உத்து பாத்தா தான் இதெல்லாம் புரியும்!

Posted By:
Subscribe to Boldsky

இயல்பாக ஒருவர் நமக்கு அறிவுரையைச் சொன்னால் நாம் கேட்க மாட்டோம். அதே விஷயத்தை கிண்டலடிக்கும் தொனியில் சொல்ல சிரித்து சிரித்தே நாம் அதனை ஏற்றுக் கொண்டுவிடுவோம். அதை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ நம்மை அந்த விஷயம் குறித்து யோசிக்கவாவது செய்திடுவோம்.

ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்டன் குடிம் என்ற கலைஞர் சில சார்கசம் ஓவியத்தை வரைந்திருக்கிறார். இவர் முழு நேர இன்ஜினியராக இருந்தாலும் ஓவியத்தின் மீது அலாதி ஆர்வம் கொண்டவர். பள்ளி படிக்கும் காலத்திலிருந்தே கற்பனையுடன் பல ஓவியங்களை வரைய இன்று வரை அந்த ஆர்வம் தொடர்கிறது. தற்போது சமூகத்தில் நடக்கிற சில சம்பவங்கள், தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்க்கையில் அதனை செய்திருப்போம் தவறு என்றே தெரியாமல் தினமும் செய்து கொண்டிருக்கும் விஷயத்தை பொட்டில் அடித்தார் போல ஆண்டனின் ஓவியம் பேசுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமூக ஊடகங்கள் :

சமூக ஊடகங்கள் :

ஒரு போட்டோ எடுது அதனை உங்களது சமூக ஊடகத்தில் பூடகரமாக போட்டுவிட்டு லைக் வருகிறதா என்று நொடிக்கு ஒரு முறை பார்த்துக் கொண்டிருப்போம். இயல்பு வாழ்க்கையில் ஒரு மாதிரியும் ஆனால் சமூகத்தில் நம்மை மிகவும் பகட்டாக காட்டிக் கொள்ளும் போக்கும் நம்மிடத்தில் நிறையவே இருக்கிறது.

அதை அழகான இந்த மயில் ஓவியம் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

உதவிக்கரம் :

உதவிக்கரம் :

ஆபத்தில் ஒருவர் உதவிக் கேட்கும் போது சுயநலமாய் தவிர்ப்பது ஒரு வகை என்றால் அதன் பிறகு நான் உதவி செய்கிறேன் என்று பிறரிடம் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக போட்டோ எடுப்பதோ அல்லது செல்ஃபி எடுப்போம்.

இந்த ஓவியமும் அதே போலத்தன். ஆபத்தில் ஒருவர் தவிக்கும் போது உதவி செய்வது போல அருகில் செல்வதும் பின் அவனை விட நான் உயர்ந்தவன் என்று சொல்லிவிட்டு அவரை மூழ்கடித்து வருகிறோம்.

காக்கை :

காக்கை :

இயற்கையை அதன் இயல்பில் இருக்கவிட வேண்டும். மனிதனால் வேகமாக சிந்திக்க முடிகிறது அதனை செயல்படுத்த முடிகிறது என்பதற்காக இயற்கையின் இயல்பையே சீர்குலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்குகிறது இந்த படம்.

வானம் தாண்டி பறக்க வேண்டியது பறவையின் இயல்பு ஆனால் நம் விருப்பத்திற்கேற்ப அதனை நாம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறோம். இது பறவையை மட்டும் பார்க்காமல் ஒட்டு மொத்த இயற்கையையும் வைத்து பாருங்கள்.

சாதனைகள் :

சாதனைகள் :

சின்ன சின்ன விஷயங்களை கூட பூதகரமாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறோம். இயல்பாக கடந்து வர வேண்டிய விஷயங்களைக் கூட பூதாகரமாக்கி மிகப்பெரிய விஷயமாக பார்ப்பதால் பெரிய சாதனைகள் எதுவும் எட்ட முடியாமல் போய் விடுகிறது.

இது சாதரணமாக நமக்குத் தோன்றாது, ஆனால் உண்மை இது தான்.

வார்த்தைகள் :

வார்த்தைகள் :

எதை யோசிக்கிறோமோ, எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோமோ அதுவே நம் செயல்பாடுகளாகிறது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் இந்த ஓவியம்.

வெளியிலிருந்து உள்ளே செலுத்தப்படுவது தான் வார்த்தைகளாகவும், செயல்களாகவும் வருகிறது அதுவே நம்மைப் பற்றிய பிம்பத்தை கட்டமைக்கிறது.

எல்லாமே நீ தான் :

எல்லாமே நீ தான் :

இன்றைக்கு மனிதர்களிடம் செலுத்த வேண்டிய அன்பைத் தாண்டி பொருட்களுக்கு அன்பு செலுத்த துவங்கிவிட்டிருக்கிறோம். இதன் விளைவாக ஒவ்வொரு மனிதனும் தனித்தீவாகியிருக்கிறான், அதோடு விர்ச்சுவல் உலகமே தனக்கான இடம் என்று நினைத்து தங்களை சுருக்கிக் கொள்கிறார்கள்.

