Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
இந்த 14 பழக்கங்கள் உங்களுக்கு புகழ், வெற்றி, செல்வத்தை வாரி வழங்கும்!
புகழ், வெற்றி, செல்வத்தை வாரி வழங்கும் 14 பழக்கங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
நமது பழக்கவழக்கங்கள் தான் நம்மை இந்த சமூகத்தில் எப்படிப்பட்டவர் என நிலைப்படுத்துகிறது. உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சூழல், சம்பவங்கள், நிகழ்வுகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதில் நேர்மறை பலன் அடைய உதவும்.
உதாரணமாக என்றோ நீங்கள் ஒருவருக்கு செய்த உதவி, நீங்கள் கஷ்டத்தில் வாடும் போது ஒரு பலனளித்து செல்லும். அப்படி, உங்கள் வாழ்வில் புகழ், வெற்றி செல்வதை அடைய உதவும் 14 பழக்கங்கள் பற்றி இங்கு காணலாம்...

ஆசீர்வாதம்!
தினமும் பெற்றோர், பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெறுவது. பெரியவர்களை அவமரியாதை செய்யாதிருப்பது.

ஆதிசக்தி!
நமது புராணங்களும், இதிகாசங்களும் பெண் என்பவள் தான் ஆதி சக்தி என குறிப்பிட்டிருக்கிறது. எனவே, பெண்களை மதிக்க வேண்டும். முக்கியமாக தாய், தாரம்.

உதவி!
உங்களால் முடிந்த வரை இயலாதோருக்கு உதவுங்கள். பணமாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. உணவாக இருக்கலாம், சாலை கடக்க வைப்பது போன்ற சிறு உதவியாக கூட இருக்கலாம். முடிந்த வரை உதவுங்கள்.

விலங்குகள்!
பசு, பறவை, நாய் என விலங்குகளுக்கும் உணவளித்து வாருங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ.

கைகளை பாருங்கள்!
காலை எழுந்தவுடன் இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து, உள்ளங்கை முகத்தில் படும்வண்ணம் மூன்று முறை செய்யுங்கள்.

தேன்!
காலை எழுந்ததும் வாயை கொப்பளித்து விட்டு, தேன் சுவையுங்கள். பிறகு குளிக்க செல்லுங்கள். சூரியனை தினமும் காலை வணங்க மறக்க வேண்டாம்.

செவ்வாய்!
செவ்வாய்க்கிழமைகளில் மண் பாண்டத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் ஊற்றி அதை வீட்டிற்கு வெளிய ஒதுக்குப்புறத்தில் வைத்துவிடுங்கள்.

உணவு பகிர்வு!
அமர்ந்து உணவுண்ணும் முன்பு, விலங்குகளுக்கு, பறவைகளுக்கு முடிந்த அளவு உணவு பகிர மறக்க வேண்டாம்.

அரசமரம்!
ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்கள் அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்ற மறக்க வேண்டாம்.

கருப்பு கயிறு!
வலது கையில் கருப்பு கயிர் கட்டுங்கள்.

செப்பு பாத்திரத்தில் நீர்!
இரவு தூங்கும் முன்னர் செப்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தங்கம் அல்லது வெள்ளை நாணயம் போட்டு வைக்கவும். மறுநாள் காலை எழுந்ததும் இதை குடியுங்கள்.

சுத்தம்!
வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ரூ. 21!
எங்கேனும் ஒரு இடத்தில் ரூ. 21 முடித்து வையுங்கள். நீங்கள் தொழில் அல்லது முக்கியமான வேலையாக வெளியே செல்லும் போது இத பணத்தை முடியாதவர்களுக்கு உதவியாக கொடுத்து செல்லுங்கள்.

துளசி!
ஞாயிறுகள் தவிர்த்து மற்ற நாட்கள் தினமும் காலை வீட்டை விட்டு வெளியேறும் போது துளசி இலை சாப்பிடாமல் செல்ல வேண்டாம்.



Click it and Unblock the Notifications