For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாப் 10 பணக்காரப் பிச்சைக் காரர்கள்!

டாப் 10 பணக்காரப் பிச்சைக் காரர்கள்!

By Staff
|

கவுண்டமணி ஒரு படத்தில் விரட்டி, விரட்டி ஒரு பெண்ணை காதலிப்பார், கடைசியில் பார்த்தால் முன்னரே ஒரு ஜோசியக்காரர் கூறியது போல அவருக்கு வாய்க்கும் பெண் பிச்சைக் காரி தான் என்பது போல அந்த பெண் பிச்சை எடுத்து வங்கியில் நிறைய பணம் டெபாசிட் செய்து வருவார். அதே போல மற்றுமொரு படத்தில் பிச்சைக் காரர்களுக்கு என ஒரு சங்கம், அதற்கு தலைவர் என கவுண்டமணி சிரிப்பு வெடிகளை சிதறடித்து இருப்பார்.

10 Richest Beggars in 2018 who are in Fact Millionaires

ஆனால், நாம் இங்கே இந்த கட்டுரையில் பார்க்க போவது பிச்சைக் காரர்கள் பற்றிய நகைச்சுவை தகவல்கள் அல்ல. இவை சிலருக்கு ஊக்கமளிக்கும், சிலருக்கு அடப் போங்கடா என மனதுக்குள் குமுறல்களை ஏற்படுத்தும். ஆனால், இது தான் நிதர்சனம், இது தான் உண்மை.

இவர்கள் எல்லாம் பணக்கார பிச்சைக் காரர்கள். இவர்களுக்கு சொந்தமாக பிளாட்டுகள், வங்கி இருப்புகள் எல்லாம் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெட் வில்லியம்ஸ்!

டெட் வில்லியம்ஸ்!

வில்லியம்ஸ் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர். பிச்சைக் காரராக இருந்தாலுமே, வில்லியம்ஸிடம் சிறந்த பாடும் திறன் இருந்தது. இதை கண்டறிந்து ஒரு நபர், இவர் பாடுவதை வீடியோவாக எடுத்து யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்தார். அது வைரலாகவே ஒரே இரவில் வில்லியம்ஸ் மிகவும் பிரபலம் அடைந்தார். இப்போது டெட் வில்லியம்ஸ் ஒரு மில்லியனர்.

ராங்ஃபெங்!

ராங்ஃபெங்!

மிகவும் ஏழ்மையில் வாடிக் கொண்டிருந்த ராங்ஃபெங் தெருக்களில் தான் படுத்து உறங்கி வந்தார். ஒரு நாள் நூடுல்ஸ் விற்கும் பெண்மணி ஒருவரை சந்தித்தார் ராங்ஃபெங். அந்த பெண்மணி ராங்ஃபெங்கிற்கு உணவு உண்ணவும், பயணிக்கவும் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார். அதை கொண்டு சிறிதாக தொழில் துவங்கிய ராங்ஃபெங் இப்போது ஒரு பிஸ்னஸ் மேன். தனக்கு பணம் கொடுத்து உதவிய அந்த பெண்மணிக்கு 1,63,000 அமெரிக்க டாலர்களை நன்றிக்கடனாக அளித்துள்ளார் ராங்ஃபெங்.

சைமன் ரைட்!

சைமன் ரைட்!

சைமன் பிச்சை எடுப்பதை தடை செய்துள்ளனர். ஆம், இவர்க்கு டொனேஷனாக மட்டுமே ஐம்பது ஆயிரம் யூரோக்கள் கிடைக்கின்றன. மற்றும் இவர் மூன்று இலட்சம் யூரோ மதிப்புள்ள வீட்டில் தங்கி வருகிறார்.

எய்ஷா!

எய்ஷா!

எய்ஷா தனது நூறு வயதில் இறந்துவிட்டார் என்று அறியப்படுகிறது. ஆனால், இறப்புக்கு முன்னர் இவரது சொத்து மதிப்பு வெளியிடப்பட்டது. அதில், இவருக்கு மில்லியன் டாலர்கள் மதிப்பில் சொத்துக்கள் இருப்பது அறிய வந்தது. இவர் சொந்தமாக நான்கு கட்டிடங்கள் மற்றும் தங்க நகை மற்றும் நாணயங்கள் வைத்திருந்தார். இவற்றும் மதிப்பு எல்லாம் கூட்டி பார்த்தால் ஒரு மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருந்தது.

பரத் ஜெயின்!

பரத் ஜெயின்!

பரத் ஜெயின் இந்தியாவை சேர்ந்த பிச்சை காரர். இவர் படேல் நகரில் 80 இலட்ச ரூபாய் மதிப்பிலான சொந்த வீடு வைத்துள்ளார். மும்பையில் பிச்சை எடுத்து வரும் இவர் மாதம் 75 ஆயிரம் சம்பாதிக்கிறார். இவருக்கு சொந்தமான கடைகளில் இருந்து மட்டும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை வருகிறதாம்.

கிருஷ்ண குமார்!

கிருஷ்ண குமார்!

இந்தியாவை சேர்ந்த மற்றுமொரு பணக்கார பிச்சைக் காரர் கிருஷ்ணகுமார். இவருக்கு சொந்தமாக ஒரு பிளாட் இருக்கிறது. ஒரு நாளுக்கு இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். இது இந்தியாவில் பல படித்த நபர்கள் ஒரு நாளுக்கும் வாங்கும் ஊதியத்தை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பாஜி!

சம்பாஜி!

சம்பாஜி இந்தியாவின் அடுத்த பணக்கார பிச்சைக் காரர் இவர் மும்பையில் ஒரு பிளாட்டும், சோலாப்பூரில் இரண்டு வீடுகளும் சொந்தமாக வைத்திருக்கிறார். இவர் ஒரு நாளுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கிறார் இது போக வாடகையாகவும் இவருக்கு சிலபல ஆயிரங்கள் மாத வருமானமாக வருகிறது.

சர்வதியா தேவி!

சர்வதியா தேவி!

பாட்னாவில் அசோக் சினிமாஸ் அருகே தனக்கென ஒரு சொந்த வீடு வைத்திருக்கிறார் சர்வதியா தேவி எனும் இந்த பாட்டி. பிச்சை எடுப்பது தான் இவரது தொழில் எனிலும், நல்ல அமோகமான வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார். வருடத்திற்கு இன்சூரன்ஸ் ப்ரீமியம் மட்டுமே 36 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறார்.

கூரே!

கூரே!

கூரே ஆரம்பத்தில் பிச்சை தான் எடுத்து வந்தார், பிறகு இவர் தனக்கென ஒரு சிறிய வேலையை தேடிக் கொண்டார். இப்போது சாலைகளில் பேப்பர் விற்று வரும் கூரே ஒரு நாளுக்கு நூறு டாலர்கள் சம்பாதிக்கிறார். இவரது கதை மற்றவர்கள் வாழ்க்கைக்கு ஒரு ஊக்கமளிக்கும் வகையில் அமைகிறது. முயற்சி செய்தால் சிறிய அளவிலாவது ஒரு மாற்றத்தை காணலாம் என்பதற்கு கூரே ஒரு உதாரணம்.

பெயர் தெரியாத நபர்...

பெயர் தெரியாத நபர்...

இவரும் இந்தியாவை சேர்ந்தவர் தான். ஆனால், இவர் பெயர் தெரியவில்லை. இவர் தனது பெயரில் பல்வேறு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார். இவரிடம் மொத்தம் இரண்டு மில்லியன் ரூபாய் பணம் இருக்கிறது. ஆனாலும், இன்னும் இவர் பிச்சை தான் எடுத்து வருகிறார்.

சிலருக்கு பேசாமல் பிச்சை எடுக்க போய்விடலாம் என்ற எண்ணம் வரலாம். இவர்கள் எல்லாம் கோடிகளில் ஒருவர்கள். என்ன இருந்தாலும், மும்பையில் சொந்த பிளாட், வங்கிகளில் இலட்சங்கள் இருப்பு என்பதை எல்லாம் படிக்கும் போது மனதுக்குள் குமுறல்கள் இருக்க தான் செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Richest Beggars in 2018 who are in Fact Millionaires

10 Richest Beggars in 2018 who are in Fact Millionaires
Desktop Bottom Promotion