Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..
மறுபடியும் வருது இந்த நூற்றாண்டின் மிக நீளமான பிளட் மூன்... எப்போது?... எப்படி?...
பிளட் மூன் சந்திர கிரகணம் வரும்போது சந்திரகிரகணம் தோன்றும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய ஒரு அரிய வானியல் நிகழ்வு இந்த ஆண்டு மீண்டும் நிகழவிருக்கிறது. வருகிற ஜூலை மாதம் 27 ஆம் தேதி மீண்டு
"பிளட் மூன்" என்று முதன்முதலில் கேட்டபோது ஏதோ நடக்கப்போகிறது என்று பயந்து கொண்டிருந்த நாம் அது வானத்தில் உதித்ததும் அதன் அழகைப் பார்த்து வியந்து போனோம். பிறகு, என்ன இது இவ்வளவு சீக்கிரம் மறைஞ்சு ப்ளூ மூன் ஆகி அப்புறம் நார்மல் ஒயிட் மூன் ஆயிடுச்சே என்று வருத்தப்பட்டோம்.

திரும்ப அப்படியே தான் இருக்கா?... இல்ல மறுபடியும் பிளட் மூன் வந்திடுச்சான்னு வீட்டில் உள்ள குட்டீஸ்கள் வீட்டுக்கு தெருவுக்கு ஓடி ஓடி பார்த்தபோது, ஏதோ தீபாவளி, பொங்கல் போல ரெட் மூன் வருகிற நாளும் அவர்களுக்கு ஒரு கொண்டாட்டமாகவே மாறிப்போனது.

பிளட் மூன்
image courtesy
அப்படிப்பட்ட பிளட் மூன் இதற்கு முன்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் தேதியன்று சூப்பர் பிளட் தோன்றியது. இந்த பிளட் மூன் பார்ப்பதற்னு இயல்பை விட மிகப்பெரியதாக சிவப்பு நிறத்தில் ( ஆரஞ்சு கலந்த) தோற்றமளிக்கும்.

எப்போது வருகிறது?
பிளட் மூன் சந்திர கிரகணம் வரும்போது சந்திரகிரகணம் தோன்றும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அத்தகைய ஒரு அரிய வானியல் நிகழ்வு இந்த ஆண்டு மீண்டும் நிகழவிருக்கிறது. வருகிற ஜூலை மாதம் 27 ஆம் தேதி மீண்டும் ஒரு சூப்பர் பிளட் மூன் தோன்றவிருக்கிறது.

என்ன சிறப்பு
இந்த ஆண்டு இரண்டாவது முறையாகத் தோன்றவிருக்கிற சூப்பர் பிளட் மூன் சந்திர கிரகமானது கிட்டதட்ட 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை வானில் தோன்றும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தோன்றிய சூப்பர் பிளட் மூன் வானில் கிட்டதட்ட 58 நிமிடம் 58 விநாடிகள் காட்சியளித்தது. இரண்டாவது முறை ஜூலை மாதம் தோன்றும் பிளட் மூன் கிட்டதட்ட இதைவிட 45 நிமிடங்கள் கூடுதலாக, வானில் தோன்றும்.

பிளட் மூன் என்றால் என்ன?
பிளட் மூன் என்பது, எப்போதும் சூரிய ஒளியானது எப்போதும் சூரிய ஒளியானது நிலவின் மீது படும்போது அது உள்வாங்கும் ஒளி தான் இரவில் நிலவொளியாக நாம் கருதுகிறோம். அதுவே இந்த பிளட் மூன் தோன்றும் நாளில், சூரியனின் ஒளி நேரடியாக நிலாவின் மீது படாமல், பூமியின் வளிமண்டலத்தின் மேல் பட்டு, அந்த கதிர்கள் நிலாவின் மீது விழும். அதனால் தான் அது சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கிறது.
அதனால் தான் மற்ற சந்திர கிரணங்களைப் போல் இல்லாமல், இது பூமியின் நிழலை நேரடியாகக் கடந்து செல்லுகிற வரையிலும் நம்முடைய பார்வைக்குத் தெரிகிறது. இதற்கு வழக்கமான சந்திர கிரகணத்தை விடவும் சற்று கூடுதலான நேரம் பிடிக்கும்.

இந்தியாவில் தெரியுமா?
இந்த சூப்பர் பிளட் மூன் என்பது, பூமியின் கிழக்கு அரைக்கோளத்தில் இருக்கின்ற நாடுகளில் மட்டுமே இந்த சூப்பர் பிளட் மூனை பார்க்க முடியும். அதாவது, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற இடங்களில் இந்த சூப்பர் பிளட் மூன் தெரியும். அதேசமயம் வட அமெரிக்கா, ஆர்ட்டிக் மற்றும் பசிபிக் கடலோரப் பகுதிகளில் சூப்பர் பிளட் மூனை பார்க்க முடியாது.
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியாவிலும் நாம் இந்த சூப்பர் பிளட் மூனை பார்க்க முடியும்.

எந்த நேரத்தில் வரும்?
ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவில் காலை நேரத்திலேயே இந்த சந்திர கிரகணம் உண்டாகும். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில், மாலை நேரத்தில் ஏற்படும். அதனால் வருகிற ஜூலை 27 ஆம் தேதி மாலை சூரியன் மறையும் நேரத்தில் அல்லது நடு ராத்திரியில் இந்த சூப்பர் பிளட் மூனை நம்மால் பார்க்க முடியும். அப்புறமென்ன பிளட் மூனுக்காகக் காத்திருப்போம். பார்த்து மகிழ்வோம்.



Click it and Unblock the Notifications
