For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிள்ளையார் பால் குடிச்சாரே... அது எப்படி நடந்துச்சுன்னு தெரியுமா?

சில ஆண்டுகளுக்கு முன் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று யாரோ ஊர் மக்கள் முழுக்க கோவிலுக்கு போய் வேடிக்கை பார்த்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

By Kripa Saravanan
|

செப்டம்பர் 21, 1995. இந்த நாளை நம்மால் யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமானால், ஒரு மிகப்பெரிய விஷயம் வைரலாகிக் கொண்டிருந்தது. அது என்ன, பிள்ளையார் பால் குடிக்கிறார் என்பது தான்.

sprituality

அதைக்கேட்டவுடன் உடனே பார்த்தாக வேண்டும் என அத்தனை புரும் பிள்ளையார் கோவில்களுக்கு ஓடினார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்தேகம்

சந்தேகம்

அது எப்படி சாத்தியம் என்ற கேள்வியே இரண்டாம்பட்சமாகத் தான் எல்லோருக்கும் தோன்றியது. நம்முடைய பகுத்தறிவு நம்மை கேள்விட்டாலும் அதன்மீதான ஆச்சர்யம் நம்மைவிட்டு இன்னும் அகலவில்லை. அதற்கான பதிலும் நமக்கு இன்று வரை கிடைத்த பாடில்லை.

பயபக்தி

பயபக்தி

முன்னொருபோதுமில்லாத சம்பவம் பற்றி மிகவும் விசேஷமானது என்னவென்றால், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுடன் தோளோடு தோள் சேர்த்து , கோயில்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பிரமிப்பு மற்றும் பயபக்தியுடன் திரும்பி வந்தனர்.

சோதனை

சோதனை

எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுள் என்று அழைக்கப்படுவது ஏதோ ஒன்று இருக்கலாம் என்று உறுதியாக நம்புகிறது இந்த உலகம். வேலை முடிந்து வீடு திரும்பும் மக்கள் தங்கள் தொலைக்காட்சியை பார்த்து , அதிசயத்தைப் பற்றி அறிந்து, அதை வீட்டில் முயற்சி செய்தனர். கோயில்களில் நடந்த அதிசயம் வீட்டிலும் நடந்தேறியது. விரைவில் எல்லா கோயில்களிலும் , இந்துக்களின் வீடுகளிலும் உள்ள விநாயகர், மக்கள் கொடுக்கும் ஒரு ஸ்பூன் பாலை ஒவ்வொரு துளியாக குடிக்கத் தொடங்கினார்.

இது எப்படி ஆரம்பித்தது ?

இது எப்படி ஆரம்பித்தது ?

இதன் பின்புலத்தை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினோம். அமெரிக்காவின் ஹிந்துயிசம் டுடே என்ற பத்திரிகை ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. புது தில்லியில் ஒரு சாதாரண மனிதனின் கனவில், விநாயக பெருமான் வந்து தனக்கு பால் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால் திடுக்கிட்டு விழித்த அந்த மனிதன், விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில் அருகில் உள்ள கோயிலுக்கு விரைந்திருக்கிறார். அங்கு இவர் கூறியதைக் கேட்டு அந்த கோயில் பூசாரி, நம்பிக்கையின்றி அங்குள்ள விநாயகர் சிலைக்கு பாலை புகட்டும்படி கூறியிருக்கிறார். அந்த மனிதனும் பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூனில் பாலை புகட்டினார். என்ன ஆச்சர்யம்! அவர் புகட்டிய ஸ்பூனில் இருந்த பால் மறைந்து விட்டது. கடவுள் அவர் கொடுத்த பாலை முழுவதும் அருந்தி விட்டார்.

விஞஞான ரீதியான ஆராய்ச்சி

விஞஞான ரீதியான ஆராய்ச்சி

இந்து மத வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் முன்னெப்போதும் சம்பவிக்க வில்லை.

விஞ்ஞானிகளால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. பல ஆயிரகணக்கான ஸ்பூன் பால் எங்கு செல்கிறது என்பதை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் பலவாறு சோதனை செய்ய தொடங்கினார்கள். இதற்கான காரணிகள், என்னவாக இருக்கும் என்று குழம்பினார்கள் . மயிர்துளைத் தாக்கம், ஒட்டும் பண்பு, மேற்பரப்பு பதற்றம் போன்ற இயற்கை விஞ்ஞான நிகழ்வுகளை இதனுடன் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் இதற்கான சரியான விளக்கத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை நிகழாத ஒரு அதிசயம் எப்படி நடந்தது மற்றும் அடுத்த 24 மணி நேரத்தில் எப்படி நின்று போனது என்று அப்போது அறிய முடியவில்லை. அறிவியல் அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயம் இது என்று அவர்கள் அறிந்திருந்தனர்

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் "நவீன காலத்தின் சிறந்த ஆவணப்படுத்தப்பட்ட அமானுட நிகழ்வு," மற்றும் "நவீன இந்து வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது" என்ற உண்மையான அமானுஷ்ய நிகழ்வு இதுதான் என்று மக்கள் இன்றளவும் நினைகின்றனர்.

