ஒலிம்பிக் போட்டிகளின் போது இலட்சக்கணக்கான காண்டம் விற்பனை - பின்னணியில் நடப்பது என்ன?

By: Staff
Subscribe to Boldsky

2018ம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்னும் இரண்டு நாட்களில் தென்கொரியாவின் பியோங்க்சாங்கில் துவங்கிவிருக்கிறது. இந்த போட்டியில் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த 2000திற்கும் மேலான தடகள வீரர்கள் பல விளையாட்டு பிரிவுகளில் பங்குபெறவிருக்கிறார்கள்.

ஆனால், இதுவல்ல இப்போதைய முக்கிய செய்தி. ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளின் போதும், அந்த போட்டியில் விளையாட வரும் தடகள வீரர்களுக்கு என பிரத்தியேகமாக காண்டம்கள் வழங்கப்படுகின்றன. அதுவும் ஆயிரக்கணக்கில்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு இலட்சம்!

ஒரு இலட்சம்!

தென்கொரியாவில் வரும் பிப்ரவரி ஒன்பதாம் நாள் துவங்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற விருக்கும் தடகள வீரர்களுக்கு தென்கொரியாவை சேர்ந்த ஆணுறை தயாரிப்பு கம்பெனி ஒன்று ஒரு இலட்சம் ஆணுறைகளை நன்கொடையாக அளித்துள்ளது.

 எய்ட்ஸ் பாதுகாப்பு மையம்!

எய்ட்ஸ் பாதுகாப்பு மையம்!

இது போதாமல், கொரியாவின் எய்ட்ஸ் பாதுகாப்பு அமைப்பு பத்தாயிரம் காண்டம்களை நன்கொடையாக அளித்துள்ளது. ஆகமொத்தம் ஒரு இலட்சத்து பத்தாயிரம் காண்டம்கள் நன்கொடையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற விருக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

2000!

2000!

துவங்கவிருக்கும் 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தமே இரண்டாயிரம் வீரர், வீராங்கனைகள் தான் பங்குபெற இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு ஒரு இலட்சத்து பத்தாயிரம் காண்டம்கள் தரப்படவுள்ளன. கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு ஆளுக்கு 55௫௫ காண்டம்கள் என்ற விகிதம் வருகிறது.

அதாவது இதர மராத்தான் போட்டிகளுடன் செக்ஸ் மராத்தானும் நடக்க போகிறது என்று ஆங்கில நாளேடுகள் தலைப்பிட்டு இந்த செய்தியை பதிவிட்டுள்ளனர்.

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

ஒரு நாள் 55 காண்டமா பயன்படுத்துவார்? என்று சிலர் கருதலாம்.

கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் ஒரு வாரத்திலேயே ஒரு இலட்சம் காண்டம்கள் தீர்ந்து போயின என்று தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

நடக்கவிருக்கும் குளிகால ஒலிம்பிக் போட்டியில் இதைவிட அதிகளவில் காண்டம்கள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியோ ஒலிம்பிக்!

ரியோ ஒலிம்பிக்!

சென்ற 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது விளையாட்டில் கலந்துக் கொண்ட தடகள வீரர்களால் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் காண்டம்கள் உபயோகப்படுத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. அதாவது சராசரியாக ஒவ்வொரு தடகள விளையாட்டு வீரரும் 42 காண்டம்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்:

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்:

கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பி போட்டிகளின் போது நானூறு அறைகளில் தங்கியிருந்த தடகள வீரர்கள் மொத்தம் நான்கு இலட்சம் காண்டம்கள் பயன்படுத்தியதாக கணக்கெடுக்கப் பட்டிருந்தது.

சிலர் வீரர்கள் காண்டம் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தால் தங்கள் சொந்த செலவில் காண்டம்கள் வாங்கி பயன்படுத்தினர் என்பதால் இந்த காண்டம் எண்ணிக்கை நான்கு இலட்சத்திற்கும் மேலாக இருக்கலாம் என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

பாதுகாப்பு அமைப்புகள்!

பாதுகாப்பு அமைப்புகள்!

பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பரப்புரை நடத்த, பாதுகாப்பி குறித்து பேச நூற்றுக்கணக்கான பேர் பணியமர்த்த பட்டிருந்தனர். மேலும், நாற்பதற்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சுரப்பிகள்!

சுரப்பிகள்!

தடகள வீரர்களை போன்ற திடகாத்திரமான ஆட்களுக்கு உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் என்பதாலும், உடலுறவில் ஈடுப்படுவது மன அழுத்தம் குறைய உதவும் என்பதாலும் இதுப்போன்ற போட்டி காலங்களில் அதிகளவில் இவர்கள் உடலுறவில் ஈடுப்பட காரணமாக இருக்கிறது.

ஆனால், தடகள போட்டிகள் மற்றும் பளுதூக்கும் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்கள் தான் அதிகம் உடலுறவில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது.

கவன குறைவு!

கவன குறைவு!

கால்பந்து மற்றும் இதர விளையாட்டு போட்டிகளில் விளையாடும் வீரர்கள் அதிகம் உடலுறவில் கவனம் செலுத்துவதில்லை. முக்கியமாக பிரேசில் கால்பந்தாட்ட நிர்வாகம் போட்டிகள் முடியும் செக்ஸ் உறவில் ஈடுபட கூடாது என்று உத்தரவிடும் என்று செய்திகளும் அறியப்படுகிறது.

அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது இதுப்போன்ற விளையாட்டுகளில் பங்குபெறும் வீரர்களின் கவனத்தை சிதறடிக்கும் என்று பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அர்னால்ட்!

அர்னால்ட்!

ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகள் உலக ஆணழகன் போட்டியில் பட்டம் வென்ற அர்னால்ட், ஆணழகன் போட்டிகளில் பங்குபெறும் போது அதிகமாக உடலுறவில் ஈடுபடுவார் என்றும். இது அவருக்கு ஒரு ஊக்கமளிக்கும் விஷயமாக இருந்தது என்றும் பலதரப்பட்ட தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

முழு உடற்தகுதியுடன் இருக்கும் நபர் அதிகமாக உடலுறவில் ஈடுபடுவதால் எந்தவித பக்கவிளைவும் வரப்போவதில்லை. ஒருவேளை, அதிகப்படியாக உடலுறவில் ஈடுபட வயாகரா போன்ற மருந்துகளை எடுத்துக் கொண்டால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

2018 Winter Olympics Condoms

2018 Winter Olympics Condoms
Story first published: Wednesday, February 7, 2018, 11:46 [IST]
Subscribe Newsletter