Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
மிகக்குறைவான நாட்கள் ஆட்சியில் இருந்த‘பெருமை’யை கொண்ட கட்சி!
தேர்தல்கள் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
குஜராத் மற்றும் ஹிமாச்சலில் இடைத்தேர்தல் நடைப்பெற்று ஓட்டு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது அதே சமயம் சென்னையில் உள்ள ஆர். கே நகரிலும் தேர்தல் நடக்கப்போகிறது.
தேர்தல் கமிஷன், வீட்டுக்கு வீடு பணம், இலவச அறிவிப்புகள், சந்து பொந்துகளில் எல்லாம் அரசியல் தலைவர்கள் நுழைந்து தங்கள் பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் தேர்தல் குறித்து இது வரை யாருக்கும் தெரியாத சில சம்பவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

#1
இந்தியாவின் முதல் தேர்தல் 1951-52 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தனித்தனி பெட்டி வழங்கப்பட்டது. வெவ்வேறு நிறங்களில் அந்தப் பெட்டிகள் இருந்தன.

#2
அதில் வேட்பாளரின் பெயர் மற்றும் அவருக்கான சின்னம் ஒட்டப்பட்டிருக்கும். வாக்காளர் தான் யாருக்கு ஓட்டளிக்க விரும்புகிறோம் என்பதை காகிதத்தில் எழுதி வேட்பாளரின் பெட்டிக்குள் போட வேண்டும்.

#3
முதல் தேர்தல் நான்கு மாதங்கள் நடைப்பெற்றன. 1951 அக்டோபர் 15 முதல் 1952 பிப்ரவரி 21வரை நடந்தது. இதில் சுமார் பத்து கோடி பேர் வரை வாக்களித்தனர். இதில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களைக் கொண்டு முதலாவது மக்களவை உருவாக்கப்பட்டது.

#4
இத்தேர்தலில் 401 தொகுதிகளில் இருந்து 489 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். இந்தக் காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் முன்னணிக் கட்சியாக விளங்கியது.

#5
1946ல் அமைந்த நேருவின் முதல் இந்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இரு அமைச்சர்கள் இத்தேர்தலின் போட்டியிட தனிக்கட்சி தொடங்கியிருந்தனர்.
சியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தையும் டாக்டர் அம்பேத்கர் பட்டியல் சாதியினரின் கூட்டமைப்பு (இந்தியக் குடியரசுக் கட்சி) ஆகிய கட்சிகளையும் தொடங்கி தனித்துப் போட்டியிட்டனர்.

#6
வேட்பாளரின் பெட்டியில் போடுவதற்கான பேப்பர் எலெக்ஷன் கமிஷனே ப்ரிண்ட் செய்ததது. இது நாசிக்கில் உள்ள இந்தியன் செக்யூரிட்டி ப்ரஸ்ஸில் அச்சிடப்பட்டது. இங்கே தான் இந்திய ரூபாய் நோட்டுக்களும் அச்சிடப்பட்டன.

#7
ஓட்டளித்துவிட்டால் அவர்களுக்கான அடையாளமாக கையில் மை வைக்கப்படும். இது மைசூரில் இருக்கும் ஓர் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இந்த ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே இந்த மை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

#8
தற்போது எலக்ட்ரானிக் ஓட்டர் மெஷின் வந்திருக்கிறது. இதனால் பத்தாயிரம் டன் பேப்பர் மிச்சம் செய்யப்படுகிறது. பவர் கனெக்ஷன் இல்லையென்றால் வோட்டர் மெஷின் இயங்கும் வகையில் ஆறு வோல்ட் அல்கலைன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது.

#9
அட்டல் பிகாரி வாஜ்பாய் ஆறு வெவ்வேறு இடங்களில் போட்டியிட்டு வென்ற ஒரே அரசியல்வாதி. பால்ராம்பூரில் 1957 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். குவாலியரில் 1971 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.
டெல்லியில் 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.விதிசாவில் 1991 ஆம் ஆண்டும்,காந்தி நகரில் 1996 ஆம் ஆண்டு லக்னோவில் 1991,1996,1998 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.

#10
மிகக்குறைவான நாட்கள் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கம் என்ற ‘பெருமை'யைக் கொண்டது பாரதிய ஜனதா கட்சி. 1996 ஆம் ஆண்டு வெறும் பதிமூன்று நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்து வரலாறு படைத்துள்ளது.

#11
மிக அதிக வயதுள்ள வேட்பாளராக கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் 2004 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் போட்டியிட்ட ராமச்சந்திர வீரப்பா தான் . தேர்தலில் போட்டியிட்ட போது இவருக்கு வயது 94.

#12
எலக்ட்ரானி மெஷின் மூலமாக ஓட்டளிக்கும் போது அறுபத்திநான்கு வேட்பாளர்களை மட்டுமே நாம் அதில் சேமிக்க முடியும். அதையும் தாண்டி வேட்பாளர்களின் பெயரை சேமிக்க முடியாது.

#13
பதினெட்டு வயது நிரம்பியதும் வாக்காளர் அடையாள அட்டையை நாம் போய் நிரப்பிக் கொடுக்க வேண்டும் ஆனால் ஃபிரான்ஸ் மற்றும் ஸ்வீடனில் இந்தப் பிரச்சனையே இல்லை. அரசாங்கமே வோட்டளிக்க தகுதியானவர் என்று பதினெட்டு வயது நிரம்பியவர்களின் பெயரை எடுத்துக் கொள்ளும்.

#14
ஆஸ்திரேலியாவில் பதினெட்டு வயது நிரம்பிய யாவரும் ஓட்டளிப்பது கண்டிப்பான முறையில் கடைபிடிக்கப்படுகிறது. அப்படித் தவறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய டாலரின் படி பதினைந்து முதல் 20 டாலர் வரை அபராதம் செலுத்த வேண்டும். இதையும் செலுத்தத் தவறினால் 180 டாலர் அபராதம். இது ஒரு க்ரிமினல் குற்றமாகவே பார்க்கப்படுகிறது.

#15
1988லிருந்து ப்ரேசிலில் 16 வயதிலிருந்து ஓட்டளிக்க அனுமதியளிக்கப்படுகிறது. இதே போல ஆஸ்ட்ரியா, நிகாராகுவா,அர்ஜெண்டீனா அங்கேயெல்லாம் பதினாறு வயதிலிருந்து ஓட்டளிக்கலாம். இதே போல இந்தோனேசியா மற்றும் சூடானில் பதினேழு வயது முதல் ஓட்டளிக்கலாம்.

#16
ஈஸ்டோனியாவில் இருப்பவர்கள் வரிசையில் நின்று ஓட்டளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்லைனிலேயே தங்களுடைய வாக்கினை அவர்கள் பதிவு செய்திடலாம்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் 1984 ஆம் ஆண்டு போட்டியிட்ட ரோனால்டு ரீகன் 50க்கு 49 மாநிலங்களில் வெற்றி பெற்றார்.



Click it and Unblock the Notifications