For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஹோட்டல் காரிடாரில் பதிவான விசித்திர உருவம், நடந்த வந்த நபரை புரட்டி எடுத்தது - (வீடியோ)

  By Staff
  |

  முதலில் நாம் தெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம். இந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் பேய் போன்ற உருவம், உண்மையில் நடந்ததா? அல்ல போலியாக உருவாக்கப்பட்டதா என்பது ஊர்ஜிதமாக கண்டுபிடிக்கப்படவில்லை.

  நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் புதிரானவை. அவற்றுக்கான தெளிவான விளக்கமோ, பதிலோ யாரிடமும் இல்லை. அந்த புதிர் பட்டியலில் முதல் இடம் பிடிப்பது பேய். இதே பட்டியலில் அடுத்த இடம் பிடித்திருப்பது கடவுள். கடவுள் இருந்தால், பேயும் இருக்கிறது என்று நம்பி தான் ஆகவேண்டும். பேய் இல்லை என்றால், கடவுளும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

  CCTV Captures A Strange Figure Attacking A Man In Hotel Corridor

  பேய் இருக்கிறதா? இல்லையா? என்பதை பல விவாத மேடைகளில், பலதரப்பட்ட கருத்துக்களை நாம் கண்டிருக்கிறோம். யாரோ ஒருவர் கூறுவதை விடுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பலரே பேயை கண்டதாக கூறி அதிர்ச்சியூட்டிய சம்பவங்களும் வாழ்க்கையில் நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

  உண்மையில் பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது காலங்கள் பல கடந்து வரும் ஒரு பெரும் புதிர். ஆனால், நல்ல சக்தி, கெட்ட சக்தி என்பவை நிச்சயம் இருக்கிறது. அதாவது பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி. இது எல்லாருடைய மனதிலும் நிரம்பி இருக்கிறது. இதை யாராலும் மறுக்கவும் முடியாது. ஏன் அறிவியலும் கூட இதை ஒப்புக் கொள்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஹோட்டல்!

  ஹோட்டல்!

  இந்த சிசிடிவி பதிவான வீடியோ காட்சியை காணும் போது, நிச்சயம் அந்த கட்டிடம் ஒரு தங்கும் விடுதியாக இருக்கலாம் என்பதை ஊர்ஜிதமாக கணிக்க முடிகிறது. வீடியோவின் ஆரம்பத்தில் இருந்தே அந்த காரிடார் காலியாக தான் இருக்கிறது. மக்களின் நடமாட்டம் என்று எதுவும் காணப்படவில்லை.

  ஹூட்ஸ் அணிந்த நபர்!

  ஹூட்ஸ் அணிந்த நபர்!

  வீடியோ ஓடிக்கொண்டிருக்கும் போது, இடையே வெளிப்புறத்தில் இருந்து ஹூட்ஸ் உடை அணிந்த ஆண் நபர் ஒருவர் அந்த காரிடாரில் இயல்பாக நடந்து வருகிறார். அவர் ஓரிரு அறைகளை தாண்டி.. காரிடாரின் நடு பகுதியை அடையும் போது தான், சிசிடிவி கேமாராவில் அந்த விசித்திர புகை போன்ற உருவம் தோன்றுகிறது.

  பேயா?

  பேயா?

  திடீரென காரிடாரின் பாதி வழியில் தோன்றிய அந்த கருப்பு நிற புகை போன்ற உருவம். ஒரு மனித உருவம் போல உருவாகிறது. அதை கண்ட அந்த ஆண், தடுமாறி கீழே விழுகிறார். அவர் கீழே விழுந்த சமயத்தில், காலை பிடித்து ஒருசில அடி தூரம் புகை மண்டலமாக தோன்றிய அந்த விசித்திர உருவம் இழுத்து செல்கிறது.

  பதற்றம்!

  பதற்றம்!

  ஒருசில அடி இழுத்து சென்ற பிறகு, அந்த கருப்பு நிற புகை போன்ற உருவம்.. மீண்டும் மாயமாகி காரிடாரின் மறுமுனையில் சென்று மாயமாகி விடுகிறது. சற்றும் எதிர்பாராத இந்த தாக்குதலால் பதற்றம் அடைந்த அந்த ஆண், விழுந்தடித்து தான் வந்த வழியிலேயே ஓடிவிடுகிறார். இப்படியாக முடிகிறது, அந்த சிசிடிவி வீடியோ பதிவு.

  மெய்யா? பொய்யா?

  மெய்யா? பொய்யா?

  நாம் பார்த்த ஆங்கில படங்களில் இருந்து, தமிழ் படங்கள் வரை பேய்கள் சிசிடிவியில் பதிவாவதை காண்பித்திருக்கிறார்கள் தான். ஆனால், ஆவியும், பெய்யும் எலக்ட்ரானிக் கருவிகளில் எல்லாமா பதிவாகும். ஆரம்பத்தில் கரகரகவென ரிப்பேர் ஆவது போல காண்பித்தனர். பிறகு, ஆவி, பேய், மொபைல், டிவி, கண்ணாடி போன்ற மீடியங்களில் வந்து கொலை செய்வது போன்ற படங்கள் வந்த பிறகு, சிசிடிவியில் பதிவாவதை போல காண்பிக்கிறார்கள்.

  மிக எளிய வி.எப்.எக்ஸ் எடிட்டிங் முறையில் இப்படியான வீடியோக்களை உருவாக்கி விடலாம் என்பதால், நாம் முன்பு கூறியதை போல, இந்த பேய் தாக்குதல் வீடியோ உண்மையானதா அல்ல உருவாக்கப்பட்டதா என்பது ஊர்ஜிதமாக அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  CCTV Captures A Strange Figure Attacking A Man In Hotel Corridor

  It is not clear either fake or real. But, the figure captured in CCTV camera looks like a ghost. It not in just appeared. Also attacked a person.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more