ச்சீ....! என்று சொல்ல வைக்கும் சில பழங்கால மக்களின் பழக்கங்கள்!

Written By:
Subscribe to Boldsky

இப்போது நமக்கு நவீன மருத்துவம் கிடைக்கிறது, நாகரீகமான வாழ்க்கை முறை போன்றவை கிடைத்துள்ளது அதனால் சௌகரியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். ஆனால் பெரியதாக மருத்துவம், நாகரீகம் போன்றவை வளராத கால கட்டத்தில் மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா?

நிச்சமாக அவர்களை போல இப்போது உங்களை வாழ சொன்னால் நீங்கள் நோ... என்று தான் சொல்வீர்கள்.. பழங்கால மக்கள் பெரியதாக அறிவியல் வளர்ச்சி, மருத்துவ முன்னேற்றம், புதிய கண்டுபிடிப்புகள் இல்லாத காலகட்டத்தில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. முடியை கலர் செய்ய..

1. முடியை கலர் செய்ய..

மக்கள் அன்றைய காலத்தில் தங்களது முடியை கலர் செய்வதற்கு, அன்றைய கால கட்டத்தில் எந்த ஒரு வசதியும் இல்லாத காரணத்தினால், தவறான பொருட்களை முடியை கலர் செய்ய பயன்படுத்தி இதனால் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு ஆளாகினர். க்ரீக் மற்றும் ரோமானிய மக்கள் கெமிக்கல்கள் மற்றும் சல்பர் அடங்கிய ஹேர் டையை பயன்படுத்தினர்.

1700-களில் இத்தாலி மக்கள் தங்களது நீண்ட முடியை கெமிக்கல் கலவைகளில் நனைத்தனர். இதனால் அவர்கள் தங்க நிறத்திலான முடியை பெற்றனர். பல ஐரோப்பிய பெண்கள் குங்குமப்பூ மற்றும் சல்பர் பவுடரை பயன்படுத்தி தங்களது முடியை அலங்கரித்து கொண்டனர். ஆப்கானியர்களும் தங்களது முடியை கலர் செய்து கொள்வதால் தலைவலியிலிருந்து விடுதலை பெறலாம் என்று நம்பினர்.

Image Source

2. மார்பகத்தை பெரிதுபடுத்த..

2. மார்பகத்தை பெரிதுபடுத்த..

பழங்காலத்தில் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் தங்களது மார்பகத்தை அழகுபடுத்திக் கொள்ளவும் தயங்கவில்லை.. எனவே பெண்கள் சில சிகிச்சைகளையும், வீட்டிலேயே செய்யக்கூடிய சில சிகிச்சைகளையும் மேற்கொண்டனர். சிலர் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரீம்களை பயன்படுத்தினர். மேலும் சிலர் தங்களது மார்பகங்களை பெரிதாக்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தினர்.

முதல் மார்பக அறுவை சிகிச்சையானது வின்சென்ஸ் கிஸிரணி என்பவரால் 1895-ல் செய்யப்பட்டது. மார்பகங்களை பெரிதுபடுத்த மார்பகத்தினுள் அவர்கள், ரப்பர், கண்ணாடி பந்துகள் மற்றும் சில பொருட்களை வைத்தனர்.

Image Source

3. கழிவு தான் மருந்து

3. கழிவு தான் மருந்து

இதனை கேட்கவே உங்களுக்கு அறுவெறுப்பாக இருக்கலாம். ஆனால் பழங்கால மக்கள் விலங்குகளின் கழிவுகளை மருந்தாக பயன்படுத்தினார்கள். உதாரணமாக பழங்கால கிரீஸ் பெண்கள் முதலையின் கழிவை சக்தி வாய்ந்த கருத்தடை பொருள் என்று கருதி அதனை தங்களது யோனியின் உள் வைத்துக் கொண்டனர். பழங்கால எகிப்து வீரர்கள் விலங்குகளின் மலத்தை தங்களது காயங்களுக்கு மருந்தாக பயன்படுத்தினார்கள்.

ஆட்டின் கழிவுகளும் மருந்துகளாக பயன்படுத்தப்பட்டது. தவளையின் கழிவை அம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தினார்கள். மேலும் பன்றியின் கழிவை மூக்கில் வடியும் இரத்தத்திற்கு மருந்தாக பயன்படுத்தினார்கள்.

Image Source

4. தலையில் ஓட்டையிடுவது..

4. தலையில் ஓட்டையிடுவது..

மருத்துவர்கள் அந்த காலத்தில் தலைவலி போன்ற தலை சம்மந்தப்பட்ட வலிகள், ஒரு மனிதனை சாத்தான் தாக்குவதால் தான் வருகின்றன என்று நம்பியிருந்தார்கள். இதனால் அவர்கள் சாத்தானை வெளியே அனுப்புவதற்காக பாதிக்கப்பட்டவரின் தலையில் ஒரு ஓட்டையை இட்டனர்.

