21 நாட்கள் இந்த பொருட்களை படுக்கைக்கு அடியில் வைத்தால், வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்குமாம்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனை இருக்கும். இவற்றில் சில பிரச்சனைகளுக்கு நம்மால் எளிதில் தீர்வுகளைக் காண முடியும். ஆனால் நம்மால் தீர்வு காணவே முடியாத அளவில் சில பிரச்சனைகள் இருக்கும். இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு நம் சாஸ்திரங்களும், புராணங்களும் தீர்வளிக்கும்.

Placing These Things Under Your Bed For 21 Days Could Fix Any Trouble In Your Life

Image Courtesy

குறிப்பாக நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க வாஸ்து சாஸ்திரம் சில தீர்வுகளை வழங்கும்.

இக்கட்டுரையில் ஒருவரது சுய மரியாதை, மன உறுதி, கோபம், வீரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோபத்தைக் குறைக்க...

கோபத்தைக் குறைக்க...

கோபம் மிகவும் ஆபத்தானது. இந்த கோபத்தைக் குறைக்க இரவில் படுக்கும் போது கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு ஓரத்தில் காப்பர் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். மேலும் தலையணைக்கு அடியில் சிவப்பு சந்தனக்கட்டையை வைத்து தூங்குவதன் மூலமும் கோபம் தணியும்.

மன உறுதி மேம்பட...

மன உறுதி மேம்பட...

சிலருக்கு மன உறுதி சற்று குறைவாக இருக்கும். இத்தகைய பிரச்சனையைப் போக்க, படுக்கைக்கு அடியில் வெள்ளிப் பாத்திரத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். மேலும் வெள்ளி ஆபரணம் ஏதேனும் ஒன்றை எப்போதும் அணிந்தவாறு இருக்க வேண்டும். இதனால் உங்களது மன உறுதியில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

தைரியம் அதிகரிக்க...

தைரியம் அதிகரிக்க...

உங்களுக்கு எந்த ஒரு செயலையும் செய்ய தைரியம் இல்லையா? அப்படியெனில் தலையணைக்கு அடியில் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களை வைத்து தூங்குங்கள். வேண்டுமானால், வெண்கல பாத்திரத்தில் நீரை நிரப்பி கட்டிலுக்கு அடியில் வைத்தும் தூங்கலாம்.

அதிர்ஷ்டம் தேடி வர...

அதிர்ஷ்டம் தேடி வர...

இதுவரை உங்களுக்கு எதிலும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால், வெள்ளியால் ஆன மீனை தலையணைக்கு அடியில் வைத்தோ அல்லது நீர் நிரப்பிய வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தோ தூங்குங்கள்.

கண் திருஷ்டியில் இருந்து விடுபட...

கண் திருஷ்டியில் இருந்து விடுபட...

21 நாட்கள் இரவில் படுக்கும் போது இரும்பு பாத்திரத்தில் நீரை நிரப்பி, கட்டிலுக்கு அடியில் அல்லது படுக்கைக்கு அருகில் வைத்து தூங்குங்கள். அதோடு, நீல நிற கல்லை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள். இதனால் கண் திருஷ்டி விலகும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து செயலையும் தொடர்ந்து 21 நாட்கள் பின்பற்றினால், நிச்சயம் உங்களுள் ஒரு மாற்றத்தைக் காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Placing These Things Under Your Bed For 21 Days Could Fix Any Trouble In Your Life

Today, we are going to share with you certain knowledge from Vastu Shastra that helps you deal with problems in general like, low self-esteem, willpower, courage, anger, etc.
Story first published: Wednesday, January 25, 2017, 12:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter