Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
இறந்தவர்களின் சடலத்தை சூப் வைத்து குடிக்கும் வினோத மக்கள்!
இங்கு யானோமமி எனும் இறந்தவர்களின் சடலத்தை சூப் வைத்து குடிக்கும் வினோத பழங்குடி மக்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
இன்றளவும் ஃபேஸ்புக், ட்விட்டர்களில் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம் ஒன்று, அமேசான் காட்டில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட பழங்குடியினர் என்ற பெயரில் பரப்பப்பட்டு தான் வருகிறது.
நாம் இன்னும் காணாத, கண்டுபிடிக்காத இடங்களில் இன்றளவும் பல பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் யானோமமி எனும் இனத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் இருக்கும் வினோதமான சடங்கு பற்றி இங்கு காணலாம்...

சடங்குகள்!
உயிரிழந்தவர்களுக்கு உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் அவரவர் கலாச்சாரம் சார்ந்த பல வகையான சடங்குகள் செய்யப்படும். இதில் மிகவும் வினோதமான முறையில் இறந்தவர்களுக்கு சடங்கு செய்து வருகின்றனர் பிரேசில் மற்றும் வெனிசுலா பகுதிகளில் வாழ்ந்து வரும் யானோமமி எனும் பழங்குடி மக்கள்.

சூப்!
யாரேனும் இறந்து விட்டால், அவர்களை புதைப்பது (அ) எரிப்பது என்ற இரண்டு முறைகளை பின்பற்றுவதை நாம் அறிவோம். யானோமமி இனத்தை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடலை எரித்து அந்த சாம்பலுடன் எலும்பு மற்றும் காய்கறி சேர்த்து சூப் வைத்து குடிக்கின்றனர்.

பாரம்பரியம்!
இது மட்டுமின்றி, யானோமமி மக்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களையே சாப்பிடுவதை பாரம்பரியமாக பின்பற்றி வருவதாக கூறுகின்றனர்.

யானோமமி மக்கள் கருத்து!
தங்கள் இனத்தில் மரணம் என்ற ஒன்று நடக்ககூடாது. அப்படி நடந்தாலும் அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். இதனால் தான் இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்புகளை சூப் வைத்து குடிப்பதாக கூறுகின்றனர். இதனால், அவர்கள் தங்களுடனே வாழ்கின்றனர் என யானோமமி மக்கள் நம்புகின்றனர்.

விசித்திரம்!
படிக்க விசித்திரமாக இருந்தாலும், இது போன்ற நிகழ்வுகள் நமது உலகிற்கு புதியதல்ல. இன்றளவும் தொழில்நுட்பம் மற்றும் வெளியுலகம் தெரியாத பழங்குடி மக்கள் ஏராளாமானவர்கள் உலகெங்கிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் இன்றளவிலும் நாம் வினோதமாக காணும் பழக்கங்கள் நிறைய இருக்கின்றன.



Click it and Unblock the Notifications
