Latest Updates
-
சூரியனின் இரட்டை கிரக பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும்
2.0 பக்க்ஷி ராஜனோட மேக்கப் பின்னாடி இவ்ளோ பிரம்மாண்டமா..!
Recommended Video

2.0 பற்றிய பலவித பாராட்டுகளும், விவாதங்களும் மக்களிடையே வந்த வண்ணம் உள்ளது. கடந்த வியாழன் கிழமை சங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்த படம் 2.0. பல வகையான தொழிற்நுட்ப கலைஞர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தின், மேக்கப்பில் பல வித மாயாஜாலங்களை செய்துள்ளனர்.

குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் பக்க்ஷி ராஜனாக நடித்த அக்ஷய் குமாருக்கு போட்ட மேக்கப்பிற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 6 மணி நேரம் செலவாகுமாம். அப்படி என்ன தான் இந்த மேக்கப்பில் இருந்தது என்பதையும், ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் எவ்வாறு வடிவமைத்தனர் என்பது பற்றியும் வாங்க தெரிஞ்சிக்கலாம்...

2.0..!
"பேர கேட்டாலே சும்மா அதிருதுலே" என்கிற பாணியில் 2.0 ரசிகர்களின் கண்ணிற்கு ஒரு ரோபோடிக் விருந்தாக அமைந்தது. குறிப்பாக தியேட்டரில் பார்த்த அனைவருக்கும் 3D எபக்ட்ஸ் அனுபவம் அட்டகாசமாக கிடைத்திருக்கும். தமிழ் சினிமாவில் இது வரை யாரும் பயன்படுத்தாத தொழிற்நுட்பங்களையும், கலை நுணுக்கங்களையும் இந்த படத்தில் அற்புதமாக எடுத்திருந்தனர்.

பாகுபலியை தூக்கி சாப்பிட்டுவிட்டது..!
2.0 படம் பல வகையான சாதனைகளை உலக அளவில் நிகழ்த்தி வருகிறது. குறிப்பாக இந்த படம் ஹாலிவுட் படமான அவென்ஜெர்ஸ் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளதாம். அத்துடன் இந்திய சினிமாவின் மைல் கல்லான பாகுபலி படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் சாதனையை முந்தியுள்ளதாம்.

ப்பா..! என்ன மேக்கப்பூ..!
உண்மையில் இந்த படத்தில் வேலை செய்த சிகை அலங்கார நிபுணர்கள், பிரமாதமான மேக்கப்பை ஒவ்வொருவருக்கும் போட்டிருந்தனர். குறிப்பாக அக்ஷய் குமாரின் மேக்கப் ரஜினியின் மேக்கப்பை விட மிக கடினமானது. இதை பற்றி 2.0 குழுவே பல இடங்களில் பேட்டி கொடுத்திருக்கின்றனர்.

மிக கடினமானது..!
மற்ற கதாபத்திரங்ளை விட அக்ஷய் குமாரின் கதாபத்திரம் அதீத கோரமானதாக இந்த படத்தில் காட்டிருப்பார்கள். இதற்கு பின் எத்தகைய உழைப்பு இருந்துள்ளது என நீங்கள் அறிந்தால் பிரமித்து விடுவீர்கள். தினமும் இவருக்கு மேக்கப் போட்டு, அதனை எடுப்பதற்கு கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மேல் ஆகுமாம். இப்படியே 40 நாட்கள் வரை அக்ஷய் குமார் தனது நடிப்பிற்காக அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டாராம்.

படாத பாடு பட்டுட்டாராம்..!
பொதுவாக மேக்கப் போட்டால் நமது தோலில் உள்ள துளைகள் ஆக்சிஜனை சுவாசிப்பதற்கு மிக கடினமாக இருக்கும். அதிலும் 2.0 பக்க்ஷி ராஜன் அளவிற்கு மேக்கப் போட்டால் அவ்வளவுதான்..! அது மட்டுமில்லாமல் இந்த மேக்கப்பை மீண்டும் எடுக்கும் போது ஏராளமான அளவில் வியர்வை வெளியேறுமாம்.

எமியின் பேட்டி..!
2.0 படத்தில் தனது சக நடிகரான அக்ஷய் குமார் எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார் என எமி தனது பேட்டிகளிலும், ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். அதில், " பெண் கலைஞர்களை விட அக்ஷய் குமாருக்கு தான் இந்த படத்தில் அதிக மேக்கப் போட வேண்டியதாக இருந்தது என கூறியுள்ளர்".

வெறும் தண்ணீயா..?
2.0 படத்தின் ஷூட்டிங் நேரங்களில் அக்ஷய் குமார் தனது கதாபாத்திரத்தின் காரணத்தால், வெறும் திரவ நிலையில் உள்ள உணவுகளையே சாப்பிட்டு வந்தாராம். பக்க்ஷி ராஜனாக நாம் அவரை திரையில் பிரம்மாண்டமாக பார்த்ததற்கு இவரின் இந்த "திரவ டயட்டும்" மிக முக்கிய காரணம்.

இதுவரை மேக்கப் போட்டதே இல்லை..!
இந்த படத்தின் மேக்கப் பற்றிய பேட்டியில் அக்ஷய் குமார் இவ்வாறு கூறியுள்ளார். "நான் எனது 25 ஆண்டு சினிமா துறை வாழ்வில் பெரிதாக மேக்கப் எதுவும் போட்டத்தில்லை. ஆனால், ஒட்டு மொத்தமாக 2.0 படத்தில் 25 ஆண்டுகளுக்கு வேண்டிய அனைத்து வித மேக்கப்பையும் இதில் எனக்கு போட்டிருக்கின்றனர். இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு பிரம்மிக்க வைக்கும் வகையில் உருவாக்க பல கலைஞர்கள் கடினமாக வேலை செய்துள்ளனர்" என கூறியுள்ளார்.

கண்ணாடியில் ரசித்தமை..!
அவருக்கு மேக்கப் போட்ட கலைஞர்களில் ஒருவரான ரிச்சர்ட் என்பவர் இவ்வாறு கூறினார். " முதல் முறையாக நாங்கள் பக்க்ஷி ராஜன் வேடத்தை அக்ஷய் குமாருக்கு போட்ட பின்னர் கண்ணாடியில் அவரை பார்த்து, அவரே பிரமித்து போய்விட்டார். பிறகு தனது குடும்பத்தினருடன் செல்ஃபிகளை எடுத்து தள்ளினார்".

அசுர வெற்றி..!
இயக்குனர் சங்கர் நினைத்தது போன்றே பக்க்ஷி ராஜனின் கதாபாத்திரம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. 2.0 படத்தின் முதல் பாகத்தில் பயன்படுத்திய தொழிற்நுட்பத்தை விட இந்த படத்தில் அட்டகாசமான தொழிற்நுட்பத்தையும், சிகை அலங்காரங்களையும் பயன்படுத்தி உள்ளனர். ஆனால், இதில் மட்டுமா..?

மக்கள் செல்வனின் சீதக்காதி..!
இந்த படத்தில் அக்ஷய் குமார் முதல் முறையாக இவ்வளவு மேக்கப்பை போட்டுள்ளார். இதே போன்று நமது தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகரான விஜய் சேதுபதியும் தனது 25 ஆவது படத்தில், முதல் முறையாக சீதக்காதி படத்திலும் போட்டுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஆண்டவர் தான் முன்னோடி..!
இப்படி தமிழ் சினிமாவில் இந்த வகை மேக்கப்கள் பிரபலம் ஆக காரணமாக இருந்தவர்களில் முன்னோடியாக திகழ்பவர் உலக நாயகன் கமல் தான். தமிழ் சினிமாவில் இந்தியன், அவ்வை சண்மூகி, தசாவதாரம், போன்ற பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தனது நடிப்பின் மூலம் நடித்து காட்டியவர் நமது கமல் அவர்கள் தான்.



Click it and Unblock the Notifications











