வரலாற்று பின்னணி கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு!

Subscribe to Boldsky

நீங்கள் வரலாற்றை புத்தகங்களிலும், இணையங்களிலும் வாசித்திருப்பீர்கள். பல வியக்கவைக்கும் நிகழ்வுகள், பெரும் எண்ணிக்கையில் நடந்த போர்கள், போராட்டங்கள் என நமது கற்பனையை விஞ்சும் அளவிற்கு பல நிகழ்வுகள் நமது வரலாற்றில் நடந்துள்ளது.

அதில் நீங்கள் சிலவற்றை தவறவிட்டிருக்கலாம். அல்லது அறியாதிருக்கலாம். சிலவன எழுதப்படவில்லை எனிலும், படங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

எந்த ஒரு புதிய நிகழ்விற்கும் ஒரு தொடக்க புள்ளி தேவை. அப்படி தொடக்க புள்ளியாக இருந்த சில விஷயங்களும், வரலாற்றி புரட்டிப் போட்ட சில விஷயங்களும், சாதாரண கடந்த நிகழ்வுகளும் அடங்கிய ஒரு புகைப்பட தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1920 பீச் சீன்!

1920 பீச் சீன்!

இது என்ன ஏதோ டிரம் போல இருக்கிறது என ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! இது டிரம் போன்றது தான். இது ஏன் பீச்சில் பெண்கள் அணிந்துள்ளனர்? இது பெண்கள் அணியும் பாதுகாப்பு கருவி அல்ல. 1920களில் பீச் செல்லும் பெண்கள் தங்கள் உடைகளை பாதுகாப்பாக மாற்றிக் கொள்ள பயன்படுத்தப்பட்ட கருவி.

Image Courtesy:gettyimages

யாரிது?

யாரிது?

இவர் யார் என்று தெரிகிறதா? ஏன் இந்த பெண் இவரை இப்படி பற்களை கடித்துக் கொண்டு முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்? இவர் வேறு யாரும் இல்லை உலக மக்களை தனது நடிப்பால் வயிறு குலுங்க சிரிக்க வைத்த சார்லி சாப்ளின். 1944ல் சாப்ளின் அவரது மனைவியுடன் அமெரிக்காவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது.

Image Courtesy:pinimg

என்ன இடமிது?

என்ன இடமிது?

நிச்சயமாக 2000களுக்கு மேல் பிறந்த பலரால் இந்த இடம் எது என கணிக்க முடியாது. ஏனெனில், இப்போது இந்த இடம் உலகின் உச்சபட்ச கேளிக்கை தளமாக விளங்குகிறது. யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். இது தான் அன்றைய துபாய். இன்று விண்ணை எட்டும் கட்டிடங்கள் கொண்ட துபாய் அன்று எப்படி இருந்தது என பாருங்கள்...

Image Courtesy:pinimg

கருப்பு - வெள்ளை காதல்...

கருப்பு - வெள்ளை காதல்...

சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கருப்பு, வெள்ளையர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவி வந்தது. அதை உடைத்து, தங்கள் காதல் மூலம் முத்திரை பதித்தவர்கள் இந்த ஜோடி. இந்த ஆண் ஸ்வீடிஷ் நடிகர் டோலப் லுண்ட்கிரன், இந்த பெண் ஜமைக்கா பாடகி கிரேஸ் ஜோன்ஸ். இவர்கள் இருவரும் 1980களில் உறவில் இருந்தனர்.

Image Source

கவர்ச்சி நடன பெண்...

கவர்ச்சி நடன பெண்...

மதா ஹரி அல்லது மர்க்ரீத் என அழைக்கப்பட்ட இந்த பெரும் ஒரு பிரபல கவர்ச்சி நடன கலைஞர். மர்க்ரீத் எனும் இந்த பெண் ஜெர்மனியில் முதலாம் உலக போரின் போது கைது செய்யபட்டார். நடன வேலையை விட்டு, இவர் அந்த நாட்டில் உளவாளியாக இருந்ததன் காரணத்தால் இவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

இதில் என்ன ஸ்பெஷல்?

இதில் என்ன ஸ்பெஷல்?

இந்த படத்தில் என்ன ஸ்பெஷல், இந்த பின்னணியில் என்ன பெரிய வரலாறு இருக்க போகிறது என யோசிக்கிறீர்களா? இருக்கிறது! இந்த பெண்மணி தான் உலகின் முதல் டிரைவர். இந்த படம் 1900களில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

Image Source

இந்த பிரபலம் யார்?

இந்த பிரபலம் யார்?

