நியூஸ் பேப்பர் லே-அவுட் குளறுபடியால் வக்கிரமான செய்திகள் - புகைப்படத் தொகுப்பு!

Posted By: Staff
Subscribe to Boldsky

தனி ஒருவன் படத்துல ஒரு செம்ம டயலாக் சீன் வரும். அதுல முதல் பக்கத்துல இருக்க செய்திக்கும், கடைசி பக்கத்துல இருக்க செய்திக்கும் ஒரு சம்மந்தம் இருக்கன்னு ஹீரோ பேசுவாரு. ஆனா, இது முதல் பக்கத்துக்கும், கடைசி பக்கத்துக்கும் இருக்க சம்மந்தம் இல்ல. முதல் பக்கத்துக்கும், ரெண்டாவது பக்கத்துக்கும் இருக்க சம்மந்தம்.

நியூஸ் பேப்பர்ல வெளியான செய்திகள் மற்றும் விளம்பரங்கள் ஒன்னுக்கொன்னு வேற விதமான அர்த்தம் புரிந்துக் கொள்ள வைக்கும் சில கோ-இன்சிடென்ட் அப்படின்னு சொல்லப்படுற சமாச்சாரங்கள். அதாவது தெரியாம நடந்திடுச்சு. எதுவுமே பிளான் பண்ணி பண்ணலன்னு சொல்வாங்கல அப்படியான ஒன்னு.

ஆனால், நீங்களே இந்த புகைப்பட தொகுப்ப பாருங்க.. இதெல்லாம் கோ-இன்சிடென்ட் மாதிரியா இருக்கு?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தப்பு மை சன்!

தப்பு மை சன்!

இதென்னம்மோ தெரியாம நடந்த லேஅவுட் தவறு போல தெரியல. தெரிஞ்சே தான் அந்த டிசைனர் இப்படியான ஒரு லேஅவுட் கிரியேட் பண்ணியிருக்கணும்.

பாருங்க பாவம் அந்த மூணு பொண்ணுங்க இந்த லேஅவுட் பார்த்தா என்ன நினைப்பாங்க. அந்த டிசைனர் நெனச்சிருந்தா போட்டோவையாவது மாற்றி பிளேஸ் பண்ணியிருக்கலாம்.

சகோதரி பாவம்!

சகோதரி பாவம்!

இந்த பக்கம் சரும புற்றுநோய்க்கு இறந்த தன்னோட சகோதரி பத்தி வருந்தி ஒரு பொண்ணு பேசிட்டு இருக்க போட்டி போட்டுட்டு, அந்த பக்கம் ஊப்ஸ்ன்னு ஒரு போட்டோ விளம்பரம். இதெல்லாம் தெரியாம பண்ணதுன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு, ஒருவேளை இப்படி லேஅவுட் டிசைன் பண்ணாதான் சம்பளம்ன்னு ஓனர் சொல்லி இருப்பாரு போல. ஆனாலும், உணர்வுகளோட விளையாடுறது தப்பு.

ஃபன்னாக்கும்...

ஃபன்னாக்கும்...

சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று ஒப்புக் கொண்ட போதகர் செய்தி ஒருபுறம். அதுக்கு பக்கத்துல பாய் சோ ஹாட்ன்னு ஐஸ் க்ரீம் விளம்பரம். எப்படி எல்லாம் மேட்ச் பண்றாங்க பாருங்க இந்த நியூஸ்பேப்பர் லேஅவுட் டிசைனர்ஸ்.

கிரியேட்டிவ் ஆமா...

கிரியேட்டிவ் ஆமா...

உங்க கிரியேட்டிவ்ல தீயக் கொண்டு கொளுத்த. நிஜமாலே சொல்லுங்க தம்பி அதுல கிரியேட்டிவ் இருக்கா..? கிரியேட்டிவ்ங்கிற பேருல நம்ம ஆளுங்க பண்ற அக்கப்போர் தாங்க முடிவியவில்லை. இதோ! இந்த நியூஸ்பேப்பர்ல இருந்து, மசாலா பட டைரக்டர்கள் வரைக்கும் நம்மள கிரியேட்டிவ்ங்கிற பேருல நோகடிக்கிறாங்க.

