TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
உலகைச் சுற்றி நடக்கும் விசித்திரமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
கிறுஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கலைகட்டத் துவங்கிவிட்டது. யேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை அவதரித்த நாளைத் தான் கொண்டாடுகிறார்கள் என்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கொண்டாட்டத்தை கையாளுகிறார்கள்.
இந்தியாவின் சிறப்பே அதன் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரம் தான். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடம் மக்கள் வாழ்கிறர்கள். அவர்களில் மிகவும் விசித்திரமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களைப் பற்றியும் அவர்களது கொண்டாட்ட முறையைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
பராண்டாஸ் :
க்யூபாவில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விழாவின் போதும் இது சடங்கு நடைபெறும். சுமார் 200 ஆண்டுகளாக இந்த வழக்கம் இருக்கிறது. நடு இரவில் கிறிஸ்துமஸ் மாஸ் நடைபெறும்.
அதற்கு பானைகளை தட்டியபடி சத்தம் எழுப்பியபடி இரவு முழுவதும் இளைஞர்கள் செல்வார்கள்.
லா பஃபீனா :
எபிஃபனி என்ற ஊரில் இப்படியான கொண்டாட்டம் நடக்கிறது. நம்மூரில் கிறிஸ்துமஸ் தாத்தா தானே பரிசுகளை கொடுக்க வருவார். ஆனால் அங்கு லா பஃபீனா என்பவர் விசித்திரமான வேசங்களை போட்டுக்கு கொண்டு வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு பரிசளிப்பார்.
ஸ்கேட்டிங் :
காரகஸ் மற்றும் வெனின்சுலா நாட்டில் இந்த வழக்கம் இருக்கிறது. கிறிஸ்துமஸ் அன்று அதிகாலை ஆயிரக்கணக்கான மக்கள் ரோலர் ஸ்கேட்டிங்கில் மாஸ் செய்கிறார்கள.
பவாரியன் மோர்டார்ஸ் :
கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அதன் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது பவாரியன் ஹைலேண்டர்ஸ் வானில் துப்பாக்கியை நோக்கிச் சுடுகிறார்கள். இந்த நிகழ்வின் போது அவர்களது சீருடை அணிந்திருப்பது கட்டாயம்.
கண்ணாடி ஊறுகாய் :
இது ஜெர்மனியில் நடைபெறுகிற ஒரு வழக்கம். இதனை புரளி என்றும் சிலர் வர்ணிக்கிறார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று சிறுவர்கள் தங்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஊறுகாயை கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படி கண்டுபிடித்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் கொடுக்கப்படுகிறது. இதற்கான காரணம் சரியாக தெரியாததால் பலரும் இது புரளி என்றே சொல்கிறார்கள்.
அம்மா அப்பா :
கிறிஸ்துமஸ் தினத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த கொண்டாட்டம் நடக்கிறது. யூகஸ்லோவியாவைச் சேர்ந்த சிறுவர்கள் இதனைச் செய்கிறார்கள்.
முதலில் அம்மாவை ஒரு சேரில் உட்கார வைத்து அவர்களுக்கு பிடித்த உணவைக் கொடுக்கிறார்கள்.
பின்னர் இந்த கொண்டாட்டத்திற்கென்றே தனிப் பாடல் ஒன்றினை பாடுகிறார்கள். இதில் மகிழ்ந்து அம்மா அவர்களுக்கு பரிசைத் தருகிறார்.
மறு நாள் இதே நிகழ்ச்சி அப்பாவிற்கு நடக்கிறது.
சிலந்தி வலை :
கிறிஸ்துமஸ் தினத்தன்று ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரம் வைப்பது வழக்கம். அதில் வண்ண விளக்குகள், அலங்காரப் பொருட்களை வைத்து அலங்காரம் செய்வார்கள்.
ஆனால் உக்ரைனில் மிகவும் விசித்திரமாக சிலந்தி வலைகளைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கிறார்கள்.
ஒரே வருடத்தில் திருமணம் :
கிறிஸ்துமஸ் அன்று மாலை கீரிஸ் ரிபப்ளிக்கை சேர்ந்த திருமணமாகாத பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்றபடி ஒரு ஷூவை தூக்கி வீசுகிறார்கள். அது சுழன்று சற்றுத் தள்ளி விழுகிறது.
அப்படி விழுகும் போது கால் பகுதி தங்களை நோக்கி இருந்தால் இன்னும் ஒரே வருடத்தில் திருமணமாகும் என்று நம்பப்படுகிறது.
அட இதெல்லாமா? :
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது அனுசரிக்கப்படுகிறது. இவர்கள் மிகவும் விசித்திரமாக என்ன செய்கிறார்கள் தெரியுமா? வீட்டிலிருக்கும் துடைப்படங்களை திருடிக்கொண்டு செல்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஒட்டி இதைத் திருட வருவார்கள் என்றே பலரும் வீட்டு வாசலில் துடைப்படங்களை வைக்கிறார்கள். இது நார்வேயில் நடக்கிறது.
மரத்திற்கு அலங்காரம் :
கேட்கவே கொஞ்சம் விசித்திரமாக இருக்கிறதல்லவா? இது கடலோனியாவில் . குழந்தைகள் தான் இதை அதிகமாக கடைபிடிக்கிறார்கள்.
வீட்டில் ஓரு மரத்துணை வாங்கி விதவிதமாக அலங்கரிக்கிறார்கள். சிலர் அதில் குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களை எல்லாம் வைத்து அலங்க்கரிக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகள் எல்லாம் அந்த மரத்துண்டை அடித்து தங்களுக்கான பரிசை பெறுகிறார்கள்
ஸ்ட்ரா டெவில்ஸ் :
பவாரியாக்களின் பாரம்பரியமாகவே இது கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமசை முன்னிட்டு மிகவும் பயமுறுத்தும் வகையில் தங்களை ஸ்ட்ரா டெவில்களாக அலங்கரித்து கொள்கிறார்கள்.
பின்னர் கூட்டமாக சேர்ந்து கிறிஸ்துமசை கொண்டாடுகிறார்கள்.
சீலிங் :
ஸ்லோவகியாவில் இப்படி கொண்டாடுகிறார்கள். இது பாரம்பரியமாக காலம்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் மேலே சீலிங்கில் உணவுப்பொருள், பரிசுப் பொருள் ஆகியவற்றை வைத்திருப்பார்கள்.
அதனை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நிறைய கண்டுபிடித்தால் அந்த வருடம் நிறைய அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஒரு ஸ்பூன் உணவாவது கண்டுபிடித்திட வேண்டும் என்பதை சம்பிரதாயமாக கடைபிடிக்கிறார்கள்.