இந்த படத்தில் இருக்கும் பிரபலத்தில் சிலர் உடனே கண்டுபிடித்திருக்கலாம். ஆம், நடுவில் இறகுகளான தொப்பி அணிந்திருக்கும் அவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அமெரிக்காவின் ஹோபி மலைவாழ் மக்களுடன் இவர் 1931ல் எடுத்துக் கொண்ட படம் இது.

Image Source

உயரமான மனிதர்!

உயரமான மனிதர்!

இவர் 1918ல் பிறந்தவர். இவரது பெயர் ராபர்ட் வாட்லோ. முதலாவது பிறந்தநாள் கொண்டாடும் போது இவரது உயரம் மூன்று அடி மூன்றரை அங்குலம். தொடர்ச்சியாக இவர் வளர்ந்து கொண்ட போனால். 1937ல் இவரது உயரம் எட்டடி, நான்கு அங்குலமாக இருந்தது. அப்போது இவர் உலகின் உயர்ந்த மனிதராக சாதனை படைத்தார்.

Image Source

அர்னால்ட்!

அர்னால்ட்!

முனிச் பகுதியில் வெற்றுடலுடன் உலா வரும் அர்னால்ட். மக்கள் மத்தியில் பாடி பில்டிங் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஜிம்மிற்கு செல்ல ஊக்குவிக்கவும் இப்படி ஓர் பிரமோஷன் நடந்திருக்கிறது. இந்த படம் 1967 நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட படமாகும்.

Image Courtesy:redditmedia

அதென்ன?

அதென்ன?

அதென்னமோ கார் மேல கருப்பா வெச்சுருக்காங்களே... அது தான் உலகின் முதல் மொபைல் ரேடியோ மற்றும் டெலிபோன். இது 1920களில் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

Image Courtesy:staticflickr

பிகினி!

பிகினி!

முதலில் இதை பிகினி என்றால் இன்றைய தலைமுறை நம்பவே நம்பாது, அல்ட்ரா தின் பிகினி எல்லாம் வந்துவிட்ட காலம் இது. இன்று பிகினி மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால், சில தசாப்தங்களுக்கு முன்பு இது மிகவும் கவர்ச்சியான ஒன்று. 1973ல் பிகினி உடையை நியூயார்க் நகரின் ஒரு பெண் மாடல் மோட்டார் வாகன நிகழ்ச்சியில் பிரமோஷன் செய்த போது.

Image Courtesy:redditmedia

டயானா!

டயானா!

பிரபலங்களின் மர்மமான மரணங்களில் இதுவும் ஒன்று. மக்களின் இளவரசியாக வாழ்ந்த காரணத்திற்கு இவருக்கு கிடைத்த பரிசு மரணம். இளவரசி டயானாவின் பிரபலமான புகைப்படம் இது. 1985ல் ரிசப்ஷனில் ஜான் ட்ரவோல்டாவுடன் வெள்ளை மாளிகையில் நடனமாடும் டயானாவின் புகைப்படம்.

Image Courtesy:twimg

புலி குட்டிகள்!

புலி குட்டிகள்!

இந்த படம் 1937ல் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். விலங்குகள் காட்சி சாலையின் பாதுகாவலர் புதியதாக பிறந்த புலி குட்டிகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். அந்த குட்டிகளும், தங்களுக்கு உணவளிக்கும் நபருடன் வேடிக்கையாக விளையாடி மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

Image Source

பட்டாதாரி!

பட்டாதாரி!

கேம்ப்ரிட்ஜ் பல்கலக்கழகத்தின் பட்டதாரிகள். கோட் சூட் உடையில் படித்த மிடுக்குடன் நடந்து வரும் இரண்டு இளம் பட்டதாரிகள்.

Image Courtesy:lageose.files.wordpress

அந்த பார்வை...

அந்த பார்வை...

குழந்தைகளின் அந்த பார்வையின் மூலம் பிரபலமடைந்த புகைப்படம் இது. தென்னாப்பிரிக்காவில் தங்கள் செல்லபிராணியை குளிப்பாட்டும் போது குழந்தைகள் வேடிக்கை பார்க்கும் படம்.

Image Courtesy:pinimg

முஃப்பின்

முஃப்பின்

முஃப்பின் எனப்படும் ஒருவகை அப்பம் உணவு. 1910களில் வீதிகளில் தலை மீது ஒரு பலகையில் முஃப்பின் அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருக்கும் நபர்.

Image Courtesy:pinimg

டாட்டூ!

டாட்டூ!

1920களில் டாட்டூ பார்லர்களில் டாட்டூ குத்திக் கொள்ளும் பெண்களின் புகைப்படம்.

Image Courtesy:art-sheep

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Photos That You Should See At Least Once In Your Life!

    Photos That You Should See At Least Once In Your Life!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more