என்ன போட்டோ இது...

என்ன போட்டோ இது...

இறந்த கணவரின் சேமித்து வைக்கப்பட்டிருந்த உறை நிலையில் இருந்து விந்து பயன்படுத்தி கருத்தரிக்க நீதி மன்றம் நாடி வழக்கில் வெற்றிப் பெற்றுள்ளார். சரி அவங்க சந்தோசமா தான் இருப்பாங்க... அதுக்குன்னு.. இப்படி ஒரு டபிள் மீனிங் போட்டோவ அங்க போடணுமா? பக்கத்துல போட்டுருக்க எத்திக்ஸ்... நீங்களும் கொஞ்சம் பார்க்க வேண்டாமா?

எதுக்கு...

எதுக்கு...

சத்தியமா இவங்க என்ன மீன் பண்றாங்கன்னு புரியல... இரண்டு ஃபிங்கர்.. ஒரு தம்ப்... அத வெச்சு நீ என்ன பண்ணுவ.. அதுல என்ன அமேஸிங். அந்த பய என்ன பண்றான், அந்த பொண்ணு எதுக்கு சிரிக்கிது. ஏதாவது ஏடாகூடமா போட்டு விடுறதே இவங்களுக்கு பொழப்பா போச்சுங்க!

இது தேவையா....

இது தேவையா....

இது இன்னொரு டபிள் மீனிங் தரும் அடுத்தடுத்த செய்திகள். மேல ஸ்கவுட் பாய்ஸ்ல ஓரினச் சேர்க்கையாளர் பசங்கள சேர்த்துக்க ஒத்துக்கிட்டாங்கன்னு போட்டுருக்கு. கீழ இருக்க செய்தி தலைப்பு.. பின்னாடி கதவு வழியான்னு போட்டுருக்காங்க. இத இரண்டையும் நாம சம்மந்த படுத்தி தப்பா யோசிக்க கூடாது... ஓகே!

நிறையவே பார்த்துட்டோம்..

நிறையவே பார்த்துட்டோம்..

இப்படி எசக பிசக நடுப்பக்கத்துல விளம்பரங்கள பிளேஸ் பண்ற லேஅவுட் எல்லாம் நாம நிறையவே பார்த்திருப்போம். இந்திந்த பக்கத்துல விளம்பரம் பண்ண, இத்தன அமவுண்ட்ன்னு வேறுபாடு இருக்கு. ஒருவேளை, அவங்க விளம்பரம் போட சொல்ற பக்கமும், இவங்க போடுற செய்தியும் இப்படி கோ-இன்சிடென்ட் ஆயிடுதோ?

இதுவும் நடக்குது!

இதுவும் நடக்குது!

இந்த செய்தியும், படமும் வேறவேற தான்னாலும்... இப்படியான சம்பவங்கள் நம்ம ஊர்லயும் ஒன்னாவே நடக்குறது நாம பார்க்க முடியுது. சமீபத்துல பெங்களூருல நாய் கறி சமைச்சுட்டு வந்த பிரியாணி கடையை கண்டுப்பிடுச்சதா ஒரு செய்தி. கண்டுபிடிச்ச செய்து ஒன்னு தான். ஆனால், கண்டுபிடிக்கப்படாத செய்திகள் ஏராளம்.

நிறையா பார்களுக்கு பக்கத்துல இருக்க சாலையோர அசைவ கடைகளில் சிக்கன், மட்டனுக்கு பதிலா, நாய், பூனை, பெருச்சாளி இறைச்சி கலக்கப்படுறதா கூட அடிக்கடி சொல்லப்படுது. இதெல்லாம் எவ்வளோ உண்மை, பொய்ன்னு முதல்ல கண்டுபிடிக்கணும்.