நம்பிக்கையின் மறுமலர்ச்சி

நம்பிக்கையின் மறுமலர்ச்சி

பல்வேறு நேரங்களில் உலகின் வெவ்வேறு மூலைகளிலும் (நவம்பர் 2003, போட்ஸ்வானா, ஆகஸ்ட் 2006, பரேலி, மற்றும் பல) இத்தகைய சிறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன, ஆனால் 1995 ஆம் ஆண்டின் புனிதமான நாள் போன்ற மற்றொரு நாள் இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை. இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நிகழ்வாக இந்துக்களால் பார்க்கப்படும் ஒரு நிகழ்வு இந்த "பால் அதிசயம் " என்று ஹிந்துயிசம் டுடே பத்திரிகை கூறுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்களிடையே ஒரு உடனடி மத மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. எந்த ஒரு மதத்திலும் இப்படியொரு மாற்றம் இதுவரை நிகழவில்லை . இந்துக்களின் நம்பிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. விஞ்ஞானி மற்றும் ஒளிபரப்பாளர் கியானா ராஜன்ஸ் தனது வலைப்பதிவில் 'பால் அதிசயம் ' சம்பவத்தை 20 ம் நூற்றாண்டில் விக்கிரக வழிபாட்டிற்கு மிக முக்கியமான நிகழ்வு என்று குறிப்பிடுகிறார்.

ஊடகங்கள் அதிசயம் என உறுதி செய்தது

ஊடகங்கள் அதிசயம் என உறுதி செய்தது

இந்தியாவின் மதச்சார்பற்ற செய்தி ஊடகம் மற்றும் அரசு நடத்தும் வலைப்பின்னல்கள் போன்றவை இந்த செய்தி போலியாக இருக்கும் என்று கருதி இதனை தலைப்பு செய்தியாக மாற்ற விரும்பவில்லை. ஆனால் ஒவ்வொரு கோணத்திலும் இதில் உண்மை இருப்பதை விரைவில் நம்பத் தொடங்கினார்கள். உலக அதிசய வரலாற்றில், உலகின் எல்லா பகுதியிலும் ஒரே நேரத்தில் இப்படி ஒரு அதிசயம் நடந்ததில்லை , தொலைகாட்சி நிலையங்கள் (சிஎன்என் மற்றும் பிபிசி), வானொலி மற்றும் செய்தித்தாள்கள் ( தி வாஷிங்டன் போஸ்ட், தி நியூ யார்க் டைம்ஸ், த கார்டியன் மற்றும் டெய்லி எக்ஸ்பிரஸ்) போன்ற ஊடகங்கள் இந்த தனித்தன்மை வாய்ந்த நிகழ்வைப் பற்றி சந்தேகம் கொண்ட பத்திரிகையாளர்கள் கூட, பிள்ளையார் சிலைக்கு பால் புகட்டியதாகவும், அது காணாமல் போனதாகவும் ஃபிலிப் மைகாஸ் எழுதியுள்ளார்.

வெகுஜன தத்துவம்

இந்த உலக அதிசயத்தை milkmiracle.com என்ற தனிப்பட்ட வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். "ஊடகங்கள் பரவலானவை. விஞ்ஞானிகள் மற்றும்" வல்லுநர்கள் "மயிர்துளைத்தாக்கம் மற்றும் வெகுஜன வெறி" ஆகியவற்றின் தத்துவங்களை உருவாக்கியிருந்தாலும், பெரும் ஆதாரங்கள் மற்றும் முடிவானது ஒரு விளக்க முடியாத அதிசயம் நிகழ்ந்ததாக கூறுகிறது . ஊடகங்கள் மற்றும் விஞ்ஞானிகள் இன்னும் இந்த நிகழ்வுகள் பற்றி ஒரு விளக்கம் கண்டுபிடிக்க போராடுகையில், ஒரு பெரிய ஆசிரியர் பிறந்தார் என்பதற்கான ஒரு அறிகுறி இது என்று பலர் நம்பினர்.

இந்த செய்தி எப்படி பரவியது:

இந்த செய்தி எப்படி பரவியது:

பால் அதிசயம் பற்றி கேள்விபட்டவர்களில் அதிசயிக்காதவர்கள் என்று அந்த தலைமுறையில் யாரும் இருக்கவே முடியாது. பால் பற்றாக்குறை என்று ஒரு செய்தி வெளிவந்ததா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை, ஆனால், இன்றைய நாட்களை போல் தொழில்நுட்ப வசதி 25 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை . இன்று கையளவு இணையத்தில் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப்பட்டுள்ளது. உலகின் ஒரு முலையில் நடக்கும் நிகழ்வு அடுத்த நிமிடம் அனைவரும் அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த நாட்களில் கூட, இந்த செய்தி உலகம் முழுக்க பரவியது மற்றொரு அதிசயம் என்பது உண்மை. கூகிள், பேஸ் புக் , வாட்ஸ் அப் , சமூக ஊடகம் , மொபைல் போன் , என்று இன்று போல் எந்த ஒரு வசதியும் இல்லாத நாளில் நடந்த ஒரு வைரல் பதிவு தான் இந்த பால் அதிசயம். இதற்கு தடைகளைத் தகர்த்து வெற்றிகளைத் தரும் விநாயகர் தான் காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: ஆன்மிகம்
English summary

15 Years of the Ganesha Milk Miracle

nearest temple to feed milk to the idol of Ganesha, even before my rational mind could question the fact or dismiss it as a rumor.
Desktop Bottom Promotion