இந்த 2 வீரர்கள் மட்டும் ஏன் மகாபாரத போரில் கலந்து கொள்ளவில்லை என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை இயற்றியவர் வியாசர் ஆவார். மகாபாரதத்தில் நிறைய கிளைகள் மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் உள்ளன. பலருக்கும் இந்த காவியத்தைப் படிக்க விருப்பம் இருக்கும். ஆனால் நேரமின்மையால் பலருக்கும் இதை முழுமையாக படிக்க முடிவதில்லை. இருப்பினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைப் படிப்போர் பலர்.

These 2 Great Warriors Did Not Participate In The War Of Mahabharata

பலருக்கு இந்த காவியத்தைப் பற்றி மேலோட்டமாகத் தான் தெரியும். அதனால் இந்த இதிகாசத்தைப் பற்றி பல விஷயங்கள் தெரியாமல் இருக்கும். அதில் ஒன்று, இந்த மாபெரும் மகாபாரத போரில் 2 சிறந்த வீரர்கள் கலந்து கொள்ளவில்லை. இங்கு அந்த இரண்டு வீரர்கள் யார் எனவும், ஏன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலராமன்

பலராமன்

கிருஷ்ணனின் அண்ணன் தான் பலராமன். இவர் மிகவும் பலசாலி. தண்டாயுதத்தை சிறப்பாக கையாள்பவர். இவர் ஒரு நேர்மையான மனிதர். இவரும் மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இருப்பவர். இத்தகையவர் மகாபாரத போரில் கலந்து கொள்ளவில்லை. ஏன் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பலராமன் யாருடைய பக்கம்?

பலராமன் யாருடைய பக்கம்?

நேர்மையான மனிதரான பலராமன், அஸ்தினாபுரத்தின் மன்னனான திருதராஷ்டிரனுக்கு அடுத்தபடியாக, அவரது மகனான துரியோதனன் தான் வர வேண்டும் என்று நம்புகிறார். அதே சமயம் கௌரவர்களின் தீய செயல்களை எதிர்க்கவும் செய்கிறார். பலராமனுக்கு பாண்டவர்களை பிடிக்காததற்கு அவர்களது சூதாட்டம் தான் காரணம்.

பலராமன் அர்ஜுனனை வெறுப்பது ஏன்?

பலராமன் அர்ஜுனனை வெறுப்பது ஏன்?

அர்ஜுனன் பலராமனின் தங்கையான சுபத்திரையை காதலித்து ஓடி போய் திருமணம் செய்து கொண்டதால், பலராமனுக்கு அர்ஜுனனைப் பிடிக்காது. இதுவும் பாண்டவர்களை பலராமன் ஆதரிக்காமல் இருப்பதற்கு ஓர் காரணமாகும்.

ஆதிசேஷன் வடிவம்

ஆதிசேஷன் வடிவம்

பலராமன் விஷ்ணு படுத்திருக்கும் ஆதிசேஷன் அவதாரம் என்பதால், பலராமன் கிருஷ்ணனை எதிர்த்துப் போராட விரும்பாமல், போர் காலத்தில், பலராமன் புனித யாத்திரை செல்ல முடிவு எடுத்து சென்றார்.

தண்டாயுத சண்டை

தண்டாயுத சண்டை

பீமனுக்கும், துரியோதனனுக்கும் பலராமன் தான் குரு ஆகும். மகாபார போர் முடிவின் போது, துரியோதனைத் தவிர கௌரவர்கள் அனைவரும் இறந்துவிட்ட நிலையில், பலராமன் தோன்றி, பீமனுக்கும், துரியோதனுக்கும் இடையே நடந்த தண்டாயுத சண்டையைக் கண்டார்.

Image Courtesy

ருக்மி

ருக்மி

கிருஷ்ணனின் மனைவி ருக்மணியின் சகோதரன் தான் ருக்மி. இவரும் மிகவும் சிறப்பான வீரர். மகாபாரத போரில் இவரும் பங்கு கொள்ளவில்லை. இருப்பினும் பாண்டவர்களும், கௌரவர்களும், இவரது தற்பெருமை நடத்தையால் நிராகரித்துவிட்டனர். இதன் காரணமாகவே ருக்மி மகாபாரத போரில் கலந்து கொள்ளவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These 2 Great Warriors Did Not Participate In The War Of Mahabharata

Do you know these 2 great warriors did not participate in the war of mahabharata? Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter