இந்த 7 செயல்கள் நீங்கள் செய்த பாவத்தைக் குறைக்கும்!

Posted By:
Subscribe to Boldsky

கர்மா என்பது செயல் ஆகும். ஒருவர் மற்றவர்களுக்கு நல்லதை செய்தால், அவருக்கு எப்போதும் நல்லது நடக்கும். அதுவே தீயதை செய்தால், அந்த பாவச் செயலால் நிச்சயம் தீயது தான் நடக்கும். இது அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒன்று தான்.

யாருமே பிறக்கும் போதே மற்றவர்களுக்கு தீங்கு செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் பிறப்பதில்லை. நாம் நினைத்தது நடக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் தான் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் வெற்றிக்காக எதையும் செய்யும் போது அது தீமையாகிவிடுகிறது.

நாம் இப்போது வருடத்தின் இறுதியில் உள்ளோம். ஒவ்வொரு புத்தாண்டு வரும் போதும், அந்த ஆண்டு சிறப்பாக இருக்க பல செயல்களைச் செய்வோம். அந்த வகையில் வரும் ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமானால் மற்றும் நீங்கள் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்ய நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களை செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவ செயலுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டுமானால், ஏழைகளுக்கு 3 கைப்பிடி அளவு அரிசியை தானமாக வழங்குங்கள். அது ஏன் 3 கைப்பிடி அளவு என்று கேட்கலாம். ஏனெனில், இந்த மூன்றும் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனைக் குறிக்கிறது.

#2

#2

கூண்டில் அடைக்கப்பட்ட 2 பறவைகளை பறக்க விடுங்கள். பறவை என்றால் பறப்பதைக் குறிக்கிறது. இப்படி பறவையை சுதந்திரமாக பறக்கவிடுவதன் மூலம், நீங்கள் பாவச் செயல் குறையும்.

#3

#3

துளசி செடியை பரிசாக வழங்குங்கள். நீங்கள் யாருக்கு தீங்கு செய்ததாக நினைத்து வருந்துகிறீர்களோ, அவர்களுக்கு துளசியைப் பரிசாக கொடுங்கள். இதனால் உங்கள் உறவுகளுக்குள் ஒரு நேர்மறையான தன்மையைக் கொண்டு வருவதோடு, இருவருக்குள்ளும் வரும் பிரச்சனையைக் குறைக்கும்.

#4

#4

திருமணமான மூன்று பெண்களுக்கு சிவப்பு நிற வளையலை வாங்கிக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை மனம் வருந்த செய்ததாக நினைத்தால், சிவப்பு நிற வளையலை தானமாக கொடுங்கள்.

#5

#5

தேன் அமிர்தம் போன்றது. நீங்கள் செய்த தீய செயலுக்கான தாக்கத்தைக் குறைக்க வேண்டுமானால், ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழை குழந்தைக்கு தேனை வாங்கிக் கொடுங்கள்.

#6

#6

உங்கள் பெற்றோரின் மனம் புண்படும்படி நடந்து கொண்டீர்களா? அதற்கு பரிகாரம் செய்ய நினைத்தால், 5 தானியங்களை உங்கள் பெற்றோருக்கு கொடுங்கள். அத்துடன் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி வழங்கும்படி பரிசு ஒன்றையும் கொடுங்கள்.

#7

#7

தெரு நாய்களுக்கு 5 நாட்கள் குடிப்பதற்கு பால் கொடுங்கள். இது கண்ணுக்கு தெரியாத அச்சத்தையும், கவலையையும் அகற்ற உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These 7 Vaastu Steps Reduce your Bad Karma

These vaastu steps reduce your bad karma. Read on to know more...
Story first published: Tuesday, December 19, 2017, 14:34 [IST]