Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
தொழிலதிபர்கள், டாப் மாடல்களை விட ஏகபோக சொகுசு வாழ்க்கை வாழும் ஏர் ஹோஸ்டஸ்!
தொழிலதிபர்கள், டாப் மாடல்களை விட ஏகபோக சொகுசு வாழ்க்கை வாழும் ஏர் ஹோஸ்டஸ்!
லென்னி லியு (34), சர்வதேச விமான சேவை வழங்கும் ஹாங்காங்கை சேர்ந்த கேத்தே பசிபிக் விமான சேவை நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸ்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவர், சர்வதேச விமானங்களில் பயணிக்கும் போது, ஒரு பயணத்திற்கும், அடுத்த பயணத்திற்கும் இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தான் பயணம் செய்த நாடுகளில் சுற்றுலா பயணி போல நேரம் செலவிடுவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்.
இதுவரை தான் பயணம் செய்ததில் சுவிட்சர்லாந்து மற்றும் டொராண்டோ போன்றவை நல்ல நினைவுகளை அளித்தன என்று கூறுகிறார். தினமும் விமானத்தில் பறப்பதையே வேலையாக கொண்டிருக்கும் லென்னி, இப்படி நிறைய நாடுகளில் பயணம் செய்வதன் மூலம் தனது வாழ்க்கையில் அலுப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்.

சொகுசு வாழ்க்கை!
கேத்தே பசிபிக்கில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வரும் லென்னி, சர்வதேச டாப் மாடல்கள் மற்றும் பெரிய தொழிலதிபர்களை காட்டிலும் அதிகமாக வானத்தில் மிதந்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் வாழ்கை. பெரும்பாலும், வானத்தில் பறக்கும் லென்னி, தான் தரையில் இருக்கும் நேரங்களை தூங்கி வீணடிப்பது இல்லை.

இடைவேளை!
ஒரு விமான பயணத்திற்கும், அதற்கு அடுத்த பயணத்திற்கும் இடையே ஓய்வெடுக்க அளிக்கப்படும் நேரங்களில் இவர், தான் வேலை ரீதியாக பயணம் செய்திருக்கும் நாடுகளில் இடம் பெற்றிருக்கும் உலகின் சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பை தவற விடுவது இல்லை.

அதிர்ஷ்டம்!
விமான பணிப் பெண்ணாக இருந்து, பல நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். நான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணித்திருக்கிறேன். ஸ்விட்சர்லாந்து, டொராண்டோ, ஜோகன்ஸ்பர்க், சான் பிரான்சிஸ்கோ போன்றவை எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் மற்றும் நினைவுகளை பரிசளித்தன என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் லென்னி லியு.

காதலர் தினத்தன்று...
காதல் தினத்தன்று சுவிட்சர்லாந்ததில் இருக்கும் ஏரி ஓரத்தில் அமைந்திருந்த இடத்தில், நேரம் செலவழிக்க வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் பனிபொழிவு, குளிர் காய தீமூட்டி... அந்த மாலை மிகவும் இனிமையாக, ரொமான்டிக்காக அமைந்தது என்று தனது அனுபவத்தை விவரிக்கிறார் லென்னி.
கனடாவின் டொராண்டோ தனக்கு மிகுந்த துணிகரமான அனுபவத்தை அளித்தது. அங்கிருந்த லோக்கல் தீவுகளுக்கு சென்று வந்தது சிறந்த அனுபவமாக அமைந்தது என்றும் லென்னி லியு கூறி இருக்கிறார்.

தீவு!
"வேலை முடிந்த பிறகு ஒரு வாட்டர்-ப்ரூப் பேக், பிறகு வாடகைக்கு ஒரு துடுப்பு படகு, அதனுடன் தனது கேமராவை எடுத்துக் கொண்டு, தீவுகளுக்குள் நுழைந்து பயணிக்க துவங்கினேன்..." என லென்னி தனது ஒரு தீவு பயணத்தின் நினைவுகள் குறித்து கூறி இருக்கிறார்...

திருட்டு!?
சான் பிரான்சிஸ்கோவில் எனது உடன் பணிபுரியும் பெண்ணுடன் வாகனம் எடுத்துக் கொண்டு பயணித்தேன். சுமார் ஒரு மணிநேரம் நீடித்த அந்த பயணத்தின் போது, நகரில் ஆங்காங்கே மரத்தில் இருந்த செர்ரி, பிளம்ஸ் போன்ற பழங்களை பறித்து போட்டுக் கொண்டு வந்தோம். எங்கள் ஒரு மணிநேர பயணத்திற்கு பின், எங்களிடம் இருபது கிலோ பழங்கள் இருந்தன. அதை எங்களுடன் இருந்தவர்கள் அனைவருக்கும் பகிர்ந்துக் கொடுத்தோம்.

சமூக உறவு!
வாழ்வின் பெரும்பாலான நேரத்தை பறப்பதிலும், வெளிநாடுகளிலும் தான் செலவழிக்கிறார் லென்னி. அதனால் வீட்டில் உள்ளவர்கள், உறவினர், நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது சமூக வாழ்க்கை என்பது பாதிக்கப்படலாம். ஆனால், லென்னி தன் வாழ்வில் சமூக வாழ்க்கை பாதிப்பு என்று எதுவும் இல்லை என்கிறார்.

நட்பு!
விமான பணிப் பெண்ணாக இருப்பதால், என் சமூக வாழ்க்கை மேலோங்கி தான் இருக்கிறது. உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் என்னால் குடும்பத்துடன் டச்சில் இருக்க முடியும். கேத்தே பசிபிக் அடிக்கடி நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு சென்று வரும். இந்த இரண்டு பகுதிகளில் தான் எனது நெருங்கிய தோழமைகள் இருக்கிறார்கள். எனவே, நான் அவர்களை அடிக்கடி சந்திக்க முடிகிறது.

உங்களால் முடியுமா?
மேலும், என் உடன் பணிபுரியும் நபர்கள் மற்றும், ஓய்வு நேரத்தில் நான் பயணிக்கும் இடங்களில் நிறைய நண்பர்களை உருவாக்கி கொள்கிறேன். இதனால், நான் செல்லும் இடத்தில் எல்லாம் நான் பழக மக்கள் இருக்கிறார்கள். நான் அறிந்தவர்கள், நான் அறிமுகம் செய்துக் கொண்டவர்கள் என நிறைய பேர் இருக்கிறார்கள் என கூறுகிறார் லென்னி.
இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்தால்.. நீங்கள் என்ன செய்வீர்கள்... உங்களால் லென்னி லியு போல நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்ள முடியுமா? உங்களால் ஓய்வு நேரங்களில் சுறுசுறுப்பாக இடங்களை சுற்றி பார்க்க பயணிக்க முடியுமா?
All Image Source: Instagram



Click it and Unblock the Notifications
