Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
ஒருவரது மரணம் எப்படி நிகழும்? கருட புராணம் கூறும் 3 விடயங்கள்!
கருட புராணம் ஒருவர் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள் மட்டுமின்றி, அவரது மரணம் எப்படி அமையும் என்பதயும் கூறுகிறது.
நாம் எப்படியும் மரணிக்க போகிறோம் என்பது நமக்கு தெரியும். நாம் பிறந்த மறு நொடியே நமது மரணம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு விடுகிறது. இப்போது ஒருவர் எப்படி மரணிப்பார் என்பதை அவரது உணவு, போதை, வாழ்வியல் பழக்கங்களை வைத்து சொல்லிவிட முடியும்.
அதே போல நமது முன்னோர்கள், அந்த காலத்தில் ஒருவரின் பழக்கங்களை வைத்து அவர் எப்படி மரணிப்பார் அல்லது ஒருவரது மரணம் எப்படி அமையும் என்பதை கருட புராணத்தில் மூன்று விஷயங்களின் மூலம் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை!
கடவுள் நம்பிக்கை யார் ஒருவரிடம் அதிகமாக இருக்கிறதோ, யார் ஒருவர் எந்த ஒரு தீய செயலிலும் ஈடுபடாமல் இருக்கிறார்களோ அவர்களது இறப்பு இயற்கை மரணமாக இருக்கும்.

பேராசை & இச்சை!
கட்டுப்படுத்த முடியாத இச்சை எண்ணங்கள் மற்றும் பேராசை அதிகமாக உள்ளவர்களின் மரணம் வலி நிறைந்ததாக இருக்கும்.

அழுக்கு!
சமூகத்தில் அழுக்கு நிறைந்த நபராக இருப்பவர்கள், அழுக்கை பரப்புபவர்கள், சுயநலமாக வாழ்பர்கள் இறக்கும் முன்னர் பல தொல்லைகளை கடந்து தான் மரணம் அடைவார்கள். மேலும், மரணத்தை நெருங்கும் போது இவர்கள் சுயநினைவு இல்லா நிலை அடைவார்கள்.

கொடுமை!
மற்றவர்களுக்கு கொடுமை இழைப்பவர்கள், மனிதத்தன்மை அற்றவர்கள், நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், குடும்பத்தை, துணையை ஏமாற்றுபவர்கள், மிருகத்தனமாக நடந்துக் கொள்பவர்கள், பெரியவர்களுக்கு மரியாதை அளிக்காதவர்கள் போன்றவர்கள் இறக்கும் முன்னர் சித்திரவதைக்கு ஆளாகி தான் மரணம் அடைவார்கள் என கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் எப்படி மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்...

#1
பசியின்மை. பிடித்த உணவாக இருந்தாலும் சாப்பிடப் பிடிக்காது. கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க முயன்றாலும் சாப்பிட மாட்டார்கள்.

#2
தூக்கமின்மை, எந்த ஒரு செயலுக்கு சரியாக ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டார்கள். மந்தமாக காணப்படுவார்கள்.

#3
நினைவின்றி பேசுவது. நாம் ஒன்று பேசினால், அவர் ஒன்று பேசுவார். அல்லது அந்த சூழலுக்கு சம்மந்தமே இல்லாத எதாவது ஒன்று நிலையின்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

#4
அவர்கள் இந்த உலகத்திலேயே இருக்கமாட்டார்கள். ஏதோ தனிமையில் இருப்பது போன்ற உணர்வில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கடைசியில் தாங்கள் விரும்பிய நபர்கள் தங்களுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் எழும்.

#5
உடல்நலம் தீவிரமாக மோசமான நிலை அடைந்து வரும். உடலில் சக்தியே இருக்காது. அவரது தலை, கை, கால்களை தூக்க கூட மிகவும் சிரமப்படுவார்கள்.



Click it and Unblock the Notifications