Image Source

5. இறுதி சடங்குகளில் அழ கூடாது

5. இறுதி சடங்குகளில் அழ கூடாது

பண்டைய ரோம் நகரில் இறுதி சடங்குகளில் ஊர்வலம் நடக்கும் போது அனைவரும் அழுது கொண்டே செல்வார்கள். அப்போது இறுதி சடங்கில் அழுவதற்காக தொழில் முறையில் பெண்களும் வந்திருந்தனர். அவர்கள் கன்னங்களில் இரத்தத்தை வரைந்து கொண்டனர். தலைமுடியை பிடுங்கி கொண்டு அழுதனர். இது மிகவும் எதிர்மறையாக இருந்த காரணத்தினால், இறுதி சடங்குகளில் தொழில் முறையாக அழுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை..

Image Source

6. காதலனை கொலை செய்யலாம்

6. காதலனை கொலை செய்யலாம்

ஒரு குடும்பத்தில் ஆணுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருந்தது. முக்கியமாக திருமணமாகாத தன் பெண் மீது அதிக உரிமை இருந்தது. தன் மகளுக்கு ஏற்ற கணவனை தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் தந்தைக்கு இருந்தது. சட்டங்கள் கடுமையாக இருந்தன. ஒரு பெண் எந்த ஒரு ஆண் மீதும் திருமணத்திற்கு முன்பு ஈர்ப்பு, காதல் கொண்டிருக்க கூடாது என்றிருந்தது. தந்தை சட்டப்பூர்வமாக தனது மகளின் காதலனை கொல்லலாம் என்றிருந்தது.

Image Source

7. மகன்களை விற்கலாம்

7. மகன்களை விற்கலாம்

ரோம்மில் தந்தை தான் குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் ஏற்பவராக இருந்தார். தந்தைக்கு புதியதாக பிறந்த தன்னுடைய குழந்தையை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை தந்தை தான் முடிவு செய்ய வேண்டியதாக இருந்தது.

தந்தைக்கு தன் மகன்களை அடிமைகளாக விற்க அனுமதி இருந்தது. அடிமைகளை வாங்கிய நபர் இனி அந்த பையன் தேவையில்லை என்று தோன்றினால், மீண்டும் அவனது தந்தையிடம் ஒப்படைத்து விடவும் அனுமதி உண்டு. ஆனால் ஒரு தந்தை தனது 3 மகன்களை மட்டுமே இவ்வாறு விற்க முடியும்.

Image Source

8. கர்ப்பத்தை கண்டறிய

8. கர்ப்பத்தை கண்டறிய

அப்போது எல்லாம் நவீன மருத்துவம் கிடையாது. 1350 பி.சியில் மருத்துவர்கள் கர்ப்பத்தை கண்டறிய, பெண்ணின் வெஜினா பகுதியில் ஒரு பல் பூண்டினை வைத்தனர். அடுத்த நாள் காலையில் பெண்ணின் மூச்சில் பூண்டின் வாசனை வந்தால், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று அர்த்தமாகும். நல்ல வேளை இப்போது எல்லாம் நவீன மருத்துவம் வந்துவிட்டது.

Image Source

9. பூனைகளுக்கு புருவ முடியை கொடுத்தனர்

9. பூனைகளுக்கு புருவ முடியை கொடுத்தனர்

பழங்கால எகிப்து மக்கள் பூனைகளை கடவுளாக வணங்கினர். அவர்களுக்கு பிடித்த மிருகமும் பூனை தான். அவர்கள் பூனை தங்களுக்கு அதிஷ்டத்தை தருவதாக நம்பினார்கள். எகிப்தியர்கள் தங்களது வீட்டில் வளர்க்கப்படும் பூனை இறந்துவிட்டால் தங்களது புருவ முடிகளை பூனைகளுக்காக ஷேவ் செய்து கொண்டனர்.

10. பொதுக்கழிப்பிடம்

10. பொதுக்கழிப்பிடம்

பழங்கால ரோமானியர்களிடத்தில் அனைவரும் வீட்டிலேயே கழிப்பிடம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு வசதி கிடையாது. ஒரு சில வசதி படைத்தவர்கள் மட்டுமே வீட்டிலேயே கழிப்பறை வைத்திருந்தனர். மற்ற 95 % பேர் பொதுக் கழிப்பிடத்தை தான் பயன்படுத்தி வந்தனர். இந்த பொதுக்கழிப்பிடங்கள் மரங்கள் அல்லது கற்களால் செய்யப்பட்டவையாக இருந்தன. அப்போது எல்லாம் தனிப்பட்ட வாழ்க்கை என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது..

பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை பார்த்தீர்கள் அல்லவா? இவர்களை போல் எல்லாம் வாழ்வதை கண்டிப்பாக நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things Ancient People Did That Would Be Totally Weird Today

Things Ancient People Did That Would Be Totally Weird Today
Story first published: Wednesday, December 20, 2017, 17:30 [IST]