For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரண தேதியை நம்மால் கண்டறிய முடியுமா? மர்மம் அவிழ்க்கும் ஆராய்ச்சியாளர்கள்!

|

ஒருவர் நோய்வாய்ப்பட்டு போனால் கூட அவரது மரண தேதியை குறித்து வைத்தார் போல் கூற இயலாது. உறுப்பு செயலிழப்பு அல்லது புற்று, எய்ட்ஸ் போன்ற சில உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டால் வேண்டுமானால் இன்னும் இத்தனை நாட்களில் இறந்துவிடுவார் என மருத்துவர்களால் கணிக்க இயலும்.

ஆனால், ஒருவரது மரணத்தை அவரே கணிக்க முடியும் என்ற நிலை இதுநாள்வரை இல்லை. ஆனால், இனிமேல் வரலாம் என்கிறது அறிவியல். அதற்கான ஆய்வுகளை எப்போதோ துவங்கிவிட்டனர். இப்போது அதை தெளிவாக எப்படி கணிக்கலாம் என தொடர்ந்து ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு மனிதனின் ஜீனை வைத்து அவரது மரணத்தை, மரண தேதியை தெள்ளத்தெளிவாக கூற முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கண் விழிப்பு!

கண் விழிப்பு!

இதை நீங்கள் உங்களிடமே கண்டிருக்கலாம்...

என்ன தான் உடல்நல குறைபாடு ஏற்பட்டாலும். முந்தைய நாள் எவ்வளவு கடினமான வேலை செய்திருந்தாலும், உடல் கடுமையான சோர்வுக்கு ஆளாகியிருந்தாலும் சிலர் சரியாக மறுநாள் காலை குறித்த நேரத்தில் எழுந்துவிடுவார்கள்.

அதாவது, தினமும் ஒரே நேரத்தில் கண் விழிக்கும் திறன். காலம், தட்பவெட்பம், சூழல் என எதையும் பொருப்படுத்தாது நிகழ்கிறது இந்த செயல். இதற்கு காரணம் அவரவர் ஜீன் தான் என்கிறார்கள்.

சில சமயங்களில் எப்படி இவன் மட்டும் இந்த வெயிலிலும் இப்படி தூங்குகிறான் என்று நமது நண்பனை திட்டியிருப்போம். அதற்கு காரணமும் அவரது ஜீன் தான்.

உயிர் கடிகாரம்!

உயிர் கடிகாரம்!

குறித்த நேரத்தில் ஒரு செயலை தூண்டுகிறது இந்த ஜீன். மனிதரின் மரபணு தூண்டுதல் காரணமாக செயல்படும் உந்த உயிர் கடிகாரம் தான் மனிதரின் உயிரியல் மற்றும் நடத்தை போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது என உடலியல் வினோதங்கள் என்ற புத்தகத்தை எழுதியுள்ள கோவீ. ராஜேந்திரன் என்பவர் தனது கட்டுரை ஒன்றில் குறிபிட்டுள்ளார்.

நோய்களும்!

நோய்களும்!

நாம் எந்த நேரத்தில் உறங்குகிறோம், விழிக்கிறோம் என்பது மட்டுமின்றி, நமது உடலில் எத்தகைய நோய் ஏற்படுகின்றன, பாதிப்புகள் உண்டாகின்றன என்பதையும் கணிக்கின்றன நமது உடலின் மரபணுக்கள். இதை ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூலிம் என்பவர் தனது ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மரணம்!

இரண்டு மரணம்!

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு இறப்பு இருப்பதாகவும் அறியப்படுகிறது. ஒன்று மருத்துவ ரீதியான மரணம். மற்றொன்று இயற்கையான மரணம். இருவரது இதயம் அல்லது நுரையீரல் செயற்பாடு தடைப்பட்டு இறப்பது மருத்துவ ரீதியான மரணம் என்கிறார்கள். அதேபோல, ஒரு மனிதன் இறந்த பிறகும், அவனது உடலில் திசுக்கள் ஒருசில நிமிடம் உடலுக்குள் உயிருடன் இருந்தே, இறக்கும். இதை தான் இயற்கை மரணம் என்கிறார்கள். இப்படியாக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு மரணம் ஏற்படும் என கூறப்படுகிறது.

சில காலம்...

சில காலம்...

ஒருவர் இறந்த பிறகும் கூட உடலின் சில உறுப்புக்கள்.. சில காலம் தொடர்ந்து இயங்கி கொண்டே இருக்கும். குறிப்பாக இறந்த செல்களாக வெளிப்படும் நகங்கள் மற்றும் கூந்தல் ஓரிரு வாரம் வளரும் என அறியப்படுகிறது. அதே போல..., உடலுக்குள் இரத்த ஓட்டம் நின்று போனாலும் மேற்புற சருமத்தின் செல்கள் சில நாட்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும் .

பாக்டீரியா!

பாக்டீரியா!

உடலைவிட்டு உயிர் பிரிந்தாலும் பாக்டீரியாக்கள் பிரிவதில்லை. பாக்டீரியாக்கள் சில நாட்களுக்கு உடலுக்குள் உயிருடன் இருக்கும். மேலும், மூளை இறந்து போனாலும் கூட, நரம்பு மண்டலத்தின் சில பாகங்கள் இயங்கி கொண்டே தான் இருக்கும் என்றும், நரம்புகள் மூளைக்கு சிக்னல்கள் அனுப்பாமல் இருந்தாலும், தண்டுவடத்திற்கு சிக்னல் அனுப்பும் இதன் காரணத்தால் தான் தசை இறுக்கம் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முனகல் சப்தம்!

முனகல் சப்தம்!

மனிதர் இறந்த பிறகு உடலில் தசை இறுக்கம் ஏற்படுவதை நாம் அறிந்திருப்போம். அதனால் தான் இறந்த உடலில் இருந்து சிறுநீர், மலம் வெளிப்படுதல், தொண்டை பகுதியில் இருந்து முனகல் போன்ற சப்தம் வெளிப்படுதல் போன்றவை ஏற்ப்படுகின்றன. இதுப்போல, நாம் அறியாத பல அதிசயங்கள் கொண்டிருக்கிறது நமது உடல்.

இதுவரை அறிவியல் ஆய்வாளர்களால் முழுமையாக அறியப்படாத மெக்கானிஸத்தில் ஒன்று மனித உடல். தோண்ட, தோண்ட ஏதேனும் ஒரு விஷயம் புதுமையாக வந்துக் கொண்டே இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can We Judge Our Death Date?

Can We Judge Our Death Date?
Story first published: Friday, January 12, 2018, 16:00 [IST]
Desktop Bottom Promotion