Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
திருட்டு தந்தையை வெளுத்து வாங்கிய குட்டிப் பாப்பா - (வீடியோ)
திருட்டு தந்தையை வெளுத்து வாங்கிய குட்டிப் பாப்பா - (வீடியோ)
இந்த வீடியோ பதிவை பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்தது, மருதமலை படத்தில் வரும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி தான். ஒரு ரவுடியுடன் தன்னை அடித்து ஃபேமஸான பிற ரவுடிகள் குறித்து விலாவாரியாக விளக்கிக் கொண்டிருப்பார் வடிவேலு.
அப்போது பான்பராக் ரவி என்ற ரவுடியை பற்றி கூறும் போது, ஒண்ணுமில்ல ஒரு ரெண்டு ரூபா தாண்டா கேட்டேன். என்ன மூடுல இருந்தான்னு தெரியல.. பொழிச்சுன்னு மூஞ்சியிலயே பான்பராக்க துப்பிட்டான். அதுக்கு அப்பறம் தான் பான்பராக் ரவி, பான்பராக் ரவின்னு அவன பெருசா கூப்பிடுறாங்கன்னு கூறுவார் வடிவேலு.

அப்படியான ஒரு சம்பவம் தான் இந்த வீட்டிலும் நடந்துள்ளது. இந்த தந்தை பெரிதாக எதையும் திருடிவிடவில்லை. வீட்டில் இருந்த சோடா பானம் ஒன்றை எடுத்து குடித்துவிட்டார். அது தன்னுடையது, அதை எப்படி அப்பா எடுத்துக் குடிக்கலாம் என்று... அவரை சரமாரியாக வெளுத்து வாங்கி இருக்கிறார் இந்த குட்டி தேவதை.

செல்வம்!
அறிவு, பணம், ஆபரணங்கள், நிலம் போன்றவற்றுடன் நாம் குழந்தைகளையும் செல்வம் என்று அழைக்க காரணம் என்ன தெரியுமா? செல்வங்கள் நமக்கு நிம்மதியையும், மனநிறைவையும் அளிக்கும்.
அந்த வகையில், மட்டற்ற மிகையான ஈடிணையற்ற மனநிறைவை, நிம்மதியை, மகிழ்ச்சியை அளிப்பது குழந்தை செல்வங்கள் தான். அதிலும், நம் உயிரில் இருந்து ஜனித்த குழந்தை செல்வங்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது.

வேறென்ன வேண்டும்!
திட்டினாலும், அதட்டினாலும் அவள் கோபத்தில் வெளிப்படும் அழகு வேறெதில் கிடைக்கும். இப்போது தான் தெரிகிறது ஏன் உலக அழகி போட்டி வளர்ந்த பிறகு நடத்தப்படுகிறது என., குழந்தை பருவத்தில் அனைவருமே உலக அழகிகள் தான்.
இப்படி இவள் கோபித்துக் கொள்வாள் என்றால்.., அந்த அப்பாசோடா பானத்தை மட்டுமல்ல.. அவளுக்கு வாங்கி வைத்திருக்கும் செரலாக்ஸ், ஹார்லிக்ஸ் என எதை வேண்டுமானாலும் திருடி திங்கலாம். எத்தனை ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் இந்த சந்தோஷம் வேறு எதில் கிடைக்கும்.

ஹீரோ!
ஆண் பிள்ளைகளின் முதல் காதலி அம்மா என்றால்... பெண் பிள்ளைகளின் ஆல் டைம் ஹீரோ அப்பாக்கள் தான். ஒரு பெண்ணை முழுவதுமாக புரிந்துக் கொண்டு, அவளது சுதந்திரத்தை முழுவதுமாக அவள் கொண்டாடவும், 24x7 காவலனாகவும் இருக்கும் முதல் ஆண் அப்பா தான்.
அப்பாக்களுக்கு மட்டுமே சேவகன், காவலன், நண்பன், ஹீரோ, அடி வாங்கும் கைப்பிள்ளை என்று மகள் முன் பலவேசம் கட்டவேண்டி இருக்கிறது.

டிஜிட்டலுக்கு நன்றி!
நடப்பு டிஜிட்டல் யுகத்தை ஏசாத மக்கள் இல்லை என்று தான் கூற வேண்டும். அதன் வெளிப்பாட்டால் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரிலும் தீய தாக்கம் ஏற்படுகிறது. உறவுகளில் மதிப்பு குறைந்து வருகிறது என்று கூறி வருந்துகிறோம்.
ஆனால், முந்தைய காலத்தில், நீ அவ்வளவோ சுட்டி, ரொம்ப குறும்பு என்று வாயார வார்த்தைகளால் மட்டுமே கூறும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இந்த டிஜிட்டல் யூகத்தால்... நம் மகளின் சேட்டைகளை, அவளது மகளிடமும் போட்டிக் காண்பித்து மகிழும் வாய்ப்பு இருக்கிறது.

நீங்க ரெடியா?
இப்ப வரைக்கும் ஐடியா இல்லாட்டியும், இனிமேல் உங்கள் குட்டி மகன், மகள் செய்யும் சேட்டைகளை படங்களாகவும், வீடியோ பதிவுகளாகவும் சேமிக்க தவற வேண்டாம்.
பென் டிரைவ், ஓ.டி.ஜி, க்ளவுட் ஸ்டோரேஜ் என எண்ணற்ற வசதிகள் இப்போது இருக்கிறது. எனவே, விலைமதிப்பு இல்லாத உங்கள் செல்ல தேவதையின் லூட்டிகளை கேப்ச்சர் செய்ய துவங்குங்கள்.



Click it and Unblock the Notifications