For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் பாக்கெட்டில் இருந்தது என்ன தெரியுமா?

இரண்டாம் உலகப்போரின் போது பங்கேற்ற போலிஷ் நாட்டு ராணுவ வீரர் 70 ஆண்டுகளுக்கு பிறகு தன் ராணுவ உடையை கண்டு ஆச்சரியம்.

|

வரலாற்றில் நடந்த நிகழ்வுகள் என்று சொல்வதெல்லாம் உண்மையிலேயே பொக்கிஷங்கள் என்று தான் சொல்ல வேண்டும் தகவல் தொழில்நுட்பம், இன்றைக்கு இருக்கிற போக்குவரத்து வசதிகள், என எதுவும் இல்லாத அந்த காலத்தில் எப்படி இதெல்லாம் சாத்தியமானது என்று பல நேரங்களில் நமக்கு ஆச்சரியமாய் இருக்கும்.

அப்போது அவர்கள் என்ன பயன்படுத்தியிருப்பார்கள். ஒரு தகவலை கொண்டு சேர்ப்பதற்கும் வாங்குவதற்கும் என்னென்ன பிரயத்தனம் பட்டிருப்பார்கள் என்று நினைக்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது அல்லவா? இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒக்னிவோ போலிஷ் மியூசியம் தன்னார்வல தொண்டு நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு இரண்டாம் உலகப்போரின் போது வீரர் ஒருவர் பயன்படுத்திய யுனிஃபார்ம் கிடைக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் போது அணிந்த உடை இப்போது கிடைத்திருப்பதை நினைத்து மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். அதை விட இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்த ஆடை இப்போதும் மிகவும் ஃபிரஷ்ஷாக இருந்தது தான்.

Image Courtesy

 #2

#2

அந்த ஆடை அவ்வளவு கனமாக இருந்தது. தூக்கவே இவ்வளவு சிரமமாக இருக்கிறதே? எப்படி இதை அணிந்து போர் புரிந்தார்கள் என்பது அவர்களுக்கு மில்லியன் டாலர் கேள்வியாய் நின்றது.

ஆடையை பரிசோதித்துக் கொண்டிருந்த போது தான் சட்டையின் சைட் பாக்கெட்டில் ஒரு பேப்பர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Image Courtesy

#3

#3

எடுத்துப் பார்த்தால் அது ஒருவருடைய புகைப்படம். கருப்பு வெள்ளையில் ஒரு புகைப்படமாக இருந்தது. அதில் ஒருவர் இந்த யூனிஃபார்ம் அணிந்து நின்றிருந்தார். அனேகமாக இந்த யூனிஃபார்மின் சொந்தக்காரராக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து அவரைப் பற்றிய தகவலை சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

Image Courtesy

#4

#4

இந்த படம் எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கும் அதிகமாக இருக்கும். ராணுவத்தில் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தவராய் இருக்க வேண்டும் அவர் இப்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதே சந்தேகமாய் இருந்தது. ஆனால் அவர்கள் தேடலை நிறுத்தவில்லை.

அவரிடமிருந்து அப்போது நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கலாம் அல்லவா?

Image Courtesy

#5

#5

நீண்ட முயற்சிக்குப் பின் அந்த புகைப்படத்தில் இருப்பவர் யாரென்று தெரிந்தது. போலிஷ் ராணுவத்தில் இரண்டாம் உலகப்போரின் போது மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய லூக்காஸ் குல்சிஸ்கி. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் உடனடியாக வேறு இடத்திற்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.மனிடோபா, போஸ்டான்,வாசிங்டன் என்று மாறி மாறி வாழ்ந்து வந்திருக்கிறார்.

Image Courtesy

#6

#6

யாரென்று தெரிந்து விட்டது ஆனால் அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அப்போது ராணுவத்தில் பணியாற்றிய மருத்துவர்களில் மிகவும் பிரபலமானவராக லூக்காஸ் இருந்தார் என்பதால் பலருக்கும் குறிப்பாக வரலாற்று அறிஞர்களுக்கு எல்லாம் அந்த பெயர் பரிச்சயமாய் இருந்தது. அவரை கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு இருந்தது.

நினைத்தது போல லூக்காஸின் மகள் டோர்த்தி குல்சிஸ்கி தொடர்பு கிடைக்கிறது.

Image Courtesy

#7

#7

அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் யுனிஃபார்மில் கண்டெடுத்த போட்டோவை காண்பிக்கிறார்கள். அதோடு அது எங்கிருந்து எடுத்தோம் என்றும் சொல்ல மகளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு முந்தைய புகைப்படம் அப்பாவின் ராணுவ உடையைப் பற்றி சொன்னதும் உணர்ச்சி வசப்பட்டாராம்.

இவ்வளவு காலங்களாக அந்த ஆடை நல்ல நிலையில் இருக்கிறதா? அப்பா அதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவார் என்றார்.

Image Courtesy

#8

#8

மகளும் அந்த மியூசியத்தில் இருந்தவர்களும் யூனிஃபார்மை ஒரு பெட்டியில் வைத்து அப்பாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தார்கள். மகள் 106 வயதுடைய லூக்காஸ் அருகில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பரிசை கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி அந்த பெட்டியை கொடுத்தாராம்.

அப்போது நடந்த விஷயங்களை மகள் கூறுகையில், அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன பரிசு? என்று கேட்டார் நாங்கள் நீங்களே பிரியுங்கள் என்று சொன்னோம்.

Image Courtesy

#9

#9

பிரித்து பார்த்ததும் அப்பா ஆனந்தத்தில் அழுதே விட்டார் அதை அணைத்து நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தார். உணர்சிவசப்பட்டவராய் இருந்த அப்பாவை ஒரு வழியாக சமாதானம் செய்ய வைத்து அந்த யூனிஃபார்மை அணிந்து கொள்ளச் சொன்னோம்.

எழுந்து நிற்க கூட தள்ளாடிய அப்பா யூனிஃபார்மை பார்த்தும் விறைப்பாக எழுந்து கொள்ள முயன்றார்.

Image Courtesy

 #10

#10

சந்தோஷமாக அணிந்து அணிந்து கொண்டு தொப்பியையும் அணிந்து பெருமிதத்தோடு போஸ் கொடுத்தார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் இப்போதும் அந்த ஆடை அப்பாவுக்கு அவ்வளவு கச்சிதமாக இருந்தது. ராணுவ உடை என்றால் சும்மாவா?

மீண்டும் தன் இளைமைக்கே திரும்பிவிட்டதாக அப்பா சொன்னார்.

Image Courtesy

#11

#11

தன்னுடைய ராணுவ யுனிஃபார்ம் இவ்வளவு ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்த மகிழ்ச்சியில் சில வாரங்களில் அப்பா இறந்து விட்டார்.

அந்த ராணுவ உடையை மீண்டும் நாங்கள் அருங்காட்சியகத்திற்கே திருப்பி கொடுத்துவிடப்போகிறோம் ஏனென்றால் அது எங்களுக்கு மட்டுமல்ல வருங்கால சந்ததியினருக்கு பொக்கிஷமான ஒன்று!

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Army Man Found His Uniform After 70 years

Army Man Found His Uniform After 70 years
Story first published: Friday, June 15, 2018, 13:46 [IST]
Desktop Bottom Promotion