Latest Updates
-
நவம்பர் 09, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும் - இல்லனா கஷ்டப்பட வேண்டியிருக்கும் -
Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை! -
Diwali 2026: தீபாவளி பட்டாசு தீப்பொறி சருமத்தில் பட்டால் என்ன செய்வது? மருத்துவர் கூறும் முதலுதவி வழிகள்! -
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 08, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா? -
வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
சுல்தான், இந்த காளையின் விந்து மட்டும் ரூ.1 கோடி! உலகே வியக்கும் அசாத்தியா காளை!
சுல்தானின் விந்து மூலம் மட்டும் வருடம் ஒரு கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...
காளை மாடு வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும், அது ஒரு குழந்தை மாதிரி என்று. உலக அளவில் இந்திய காளைகளுக்கு தனி மவுசு இருக்க தான் செய்கிறது.
அதற்கு காரணம் இந்திய காளைகள் மிகவும் ஆரோக்கியமானவை. இதன் மூலம் பசுக்கள் மற்றும் கன்றுக் குட்டிகள், பசுவின் மூலம் கிடைக்கும் பால் என அனைத்தும் ஆரோக்கியமாக இருந்து வருகிறது.

Image Credit: Barcroft.Tv
இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தனக்கென ஒரு தனி அடையாளம் கொண்டு வாழ்ந்து வருகிறது ஒரு காளை மாடு. அது தான் சுல்தான்.
ஒரு சூப்பர் ஹீரோவிற்கு தரும் அளவிற்கு ஒரு இன்ட்ரோ தர வேண்டி இருக்கிறது சுல்தானிற்கு. அந்தளவு மதிப்பும், சிறப்பும் கொண்டவன் சுல்தான்...

சுல்தான்!
சுல்தான், இந்த காளையின் பெயர்! இந்தியாவின் மிகவும் மதிப்புடைய காளையாக திகழ்ந்து வருகிறான் இந்த சுல்தான். உலகிலேயே தனித்தன்மை வாய்ந்த காளையாக வாழ்ந்து வருகிறது இந்த சுல்தான் காளை. மிக சிறிய வயதிலேயே சுல்தான் மிக உயரமாகவும், பெரிதாகவும் வளர்ந்துவிட்டான் என்கிறார் சுல்தானை வளர்த்து வரும் நபர்.
All Image Credit: Youtube / Barcroft Animal

அளவுகள்!
சுல்தானின் உடல் எடை ஒன்றரை டன், அதாவது 1500 கிலோ. ஏறத்தாழ சுல்தானின் உயரம் ஆறு அடி (5''11). சுல்தானின் நீளம் மட்டும் 14 அடி ஆகும். இதெல்லாம் தான் சுல்தானை கம்பீரமாக நடைப்போட வைக்கிறது. இதற்கே வியந்தால் எப்படி , இன்னும் நிறைய இருக்கிறது சுல்தான் பற்றி அறிந்துக் கொள்ள.

மதிப்பு!
சில்தானின் தற்போதைய மதிப்பு 210 மில்லியன் (21 கோடி). சுல்தான் இதுவரை கலந்து கொண்டதில் 6,7 போட்டிகளில் முதல் பரிசு வென்று அசத்தியுள்ளான்.

விந்து!
பரிசுகள் மட்டுமல்ல, சுல்தானின் விந்தும் மிகவும் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. சுல்தானின் விந்தை ஒரு டோஸ்-க்கு ரூ. 300 என விற்கிறார்கள். இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் இருந்து ஹரியான வந்து சுல்தானின் விந்து வாங்கி செல்கிறார்கள்.
ஒரு வருடத்திற்கு சுல்தானின் விந்து மூலம் மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார்கள், சுல்தானை வளர்த்து வருபவர்கள்.

முர்ரா இனம்!
சுல்தான் முர்ரா இனத்தை சேர்ந்த காளை வகை. மற்றும் மிகவும் ஆரோக்கியமானவை. சுல்தான் மட்டுமல்ல, சுல்தானின் பிள்ளைகளும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
தினமுன் சுல்தானை ஐந்து கிலோ மீட்டர் நடத்தி அழைத்து செல்கிறார்கள். தினமும் இரண்டு முறை குளிக்க வைக்கிறார்கள். சுல்தானின் சருமம் மிகவும் ஷைனிங்காக இருக்கிறது.

எட்டு வயது!
கம்பீரம்மாக உலா வந்துக் கொண்டிருக்கும் இந்த சுல்தானின் வயது எட்டு தான். உலகை வியக்க வைக்கும் சுல்தான் விஸ்கி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறான். தினமும் மாலை சுல்தானுக்கு விஸ்கி தருகிறார்கள். அதை சுல்தான் விரும்பி குடிக்கிறான்.
இந்தியாவிலேயே சுல்தான் ஒரு தனி வகையில் சிறந்து விளங்குகிறான்.
வீடியோ!
இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தனக்கென ஒரு தனி அடையாளம் கொண்டு வாழ்ந்து வரும் சுல்தானின் வீடியோ!



Click it and Unblock the Notifications
