Latest Updates
-
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு வெற்றி தேடிவருமாம் -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்! -
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கணுமா? அப்ப அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது! -
செஃப் ஷான்ஜித் ஸ்பெஷல் தக்காளி தம்புலியை எப்படி செய்யணும் தெரியுமா? -
கண் ஆரோக்கியத்திற்கான சிறந்த தென்னிந்திய உணவுகளை பட்டியலிட்ட டாக்டர் ஆதித்ரேய வர்மன்! -
பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடப்படுகிறது? முருகன் அருள் பெற ராசிப்படி செய்ய வேண்டிய தானங்கள்! -
ஏப்ரல் 1-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சந்திரன்: இன்று இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கும்... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 டம்ளர் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் கட்டுப்படும்... -
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்குமாம்...!
ஒவ்வொருவரும் விதிப்படி வாழ்க்கையில் இந்த மாதிரி 5 வகையான மனிதர்களை சந்திப்பார்களாம்...
நமது வாழ்நாளில் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்களை சந்திக்கிறோம். சில பேர்கள் நம்மளை கடந்து சென்று விடுவார்கள். அவர்களை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பும் நமக்கு ஏற்படுவதில்லை. சில பேர்கள் நண்பர்களாக மா
நாம் வாழும் இந்த உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மக்களை பார்க்கிறோம் சந்திக்கிறோம். சில சமயங்களில் திரும்ப திரும்ப ஒரு நபரையே சந்திக்க கூட நேரலாம்.

இதை உண்மையிலேயே நீங்கள் தற்செயல் நிகழ்வு என்று நினைத்தால், அது உண்மை இல்லை. இதற்கு பெயர் தான் அண்ட பிணைப்பு என்பது.

கோடிக்கணக்கான மக்கள்
நமது வாழ்நாளில் கிட்டத்தட்ட கோடிக்கணக்கான மக்களை சந்திக்கிறோம். சில பேர்கள் நம்மளை கடந்து சென்று விடுவார்கள். அவர்களை மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பும் நமக்கு ஏற்படுவதில்லை. சில பேர்கள் நண்பர்களாக மாறுகிறார்கள், சில பேர்கள் நம் மனதிற்கு பிடித்தவர்களாக நம்முடன் பயணப்படுகிறார்கள், ஏன் சில பேர்கள் நம் மனதை நொறுக்கிய நபர்களாக நம்மை விட்டு விலகிச் செல்கிறார்கள்.

புரியாத புதிர்
ஏன் இவர்களை நாம் சந்திக்க வேண்டும்? எதற்காக இப்படி நடக்கிறது? இதற்கு ஏதேனும் காரணம் இருக்கா? என்று என்றாவது நாம் யோசித்து இருக்கோமா? இப்படி காரணத்திற்காகவோ அல்லது பருவநிலை காலத்தை போல மாறுதலோ அல்லது நம் வாழ்க்கையில் இவர்கள் நுழைந்து வெளியேறுவது ஏன் நடக்கிறது? இந்த செயல்களை செய்ய நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கா என்ன? இப்படி எல்லா கேள்வியும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

விபத்துகள்
விபத்துகளும் சந்தர்ப்பங்களும் காரணமாக எதுவும் நம் வாழ்க்கையில் நடப்பதில்லை. நம் உலகத்தின் ஒட்டுமொத்த ஆற்றலும் இணைந்து செயல்படுகிறது. சிலர் இதை கடவுளின் செயல் என்கின்றனர். ஆனால் இதை நாங்கள் தனிப்பட்ட மனிதனின் குணப்படுத்தும் சக்தி என்கிறோம்.

குணப்படுத்தும் சக்தி
ஒரு உதாரணமாக உங்களிடம் குணப்படுத்தும் சக்தி இருந்தால் அது மனம் உடைந்த மக்களுக்கு மருந்தாக அமையும். அவர்களை சந்தோஷப்படுத்தி அவர்களை எளிதாக உங்கள் வசம் ஈர்த்து விடுவீர்கள். ஏன் நீங்களே மனம் உடைந்தால் கூட உங்கள் காயங்களை ஆற்றல் சக்தி உங்களுக்கும் கை கொடுக்கும்.

பிரபஞ்ச மொழி
எனவே நாம் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் நபர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மிடம் அனுப்பப்படுகின்றனர் என்பது தான் பிரபஞ்சத்தின் உண்மையான மொழி. அந்த நபர்கள் நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதோடு நம் வாழ்க்கையையும் வடிவமைத்து செல்கிறார்கள்.
நம் வாழ்நாளில் குறைந்த பட்சம் ஒரு முறையாவது சந்தித்த நபர்களை பற்றி இப்பொழுது பார்க்க போகிறோம்.

வளர்ச்சிக்கு கை கொடுத்தவர்
உங்கள் மதிப்பு மற்றும் திறமையை உணர்ந்து கொள்ள உதவிய நபர்கள் இவர்கள் தான். உங்கள் மனது முழுவதும் நேர்மறை எண்ணங்களை துளிர்க்க விட்டவர்கள் இவர்கள். அவர்களுடைய நம்பிக்கை இல்லையென்றால் நம் மீதே நமக்கு நம்பிக்கை வந்திருக்காது என்று சொல்லும் அளவிற்கு உறுதுணையானவர்கள்.
இந்த மாதிரியான மனிதர்களை நீங்கள் உங்கள் வாழ்நாளில் கண்டால் கொண்டாடுங்கள். இவர்கள் தான் உங்களை ஊக்குவித்து உங்கள் லட்சியத்தை எட்டிப் பிடிக்க உதவியவர்கள்.

வழிகாட்டிய நபர்கள்
தினசரி நம் வாழ்வில் நடக்கும் போராட்டங்கள் தடைக்கற்கள் நம் பாதையை தடம் புரள செய்து விடலாம். இந்த மாதிரியான சமயங்களில் நமது எண்ணம் முழுவதும் பனிமூட்டம் போல் இருள் சூழ்ந்த வழியாக இருக்கும் . நீங்கள் உங்கள் பாதையை இழந்து விட்டு தவிர்ப்பீர்கள். உங்கள் கனவுகளும் இலக்குகளும் இலட்சியங்களும் கண்ணுக்கே எட்டாத தூரத்தில் போய்க் கொண்டு இருக்கும்.
என்ன செய்ய முடியும். ஆனால் இந்த உலகம் உங்களுக்காக ஒரு நபரை கொண்டு வந்து சேர்க்கும். நீங்கள் அவரை சந்திப்பீர்கள். இந்த நபர்கள் உங்கள் வாழ்க்கை பாதையை நினைவூட்டியவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஊக்கம் உங்களுக்கு வழிகாட்டும்.

காயப்படுத்தியவர்கள்
நம் வாழ்வில் சந்திக்கின்ற சில நபர்கள் நமக்கு வலிகளையும் வேதனைகளையும் கொடுத்து செல்பவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய இருப்பு உங்களை கோபப் படுத்தும் . இந்த மாதிரியான நபர்களை மீண்டும் வாழ்நாளில் சந்திக்க கூடாதென்று வேண்டிக் கொள்வோம்.
ஆனால் இந்த மாதிரியான நபர்களிடமிருந்து நீங்கள் நிறைய கற்று கொள்ளலாம். இவர்களின் எதிர்மறை தாக்கம் உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை வழி வகுத்து செல்லும். உங்களை மாற்றும் நபர்கள் இவர்கள் தான். இவர்கள் உங்களை பின்னோக்கி இழுக்கவே இல்லையென்றால் நீங்கள் முன்னோக்கி அடியெடுக்க மாட்டீர்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை இவர்களுடைய பயணம் உங்களுக்கு தேவை என்பதை பிரபஞ்சம் முடிவு செய்கிறது.

தாக்கம்
இவர்கள் நம் வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணப்பட போவதில்லை. இவர்களின் பயணம் வெறும் குறுகிய காலமாக இருக்கும். ஆனாலும் இந்த குறுகிய காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நபராக இவர்கள் இருப்பார்கள். அவர்களுடன் நாம் பயணப்பட்ட காலம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மிகவும் முக்கியமான நபராக நம் மனதில் எழத் தொடங்கி விடுவார்கள். அவர்கள் இப்பொழுது எங்கே எப்படி இருப்பார்கள் என்ற கேள்விகள் எப்பொழுதும் நம்முள் எழும்.

வாழ்நாள் முழுவதும் பயணிப்பவர்கள்
இவர்களுடன் தான் உங்கள் வாழ்நாள் முழுவதும் பயணப்பட போகிறது. இவர்கள் தான் உங்களின் உண்மையான தோழர்கள். இவர்களின் பிணைப்பு வலிமையாக அல்லது மெல்லியதாக இருக்கலாம். ஆனால் உங்களை விட்டு
செல்லாத நபர்கள்
இவர்களை மாதிரி உங்களை புரிந்து கொள்பவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த மாதிரியான நபர்களை கண்டறிவது என்பது சாதாரண விஷயமல்ல. மிகவும் கடினமானது. ஏன் நடக்காது என்றும் கூட சொல்லலாம். இந்த பிரபஞ்சம் அப்படி ஒரு நபரை உங்களுக்காக கொடுத்தால் உங்கள் வாழ்க்கையில் அவர்கள் ஒட்டிக் கொள்கிறார்கள்.

காஸ்மிக் எனர்ஜி
காஸ்மிக் எனர்ஜி என்பது ஒரு சக்தி ஆகும். அது இந்த பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளிலும் காணப்படுகிறது. இந்த ஆற்றல் தான் ஒருவரின் வாழ்க்கையில் நடப்பதையும் சமநிலைபடுத்துவதையும் செய்கிறது. எனவே தான் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு காரணத்திற்காக நம்மிடம் அனுப்பப்படுகின்றனர். இது ஒரு தற்செயல் அல்ல. இந்த பிரபஞ்ச இணைப்பு தான் நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது.



Click it and Unblock the Notifications











