையே உறவு நிலை மேம்பட்டு நிற்கும். பொன், பொருள் சேர்ப்பதற்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்குள் அதில் சிறுசிறு மாற்றங்களைச் செய்வதன் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். போட்டிகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

கடல்வழிப் பயணங்களின் மூலமாக லாபங்கள் வந்து சேரும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவுகள் பெருகும். பெரிய பெரிய மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கும். தொழில் பங்குதாரர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பொன், பொருள் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுப செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

பொது நலத்துக்காக உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். அதில் மன திருப்தியும் அடைவீர்கள். மற்றவர்களிடத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். தந்தையின் வழியிலான சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். வெகு நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்னை ஒன்றை மிகவும் நிதானத்துடன் பேசி முடிப்பீர்கள். மனதுக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம்அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கிறது.

மகரம்

மகரம்

தொழிலில் முக்கிய பிரதிநிதி ஒருவருடைய அறிமுகம் கிடைக்கும். நீங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புக்கான முயற்சிகள் ஈடேறும். பொன், பொருள் சேர்ப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவீர்கள். நண்பர்களின் மூலமாக தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பொருளாதாரம் உயரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. புதிய தொழிலுக்கு பிரபலங்களுடைய ஆதரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் லாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

மீனம்

மீனம்

உங்களுடைய முன்னோர்கள் செய்த அறச் செயல்களால் உங்களுடைய வாழ்க்கையில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இருந்து கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். மனதில் கவலைகள் அதிகரிக்கும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

daily horoscope 10.9.18

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people. By analyzing the projection of the position of planets, and the Sun and the Moon on the Ecliptic at the moment of birth. Astrology can give us a glimpse of a person's basic characteristics, preferences, flaws and fears.
Desktop Bottom Promotion