2018 - ஆம் ஆண்டு உங்களது இராசிக்கு அதிஷ்ட எண் என்ன தெரியுமா?

Written By:
Subscribe to Boldsky

புத்தாண்டு வரப்போகும் இந்த சமயத்தில், அனைவரும் கடந்த ஆண்டு அனுபவித்த மகிழ்ச்சியை விட அதிக சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு அனுபவித்த எதிர்மறை விளைவுகள், மன சஞ்சலங்கள் மறைந்து போக வேண்டும் என்றும் ஆசை கொண்டிருப்போம்...!

உங்கள் எண்ணம் போல் நிச்சயமாக உங்களது வாழ்க்கை மாறும்.. சனிபெயர்ச்சிக்கு ஏற்ப உங்களது இராசி எண் என்ன தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் நமக்கு எது இராசியானது என்று தெரிந்து கொண்டு அதன் படி செயல்படும் போது நமக்கு கூடுதல் மகிழ்ச்சி வாழ்க்கையில் கிடைக்கும். இந்த பகுதியில் நீங்கள் உங்களது இராசிக்கு எந்த எண் அதிஷ்ட எண் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

செவ்வாய் இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டமளிக்கும் ஒரு இராசி ஆகும். எனவே இவர்கள் மிகவும் பலமான, ஆற்றல் வாய்ந்த, துணிச்சல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சாகசங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். இந்த ராசிக்கார்களின் அதிர்ஷ்ட எண்கள் 6, 18, 41, 77 மற்றும் 83 ஆகும். இந்த எண்கள் உங்களுக்கு அதிஷ்டத்தை தருவதோடு, உங்கள் வாழ்க்கையில் கஷ்டமான சூழ்நிலைகளை சமாளிக்க உதவும்.

ரிஷபம்

ரிஷபம்

இவர்கள் ஒரு சிக்கலான சூழ்நிலையை கையாழும் போது கூட லாஜிக்காக யோசித்து செயல்படுவார்கள். ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைகளையும் பொறுமையுடன் சமாளித்து வருவார்கள். இந்த ஆண்டு இவர்களின் அதிஷ்ட எண் 5, 35, 50, 57, மற்றும் 82 ஆகும்.

மிதுனம்

மிதுனம்

இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு ரோலர் ஹோஸ்டர் ரைடு சென்று வருவது போன்ற ஒரு அனுபவத்தை கொடுக்கும். இந்த வருடம் நீங்கள் கடவுளை பிராத்தனை செய்து நல்ல பலனை பெறலாம். உங்களது அதிஷ்ட எண்கள், 1, 10, 18, 35 மற்றும் 86 ஆகும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களது ஆறாம் அறிவு அதிகமாக வேலை செய்யும். நீங்கள் மிகச்சிறந்த கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பீர்கள்.. உங்களது ராசிக்கு அதிபதியாக திகழ்பவர் சூரியன் ஆவார்..! உங்களது அதிஷ்ட எண்கள், 1, 21, 24, 58, மற்றும் 66 ஆகும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அறநெறி மற்றும் விசுவாசமானவர்கள்.. இவர்கள் எல்லையற்ற சிந்தனை செய்யும் மனம் படைத்தவர்கள். உங்களுக்கு இந்த வருடம் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எல்லாம் நடக்கும். இந்த ஆண்டு உங்களது வாழ்க்கையில் மிக சிறந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும். உங்களது அதிஷ்ட எண்கள், 6, 24, 39, 59, மற்றும் 83 ஆகும். நீங்கள் சூரியனை வணங்கி வெளியே செல்வது மிகவும் நல்லது.

கன்னி

கன்னி

கன்னி இராசிக்காரர்கள், இயற்கையாகவே உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். வரும் 2018- ஆம் ஆண்டிற்கான இவர்களது அதிஷ்ட எண்கள் 16, 29, 79, 80, மற்றும் 90.

தூலாம்

தூலாம்

தூலாம் இராசிக்காரர்கள், வாழ்க்கையை அனுபவித்து வாழ கூடியவர்களாக இருப்பார்கள். சமூகத்தில் அனைவரிடமும் சுமூகமாக பழகும் திறனை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். உங்களுடைய அதிஷ்ட எண்கள், 7, 20, 55, 77 மற்றும் 86 ஆகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக இராசிக்காரர்கள் சுயமாக யோசித்து முடிவு எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். உங்களுடைய அதிஷ்ட எண்கள், 27, 29, 45, 53 மற்றும் 89 ஆகும்.

தனுசு

தனுசு

தனுசு இராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவர்கள். இவர்கள் கொஞ்சம் மறக்கும் குணமும் கொண்டவர்கள். வரப்போகிற 2018- ஆம் வருடம் நீங்கள் உங்களது சோதனைகளில் இருந்து மீண்டு, வெற்றியடைய உதவும் அதிஷ்ட எண்கள், 6, 16, 23, 60, மற்றும் 81 ஆகும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்களது இலக்கை அடைய அதிகமாக போராடும் திறன் கொண்டவர்கள். இவர்கள் நம்பகத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். வரப்போகின்ற 2018-ஆம் ஆண்டிற்கான உங்களது அதிஷ்ட எண்கள் 3, 21, 66, 83, மற்றும் 84 ஆகும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரகள், அமைதி, தன்னடக்கம், தோழமை குணம் போன்றவற்றை உடையவர்கள். இவர்கள் தங்களது பொறுமை குணத்தால் எதையும் சாதித்துவிடுவார்கள். வரப்போகின்ற 2018-ஆம் ஆண்டிற்கான உங்களது அதிஷ்ட எண்கள் 17, 40, 46, 61, மற்றும் 76 ஆகும்.

மீனம்

மீனம்

மீன இராசிக்கார்கள் எதையும் சிந்தித்து செயல்படும் வல்லமை கொண்டவர்கள். இவர்களிடம் ஏராளமான நல்ல குணங்கள் அதிகமாக இருக்கும். வரும் 2018-ஆம் ஆண்டிற்கான உங்களது அதிஷ்ட எண்கள் 8, 10, 27, 56 மற்றும் 69 ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: astrology
English summary

What Is Your Lucky Number According To Your Zodiac Sign

What Is Your Lucky Number According To Your Zodiac Sign
Story first published: Monday, December 18, 2017, 11:44 [IST]