கற்பழிப்பு வழக்கு!

கற்பழிப்பு வழக்கு!

இந்த பக்கம், நான் வேண்டாம் என்று கூறியும் என்னை அவள் கற்பழித்தால் என்ற செய்தி. அந்த பக்கமா பாருங்கள். மத்தவங்க நோ சொன்னா, நாங்க எஸ் சொல்வோம்ன்னு விளம்பரம். இதுக்கு பேரு கோ-இன்சிடென்ட்டா...? என்னமோ போங்க தம்பி... இந்த நியூஸ் பேப்பர் லேஅவுட் டிசைனர்களுக்கு இதுவே வேலையா போச்சு.

கொண்டாட்டம்!

கொண்டாட்டம்!

கீழ இருக்க செய்தி என்னன்னா... செக்ஸ் குற்றவாளி வேஸ்ட்போர்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்ன்னு இருக்கு. மேல இருக்க புகைப்படத்த பார்த்தீங்கன்னா வயசான ஒருத்தர ஊரே கொண்டாடி தூக்கிட்டு போகுது அவரு கையில கோப்பை வேற. இதெல்லாம் கோ-இன்சிடென்ட்டா?

ராயல் குடும்பத்துக்கே வா..

ராயல் குடும்பத்துக்கே வா..

அங்க தொட்டு, இங்க தொட்டு.. கடைசில அரச குடும்பத்து மேலையே கை வெச்சிட்டாங்க... குருநாதா.... இதென்னமோ ஸ்பெஷல் அயிட்டமா இருக்கும் போலே... மேல, அவங்க ரெண்டு பெரும் கிஸ் பண்ணி ரொமான்ஸ் பண்ற படத்த போட்டுட்டு. கீழ, ஒசாமா பின் லேடன் இறந்துவிட்டார்ன்னு செய்தி. எதுக்கு?

மறுக்கா பாருடா...?

மறுக்கா பாருடா...?

அரச குடும்பத்து பெண்கள் கிரீடத்த உத்து பார்க்குற போட்டோவ போட்டுட்டு... கீழ சூனியக்காரியால் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்னு செய்தி. இவங்க இப்படி தாங்க.. இவங்கள ஒன்னும் பண்ண முடியாது. வாங்க நாம அடுத்த படத்த பார்க்கலாம்.

நல்லா ஒப்பிடுறீங்க...

நல்லா ஒப்பிடுறீங்க...

மேல நான்கில் ஒரு பெண் தனது கணவனால் அடித்து துன்புறுத்தப்படுகிறார்ன்னு செய்தி. இந்த தந்தையர் தினத்தன்று அவரை ட்ரீட் செய்யுங்கள்ன்னு விளம்பரம். சரி மத்த கோ-இன்சிடென்ட் மாதிரியே இதையும் எடுத்துக்க் வேண்டியது தான் போல.

என்ன?

என்ன?

ஐரோப்பியா பயணம் மேற்கொண்டு கொண்டாடி மகிழுங்கள்ன்னு விளம்பரம். விளம்பரம் எல்லாம் சரி தான்ப்பு... ஆனா, மகிழ்ச்சியா இருக்க நீங்க போட்டிருக்க படங்கள் தான் கொஞ்சம் இல்ல... நிறையவே ஏடாகூடமா இருக்கு. சிலையோட வேற பாகமே கிடைக்கலையா.. அதுக்கு கீழ இன்னொரு டபிள் மீனிங் கட்டிட தோற்றம்.. அதுக்கும் கீழ ஊற்று... அதென்ன கடைசி படத்துல ரெண்டு பந்து கைல... இல்ல தெரியாம தான் கேட்கிறேன்... இதெல்லாம் எந்த விதத்துல நியாயம்...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Awkward Newspaper And Magazine Layout Disasters Ever!

Awkward Newspaper And Magazine Layout Disasters Ever!