Latest Updates
-
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும் -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்! -
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சாபத்தில் இருந்து விடுபட விலங்குகளை திருமணம் செய்து கொண்டவர்கள்!
நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமான ஒன்றாக தான் இருக்கும். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாபத்தைப் போக்க விலங்குகளை திருமணம் செய்து கொணடனர்.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முட்டாள்தனமான பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி பின்பற்றப்பட்டு வரும் ஓர் பாரம்பரிய பழக்கம் தான் விலங்குகளுடனான திருமணம். புராணங்களில், மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது பொதுவான ஒன்றாக இருக்கலாம்.

அதில் அனுமனின் தாய் அஞ்சனை ஒரு வாணர ராஜாவை திருமணம் செய்து கொண்டது, ராமாயணத்தில் உள்ள கரடியான ஜாம்பவானின் மகள் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டது மற்றும் உலுப்பி என்னும் பாம்பு அர்ஜூனை திருமணம் செய்து கொள்ள விரும்பியது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆனால் நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமான ஒன்றாக தான் இருக்கும். அப்படி இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிலர் தங்களுக்குள்ள சாப விமோட்சனத்திற்காக விலங்குகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தெரு நாயை திருமணம் செய்த 18 வயது பெண்
ஜார்கண்ட்டில் உள்ள மங்கலி என்னும் 18 வயது பெண்ணிற்கு, ஒரு தெரு நாயுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். அந்த தெரு நாயின் பெயர் ஷெரு ஆகும். இந்த நாயை காரில் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர், அப்பெண்ணின் உறவினர்கள். இந்த பெண்ணின் திருமணத்திற்கு சுமார் 70 பேர் கலந்து கொண்டதோடு, மேள தாளங்களுடன், இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்தினர்.

திருமணத்திற்கான காரணம்
இந்த பெண்ணிற்கு இப்படி திருமணம் செய்து வைப்பதற்கு என்ன காரணம் என்று உள்ளூரில் உள்ள குருக்களைக் கேட்டதற்கு, மங்கலி துரதிர்ஷ்ட பெண்ணாக இருப்பதோடு, அது அவளது முழு குடும்பத்தையும், சமூகத்தையும் அழிவிற்குள்ளாக்கும் என பெற்றோர்கள் நினைத்தனர். இதிலிருந்து விடுபட ஒரு ஆணுடன் திருமணம் செய்வதற்கு முன், நாயுடன் திருமணம் செய்து வைத்ததாக கூறினர்.

மங்கலியின் கூற்று
இந்த திருமணத்திற்காக மங்கலி தனது பள்ளி படிப்பை நிறுத்தியதாகவும், நாயுடன் திருமணம் செய்து வைத்தது தனக்கு சந்தோஷத்தை வழங்கவில்லை என்றும், இந்த சடங்கை நிறைய பெண்கள் செய்ததால், தற்போது அவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வதாக தனது கிராமத்தில் உள்ளவர்கள் கூறியதால் செய்து கொண்டதாகவும் மங்கலி கூறினாள்.

33 வயது செல்வ குமார்
2007 ஆம் ஆண்டு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதுடைய செல்வ குமார் என்பவர் ஒரு பெண் நாயை திருமணம் செய்து கொண்டார். சிறு வயதில் இவர் இரண்டு நாய்கள் உறவில் ஈடுபடும் போது கல்லால் அடித்ததில், இரு நாய்களும் இறந்துவிட்டதால், அந்த நாயின் சாபத்தால், அவருக்கு பக்கவாதம் வந்து கைகளை அசைக்க முடியாமல் போனது. இந்த சாபத்தில் இருந்து விடுபட, ஒரு பெண் நாயை திருமணம் செய்துள்ளாராம்.

9 வயது சிறுமி
9 வயதுடைய சிறுமிக்கு, முதன் முதலில் மேல் தாடையில் பல் முளைத்தது. அதை அச்சிறுமியின் குடும்பத்தினர் துரதிர்ஷ்டமாக கருதி, அதிலிருந்து விடுபட ஒரு நாயுடன் திருமணம் செய்து வைத்தனராம்.

சுடனீஸ் மனிதன்
2006 ஆம் ஆண்டு சுடனீஸ் மனிதன் ஒருவன், ஒரு ஆட்டை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்ததோடு, அந்த ஆட்டின் உரிமையாளருக்கு 75 டாலர் வரதட்சணையாக கொடுத்துள்ளான். பின் அந்த ஆட்டுடன் உடலுறவு கொள்ளவும் முயற்சித்துள்ளான். என்ன ஒரு கேவலம்....



Click it and Unblock the Notifications











