‘அம்மா இட்லி சாப்பிட்டார்’ முதல் ‘அதை நீங்கள் தான் கூற வேண்டும்’வரை ட்ரெண்டிங்கான வார்த்தைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

கடந்த வருடம் இதே நாள் தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தான் பரபரப்புக்கு காரணம். 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா டிசம்பர் ஐந்தாம் தேதி உயிரிழந்தார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, இப்போது வரை பல வார்த்தைகள் வைரலாகி விட்டது. அவற்றை இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மா இட்லி சாப்பிட்டார் :

அம்மா இட்லி சாப்பிட்டார் :

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அமைச்சர்கள் பலரும் உள்ளே சென்றனர், ஆனால் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.

அப்பல்லோ மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்த தொண்டர்கள் மற்றும் பத்திரியாளர்களிடம் அம்மா இட்லி சாப்பிட்டார், நலமுடன் உள்ளார் என்று தொடர்ந்து பேட்டி கொடுக்கப்பட்டது.

வதந்தி :

வதந்தி :

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போதே அப்பல்லோ நிர்வாகம் சிகிச்சை தொடர்பாகவும், ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாகவும் வரிசையாக அறிக்கைகள் வெளியிட்டது.

இதில் திருப்தியடையாமல் ஜெயலலிதா இறந்துவிட்டார், ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள், இறந்தே தான் இங்கே கொண்டு வரப்பட்டார் என பலவேறு வதந்திகள் கிளம்பியது. வதந்தி பரப்புவோர் மீது போலீசார் நடவடிக்கையும் எடுத்தனர்.

பிரேக்கிங் நியூஸ் :

பிரேக்கிங் நியூஸ் :

செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து வருகின்ற எல்லா தகவல்களுமே பிரேக்கிங் நியூஸ்களாகவே இருந்தன. ஜெயலலிதா சிகிச்சை குறித்து அடுத்த செய்தி என்ன என்று அறிந்து கொள்வதில் மக்கள் எல்லாருமே ஆர்வமாக இருந்தார்கள்.

அதே போல ஜெயலலிதாவிற்கு பிறகு அ.தி.மு.க.,வை வழிநடத்தப்போவது யார் என்று எதிர்ப்பார்ப்புக் கேள்வியும் மேலோங்கியிருந்ததால் பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமே இல்லை.

லண்டன் மருத்துவர் :

லண்டன் மருத்துவர் :

ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து மருத்துவர் ஜான் பிலே சென்னை வரவழைக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு சிகிச்சை முறைகளை ஜெயலலிதாவிற்கு பரிந்துரைத்தார்.

இவரைத் தாண்டி, சிங்கப்பூர் மருத்துவர் குழு, எய்ம்ஸ் மருத்துவர் குழு ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க வந்தனர்.

கார்டியாக் அரெஸ்ட் :

கார்டியாக் அரெஸ்ட் :

மாரடைப்பு என்றே கேள்விப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதாவிற்கு கடைசி நேரத்தில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயிலோ அல்லது இதயத்திலிருந்து ரத்தம் வெளியேற்றும் குழாயிலோ அடைப்பு ஏற்பட்டால் அல்லது இதயத் தசைகளில் பிரச்னை ஏற்பட்டாலோ இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.

இதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலையில், அது கார்டியாக் அரெஸ்ட் எனப்படும்.

எம்பாமிங் :

எம்பாமிங் :

ஒருவர் இறந்தவுடன் அவரது உடலை பாதுகாக்க எம்பாமிங் செய்யப்படுகிறது, இந்த வார்த்தையும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பே வைரலானது.

‘எம்பாமிங்' முறை என்பது கன்னத்தில் நான்கு துளைகள் போட்டு எம்பாமிங் செய்ய உதவும் கருவிகள் மூலம் குறைந்த அழுத்தத்தில் ரத்தம் நீக்கப்பட்டு உடலில் அதே சிறு துளை மூலமாக பால்மால்டிஹைடு கலந்த திரவம் நிரப்பப்படுகிறது. இது, உடலை உயர் குளிர்நிலையில் வைத்து பாதுகாக்க பயன்படும்.

மரணத்தில் மர்மம் :

மரணத்தில் மர்மம் :

ஜெயலலிதா இறந்த நாளிலிருந்தே ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்ப்பட்டு இறப்பதற்கு என்னகாரணம். இதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது.

ஜெயலலிதாவின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பலரும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

சின்னம்மா :

சின்னம்மா :

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். தொண்டர்கள் ஜெயலலிதாவை அம்மாவை அழைப்பதை தொடர்ந்து, சசிகலாவை சின்னம்மா என்று அழைக்க தொடங்கினர்.

அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் சின்னம்மா என்றே கூறப்பட்டதால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.

தியானம் :

தியானம் :

சசிகலா பொதுச்செயலரா பதியேற்ற பின்பு திடீரென பிப்ரவரி ஏழாம் தேதி ஜெயலலிதா சமாதிக்குச் சென்ற ஒ.பி.எஸ் தியானத்தில் உட்கார்ந்தார். சிறிது நேரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுச்செயலரான சசிகலாவை முதல்வராக நியமிக்க, தான் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து நடைப்பெற்று வரும் அரசியல் மாற்றங்களின் போது பலரும் சமாதியில் சென்று தியானம் செய்து வருவது வைரலாகியுள்ளது.

கூவத்தூர் :

கூவத்தூர் :

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி உயர்த்தியபின்னர், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களை கூவத்தூர் ரிசார்டில் அடைத்து வைத்தார் சசிகலா.

தாம் பதவியேற்பதற்கு முன்னர் ஓபிஎஸ் தரப்பினராலோ அல்லது எதிர்க்கட்சியினராலோ தம் வசம் உள்ள எம்எல்ஏ-க்கள் விலை போகலாம் என்ற அச்சத்தின் பேரில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை காஞ்சிபுரத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்டில் தங்க வைக்கப்பட்டனர்.

கட்சிகள் :

கட்சிகள் :

எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பிறகு ஜா அணி, ஜெ அணி என்று பிரிந்த அ.தி.மு.க., ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு தகிடதத்தங்களை நடத்தி வரும் அ.தி.மு.க.,வின் பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையும் முடக்கியது.

சசிகலா தரப்பு அதிமுக அம்மா என்றும் ஒ.பி.எஸ் தரப்பு அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்றும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்று தான் ஆரம்பித்த கட்சியை அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றினார்.

இதே போல இவரது கணவர், மாதவன் தனியாக எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கினார்.

அதை நீங்கள் தான் கூற வேண்டும் :

அதை நீங்கள் தான் கூற வேண்டும் :

ஜெயலலிதா மரணம், சசிகலாவுடன் போர்க்கொடி, பேரவை கட்சியாக மாற்றம், சகோதரனுடன் சண்டை, கணவருடன் முரண்பாடு, என எப்போதும் பரபரப்பாகவே இருந்த தீபா செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதை நீங்கள் தான் கூற வேண்டும் என்று கூறியதும் பயங்கர வைரலானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Words which were trending during Hospitalization of Jayalalitha

Words which were trending during Hospitalization of Jayalalitha
Story first published: Friday, September 22, 2017, 11:56 [IST]