அதனை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப் படம்.

பெற்றோர்களே! :

பெற்றோர்களே! :

பெற்றோர்களுக்கும் அவர்களின் எதிர்ப்பார்ப்பையும் கிண்டல் செய்திருக்கிறது இந்த ஓவியம். குழந்தைகள் ஆரம்பித்திலிருந்து வெற்றியாளராக வேண்டும். நேரடியாக உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதை அசத்தல் ஓவியமாக வரைந்திருக்கிறார்.

மிஸ் யூ :

மிஸ் யூ :

டிஸ்டன்ஸ் ரிலேஷன்சிப் இருப்பவர்கள் தான் ஒருவரை ஒருவர் பிரிவை உணர்வார்கள் என்று சொல்வதெல்லாம் அந்தக்காலம். ஒரே ஊரில், ஒரே இடத்தில்,ஒரே அறையில் அருகருகில் உட்கார்ந்திருந்தாலும் அவர்கள் பிரிவையும் தனிமை உணர்வையும் தான் சுமப்பார்கள் என்பதை காட்டும் ஓவியம் தான் இது!

தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் செல்போன்கள் எவ்வளவு ஆழமாக இடத்தை பிடித்திருக்கிறது என்பதை சொல்லிச் சென்றிருக்கிறது இந்த ஓவியம்.

மெமரீஸ் :

மெமரீஸ் :

இன்றைக்கு எதோ நடக்கிறது, அதனை நாம் நினைவுகளாக சேமித்துக் கொண்டிருக்குகிறோம். இப்போது என்ன செய்கிறோமோ அதுவே நாளை நமக்கு விடியும், அந்த முகமே நமக்கு நம் முகமாக தெரியும் என்பதை சொல்லியிருக்கிறது.

மொபைல்

மொபைல்

மொபைல் போனுக்கு இன்றைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நாம் வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதனை ஓவியமாக வரைந்து காட்சிப் படுத்தியிருக்கிறார் ஆண்டன்.

 தொழிற்சாலை :

தொழிற்சாலை :

பள்ளிக்கூடங்கள் மாணவர்களை செதுக்கக்கூடிய, அவர்களை சிந்திக்க தூண்டுகிற விஷயங்களை எல்லாம் கற்றுக்கொடுக்கும் இடமாக இல்லை மாறாக கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான தொழிலாளர்களை உற்பத்தி செய்து கொடுக்கும் ஒரு தொழிற்சாலையாக செயல்படுகிறது என்பதை இந்த ஓவியம் விளக்குகிறது.

மாணவனின் கற்பனையில் வேறொன்று இருக்க ஆனால் தங்களுக்கு தேவையான ஒன்றை உருவாக்கி கொள்கிறார்.

கனவே கனவே :

கனவே கனவே :

இயல்பாக சமூகத்தில் நடக்கிற ஓர் விஷயத்தை கடந்து சென்றிருக்கிறார் ஓவியர். பெண் தினம் தினமும் எத்தனை போராட்டங்களை சந்தித்து மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறாள் ஆனால் பிறருக்கு பெண்கள் குறித்த பார்வை எப்படியிருக்கிறது??

இசை மருத்துவம் :

இசை மருத்துவம் :

நம்மில் பெரும்பாலானோர் இதனை உணர்ந்திருப்போம்.நெகட்டிவாக உணரும் தருணங்களில் ஹெட்போன் தான் நமக்கு சிறந்த மருத்துவமாக இருக்கிறது.

நம் மனதை அமைதிப்படுத்த, நம் எண்ணங்களை சிறிது நேரம் அமைதிப்படுத்த இசை மிகச்சிறந்த மருத்துவமாக இருக்கிறது.

எல்லாம் முக்கியம் :

எல்லாம் முக்கியம் :

தேவையற்ற அல்லது சொற்ப விஷயங்கள் தான் நம் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயத்தை மறந்து விடுகிறோம்.

லக்கி :

லக்கி :

கூட்ட நெரிசலில் ஏற்கனவே ஒரு பெண் நின்றிருக்கிறாள் அங்கே இடமேயில்லை என்று தெரிந்தும் ஏறிக் கொள்ளும் நபரின் எண்ண ஓட்டத்தினை பாருஙக்ள்

லட்சியம் :

லட்சியம் :

லட்சியத்தை அடைய சில தியாகங்களை நீங்கள் செய்தாக வேண்டும். எல்லாமே உங்கள் வசதிக்கு ஏற்ப, எந்த மெனக்கெடலும் இல்லாமல் இருந்து விட்டு எந்த முயற்சியுமின்றி இருந்தால் உங்களுடை லட்சியக்கனவும் இப்படிதான் குப்பையில் வீசப்படும்.

All Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Amazing Sarcastic Images

Amazing Sarcastic Images
Story first published: Saturday, March 31, 2018, 17:47 [IST]